Saturday, September 17, 2011

திருப் புகழின் பெருமை

பதினைந்தாவது நூற்றாண்டில் முருக கடவுளை நேருக்கு நேராகத் தரிசித்தவர் அருணகிரிநாத சுவாமிகள். இவர் எழுதிய திருப்புகழ் பாடல்கள் மந்திர மயமானவை என்று காஞ்சி மகா சுவாமிகள், தணிகைமணி செங்கல்வராயபிள்ளை, வள்ளிமலை சுவாமிகள், திருப்புகழ் மணி T. M. கிருஷ்ணசுவாமி ஐயர், திருமுருக கிருபானந்தவாரியார், முதலான மகான்கள் எல்லாம் கூறி இருக்கிறார்கள். அப்படிப் பட்ட திருப்புகழ் பாடல்களின் சக்தி அளவில்லாதது. அவற்றில் முக்கியமான திருப்புகழ் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேற்கூறிய மகான்கள் எல்லாம் பல முறை இப்பாடலைச் சொல்லி இதன் பெருமையை பறைச்சாற்றி இருக்கிறார்கள்.    
 இதன் பெருமையைச் சொல்லி உபதேசித்தவர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.
திருமணம் ஆகாதவர்கள் இப்பாடலை நாற்பத்து எட்டு நாட்கள் தினந்தோறும் காலையிலோ அல்லது மாலையிலோ ஆறுமுறை பாராயணம் செய்தால், எந்த விதமான தோஷமாக இருந்தாலும் சரி, தடைகளாக இருந்தாலும் சரி அவைகள் விலகி திருமணம் நடைபெறும் என்பது உறுதி. திருமணம் ஆனவர்கள் இப்பாடலை பாராயணம் செய்து வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும் என்பது உறுதி.
பாராயணம் செய்யுங்கள் பலனை அடையுங்கள். முருகன் அருள், முன் நிற்கட்டும்.

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து     வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம்     வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப     மயில்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து     குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த     மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த     அதிதீரா

அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல்     களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த     பெருமாளே.

No comments:

Post a Comment