Saturday, December 10, 2011

குரைக்கும் உலகம் என்ன செய்யும்? - கபீர் தாசர்

* நதியானது கடலில் சங்கமமாவது போல் என் மனம் இறைவனாகிய உன்னிடம் சங்கமமாகிறது.
* ஞானத்தின் யானை மேல் ஏறித் தியானம் என்ற ஆசனம் போட்டு அமர்ந்துகொள். நாய் போன்றது உலகம். நன்றாகக் குரைக்கட்டும். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
* இறைவா! உன்னிடம் நான் போகம், முக்தி ஒன்றையும் கேட்கமாட்டேன். எனக்கு பக்தியை தானமாக அருள்வாயாக. வேறு ஒருவரிடமும் இரத்தல் செய்ய மாட்டேன். உன்னைத்தான் இரப்பேன்.
* நீ ஜபமாலை உருட்டலாம், நெற்றியில் திருநீறு பூசலாம், நீண்ட ஜடை தரிக்கலாம். ஆனால், உள்ளத்தில் கொடிய விஷமிருந்தால் எப்படி கடவுளைக் காண முடியும்?
* பூஜை, சேவை, நியமம், விரதம் எல்லாம் வெறும் விளையாட்டுக்களே. ஆண்டவனை உள்ளத்தால் தொட வேண்டும். கடவுள் திருநாமத்தை நெஞ்சில் ஒரு வினாடி மனம் கசிந்து நினைத்தாலும் போதும்.
* மீனுக்கு நீரிலும், உலோபிக்குக் காசிலும், தாய்க்கு மகளிடமும், பக்தனுக்கு ஆண்டவனிடமும் பற்று அதிகம்.
* உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்து கொள்வார்கள். ஒருவரும் மனதை அவ்விதம் செய்து கொள்வதில்லை.
* கடவுள் ஒருவரே; எல்லா ஜீவராசிகளும் அவருடைய சொரூபமே. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ''அவர் என் கடவுள், இவர் அவன் கடவுள், உன் கடவுள் வேறு,'' என்ற பிரிவினை எல்லாம் ஏன்?
* காலம் தவறாது நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பதுமே முக்தியளிக்கும் என்று நினைத்தால் மீன்களுக்கும், விவசாயக்
கருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.