Thursday, February 26, 2015

ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் -இந்திய தத்துவ ஞானி ஓஷோ

தியானத்தில் இறங்க விரும்புபவர்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை பூரணமாக தொடர்ந்து நினைத்து அதைதியானமாக செய்யலாம் என்று சொல்லியிருந்தோம்இந்தியாவில் பிறப்பெடுத்த தத்துவஞானியான ஓஷோஅதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார்மனதை தன்போக்கில் இலகுவாக விட்டுவிட்டு இயற்கையாகவேஎண்ணங்களை கடந்து போவது தான் தியானம் என்கிறார்குறிப்பாக பல காலம் தவம் இருந்து ஒரு யோகிஅடையும் உணர்வை சாதாரணமாக அன்றாடம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் ஒரு நபர் எதேச்சையாகஅடையக்கூடும் என்கிறார்அவர் சொல்வதை சற்று விரிவாகவே இங்கு பார்க்கலாம்.
"மனம் அற்ற நிலையே யோகம் எனப்படும்எந்த விஷய ஞானமும் இல்லாமல்பூரண உணர்வுநிலையேயோகம் ஆகும்ஓர் கண்ணாடியில் படிந்து கிடக்கும் தூசு போல மனதில் விஷய ஞானங்கள் படிந்துகிடக்கின்றனஅவைகள் பகல் பூராவும்ஏன் இரவிலும் கூடஉங்களின் கனவு வாயிலாக உங்களை சுற்றிவருகின்றனஉங்கள் மனம் எதைப்பற்றியாவது நினைத்துக் கொண்டும்எதைப்பற்றியாவது கவலையும்,துக்கமும் அடைந்து கொண்டே தான் இருக்கிறதுஅடுத்த நாளைப்பற்றி இன்றைக்கே அது தன்னைதயார்படுத்திக் கொள்கிறதுஇது தன் இயல்பாகசுயநினைவின்றிசதா அடிமனத்தில் இயங்கிக் கொண்டு தான்இருக்கிறதுஇது தான் யோகம் அற்ற நிலையின் இயக்கமாகும்.
இதன் எதிர்ச்செயல்பாடே யோகநிலையாகும்அதாவதுஎப்போது எண்ணக்குறுக்கீடுகள் நின்றுவிடுகின்றனவோஇறந்த கால எண்ணங்கள் செயலற்றுப் போகின்றனவோஎவ்வித ஆசையின் தூண்டுதல்இல்லாமல்மனம் சஞ்சலமின்றி நிசப்தமாக ஒடுங்கி நிற்கின்றதோஅந்த நிலையே யோகமாகும்அந்த அமைதிநிலையில் தான் " உண்மைவெளிப்படும்வேறு எந்த நிலையிலும் அது தன்னைக்காட்டிக் கொள்ளாதுஆகவே,யோகம் என்பது மனம் அற்ற நிலையே.
நீங்கள் மனதுடன் யோகத்தை அடையவே முடியாதுஏனெனில் மனம் ஒரு போதும் தானாக நின்று விடாது.அதன் செயல் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்நீங்கள் மனதுடன் போராடாமல்அதே சமயம் அதைசிறிது ஒதுக்கி வைத்து அது கொடுக்கும் விஷயத்துடன் உங்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல்மனம்இயங்குவதை ஒரு சாட்சியாக நின்று பார்த்து " நான்மனம் இல்லைஎன்ற உணர்வுடன் செயல்படுங்கள்.
நான்மனம் இல்லைஎன்ற விழிப்புணர்வு நிலையே யோகமாகும்இந்த விழிப்புணர்வு உங்களிடத்தில்ஆழமாகஆழமாக பதிய பதிய அமைதியான எண்ணமற்ற நிலைவெறும் வெட்டவெளியாக படிகம் போன்றசுத்தமாக சில கணங்கள் தோன்றலாம்அந்த இயக்கமற்ற நிலையில் நீங்கள் உண்மையிலேயே "யார்என்றுஅறிந்து கொள்வீர்கள்அப்பொழுது உங்களுக்கு இந்த உலக இயக்க ரகசியங்கள் அனைத்தும் புரியும்இப்படி ஒருகாலததில் நீங்கள் பூர்ண யோகத்தில் எப்போதும் இருந்து விடுவீர்கள்அந்த காலமே இயற்கையால்ஆசிர்வதிக்கப்பட்ட காலமாகும்.
ஒன்றையே நினைப்பது என்பது தியானமோ அல்லது யோகமோ அல்லஒன்றையே நினைப்பதில் நீங்களேவலிய ஒரு முயற்சியை மேற்கொள்கிறீர்கள்ஏதோ ஒரு பொருளைச்சுற்றி மனத்தை நிலைப்படுத்தவிரும்புகிறீர்கள்இந்த முயற்சியில் இரு வேறு நிலைகள் ஏற்படுகின்றனஉண்மையான தியானத்தில் உங்கள்உள்ளேயும்வெளியேயும் உள்ளவைகள் எந்த வித தடங்கல் இன்றிவெளியே செல்ல முடியும்அதே போலவெளியே உள்ளவைகள் அனைத்தும் உங்கள் உள்ளே செல்ல முடியும்இரண்டுக்கும் எந்த வரம்போஎந்தவேலியோ கிடையாதுஉள்ளே உள்ளது இயங்குகிறதுஇரண்டு மாறுபட்ட விழிப்புணர்வு கிடையாதுஇது தான்உண்மையான தியானத்தின் நிலையாகும்.
ஆனால் ஒன்றையே நினைத்தல் என்பது இரு வேறான விழிப்புணர்வு ஆகும்அதனால் தான் ஒன்றையேநினைத்தால் களைப்பையே உண்டு பண்ணுகிறதுநீங்கள் எளிதில் களைப்படைவதற்குஒன்றையே நினைத்துக்கொண்டிருத்தலே காரணமாகிறதுஉங்களால் இருபத்து நான்குமணி நேரமும் ஒன்றையே நினைத்துக்கொண்டிருந்தல் என்பது முடியாத காரியம்ஒன்றையே நினைத்தல் என்பது இயற்கையான செயல் அல்ல.உண்மையான தியானம் என்பது உங்களுக்கு களைப்பையே உண்டாக்காதுநாள் பூராவும்ஏன் ஆண்டுமுழுவதும் தியானம் தொடர்ந்து செயல்படுவதாகும்அது பேரின்பமாக மாற முடியும்அது ஒரு குறிக்கோள்இல்லாத பரிபூரண ஓய்வாகும்.
ஒன்றையே நினைப்பதன் மூலம் உங்கள் மனம் ஒரு முடிவுக்குஒரு குறிக்கோளுக்கு முன்பே வந்து அதற்காகசெயல்படுகிறதுஆகவே நீங்கள் அதற்காக ஏதோ செயல்படுகிறீர்கள்உண்மையான தியான முறையில் எந்தகுறிக்கோளும் தொக்கி நிற்கவில்லைநீங்கள் குறிப்பாக எதுவும் அதற்காக செய்ய வேண்டியது இல்லைநீங்கள்"நீங்களாகவேஇருக்கிறீர்கள்மனதாலும்உடலாலும் எதையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்துதங்கள்உள்மனம் சுரக்கும் ஊற்றையும்தானே முளைக்கும் அந்த அரிய பூக்களையும் உணர்ந்தார்கள்நன்றாகஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் "தானாகவே செயல்படுதல்என்பதைஅந்த ஊற்று தானாகவே சுரக்கிறதுஅந்தபூச்செடிகள் தானாகவே மேல் நோக்கி வளர்கின்றன.

இந்த நிலைஅதாவது எப்பொழுது நீங்கள் வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதன் போக்கிலேயேவிட்டு விடுகிறீர்களோஎப்பொழுது உங்கள் விருப்பப்படி அமைய அதற்கு கட்டளை எதும் பிறப்பிக்கமால்இருக்கிறீர்களோஅதே போல் அதை உங்கள் நோக்கப்படி நடத்த ஆசைப்படாமல் இருக்கிறீர்களோஉங்கள்மூளைத்திறனைக்கொண்டு அதை மாற்றி போதனைகளை அதன் மேல் திணிக்கமால் இருக்கிறீர்களோஅந்தஇயற்கையான கோட்பாடுகளற்றஅந்த நேர வாழ்க்கைத்தன்மையை தியானம் என்று அழைக்கலாம்.
யோகம் என்பது "இப்பொழுதுஇங்கேஇதோ நிகழ்வது தான். " அது ஒரு முழுமையான நிகழ்கால நிகழ்ச்சிநீதியானம் என்று ஒன்றும் செய்ய வேண்டியதில்லைஆனால் தியானத்தில் எப்பொழுதும் இருக்கலாம்ஆனால்ஒன்றையே நினைத்துக் கொண்டு உன்னால் எப்பொழுதும் இருக்க முடியாதுஒன்றையே நினைத்துக்கொண்டிருப்பது மனித இயல்பு தான்ஆனால் யோகம் என்பது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதுபுனிதத்தன்மைஉடையதுஅதற்கும்ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பதற்கும் அவ்வளவாக தொடர்பு கிடையாது.தியானம் என்பது எதையும் வலுக்கட்டாயமாக உங்கள் மேல் திணித்துக் கொள்வதல்ல".
தியானம் அல்லது யோகம் என்பது விளையாட்டான விடயம் அல்லசில சமயம் அவை உங்களுக்கு ஆபத்தைஉண்டு பண்ணும்ஏனெனில்தியானத்தால் நீங்கள் உங்கள் மனதின் ஆழமான இடத்தில் விளையாடஆரம்பிக்கிறீர்கள்உங்களை அறியாமலே செய்யும் தவறு ஒரு பெரிய ஆபத்தை உண்டு பண்ணிவிடும்ஆகவே,இதில் எதையும் புதிதாக கண்டு பிடிக்க முயலாதீர்கள்உங்களால் முழு ஈடுபாட்டுடன் கடைபிடிக்க முடிகிறஇரண்டு வகை தியான முறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்உங்களுக்கு ஒரு தியான முறைமகிழ்ச்சியை கொடுத்தால்அதில் ஆழ்ந்து முழு ஈடுபாட்டுடன் செல்லுங்கள்ஆனால் அதை ஒரு பழக்கமாக்கி,மனதை அடிமையாக்கி விடாதீர்கள்ஏனெனில் ஒரு நாள் அந்த முறையை விட்டு விடும்படி நேரிடும்நீங்கள்உங்கள் மனதை அதனுடன் நெருங்கி சம்பந்தப்படுத்தி விட்டால் அது போதை மருந்து போல் வேலை செய்து,உங்கள் மனதை அடிமைப்படுத்தி விடும்பிறகு அந்த முறையை உங்கள் இஷ்டப்படி விடுவது கஷ்டம்எனவேஇரண்டு முறைகளை வைத்துக் கொள்ளுங்கள்ஒன்றில் ஈடுபடுங்கள்அதில் முழுமையாக செல்லுங்கள்பிறகுஅதை கைவிடுங்கள்மற்றொரு முறையை பின்பற்றுங்கள்இப்படி மாறி மாறி தொடருங்கள்.ஆத்மீகப்பயணத்தில் ஒரே தியான முறையை மட்டும் கடைப்பிடித்து கடைசி எல்லையை அடைவது என்பதுமிக மிக அரிது.
மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது தியானம் அல்லமுழுமையான விழிப்புணர்வு தான் தியானம்உங்கள்உடல் அசைந்து கொண்டு இருக்கும் போதுஅதாவது ஓடும் பொழுதுகுதிக்கும் பொழுதுஉங்களுடையஎச்சரிக்கை உணர்வு இயல்பாகவும்அதிகமாகவும் இருக்கும்ஆனால் ஓய்வாக இருக்கும் பொழுது எச்சரிக்கைஉணர்வு மிகவும் குறைந்து உங்களை தூக்கத்திற்கு அழைத்துச் செல்லும்நீங்கள் படுக்கையில் இருக்கும்பொழுது எச்சரிக்கை உணர்வு மிகமிக குறைவாக இருக்கும்ஆனால் உடல்மனம்உயிர் மூன்றும் ஒன்றாகஎந்த நிலையிலும் ஒன்றாக செயல்படும்படி கற்றுக் கொள்ளுங்கள்அதற்கு முதலில் ஒரு வழியைகண்டுபிடியுங்கள்ஓடும் பயிற்சி செய்பவர்கள்இந்த மூன்றும் ஒன்றாக இயங்குவதை உணர்ந்திருக்கிறார்கள்.ஓடுவது ஒரு யோகம் என்று நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்ஆனால் பல பேர் யோகத்தின் அனுபவத்தை,ஓடும் போது அடைந்திருக்கிறார்கள்அவர்களுக்கு இது அவர்களை அறியாமலே கிடைக்கிறதுகடவுள்தன்மையை அடைய ஓடுதல் கூட ஒரு யோகம் தான்.
அதிகாலை வேளையில் காற்று மென்மையாகவும்தெளிவாகவும் இருக்கும் பொழுதுஇந்த உலகம்தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு வரும் பொழுதுநீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்அப்பொழுது உங்கள்உடல் மிக அழகாக அசைந்து கொண்டு செல்கிறதுஅந்த புதுமை நிறைந்த இளங்காற்றும்இருட்டிலிருந்துவெளிச்சத்துக்கு இந்த உலகம் வரும் நேரமும்பறவைகள் பாட்டிசைக்கும் அற்புதமான வேளையும்உங்களைஉயிர்த்துடிப்புள்ளதாக ஆக்கும்அப்பொழுதுஒரு கட்டத்தில் ஓடுபவர் முற்றிலும் மறைந்து "ஓடுதல்மட்டும்இயங்கிக் கொண்டிருக்கும்அங்கே மனம்உடல்உயிர் என்ற மூன்றும் ஒன்றாகி இயங்கிக் கொண்டிருக்கும்.திடீரென்று உங்கள் உள்ளே ஒரும் பேரின்பம்அதிர்ச்சி அல்லது உச்சம் ஏற்படும்இந்த துரிய நிலைக்குஓடுபவர்கள் தற்செயலாக அவர்களே அறியாமல் வந்திருக்கிறார்கள்ஆனால் அந்த அனுபவம் தாங்கள்ஓடுவதால் வந்ததாக எண்ணி யோகநிலை உணர்வின் அனுபவத்தை தவறவிட்டிருக்கிறார்கள்ஆனால்அதைஉணர்வுபூர்வமாக எதிர்கொண்டால்அந்த வேளை மிக அற்புதமாகவும்உங்கள் உடல் மிக ஆரோக்கியமாகவும்,ஏன் இந்த உலகம் மிகமிக அழகானதாகவும் தோன்றும்.
நான் அறிந்தவரை மற்றவர்களை விட ஓடும்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்ற எவரைக்காட்டிலும் மிக எளிதாகயோக உச்சத்திற்கு வர முடியும்".

ஓஷோவின் தியானமுறைகள்