Friday, August 17, 2012

ஓஷோவின் முத்துக்கள்


அழகு
அழகு என்பது அன்பின் உருவாக்கம்தான். அன்பிற்குரியவர் மிக அழகாக தோன்றுவார், அது அன்பு கொண்ட கண் உருவாக்குவது. சாதாரணமாக மக்கள் அடுத்தவர் மிக அழகாக தோன்றியதால் தாங்கள் அன்பில் விழுந்து விட்டதாக நினைக்கின்றனர். உண்மை இதற்கு நேர் எதிரானது. அவர்கள் காதலில் விழுந்து விட்டதால்தான் அடுத்தவர் மிக அழகாக தோன்றுகின்றனர். அன்புதான் அடிப்படை.
அழகு உடல் சார்ந்தது மட்டுமல்ல, அடிப்படையில் அது ஆன்மீக ரீதியானது.
உனது கண்ணாடியை சுத்தம் செய், உன்னைச் சுற்றி எவ்வளவு அழகு உள்ளது என்று பார்க்க முடியும்.
ஒரு படைப்பு செயல் இந்த உலகின் அழகை மேலும் வளப்படுத்தும்.
வன்முறையின்றி ஏதாவது நிகழும்போது அது அதற்கே உரிய அழகை கொண்டுள்ளது.
எங்கெல்லாம் நீ அழகை பார்க்கிறாயோ அப்போது நீ புனித பூமியில் நிற்பதை நினைவில் கொள்.
இறைமையின் முதல் தரிசனம்தான் அழகு.

திருமந்திரம்


அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில் 

இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்று இல்லை 


முயலும் முயலின் முடிவும் மற்று ஆங்கே 



பெயலும் மழைமுகில் பேர் நந்தி தானே.

கண்ணுதலான் ஒரு காதலின் நிற்கவும் 
எண் இலி தேவர் இறந்தார் எனப்பலர் 
மண் உறுவார்களும் வான் உறுவார்களும் 
அண்ணல் இவன் என்று அறியகிலார்களே.



மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள் 
எண் அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை 
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை 
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே.



கடந்துநின்றான் கமலம் மலர் ஆதி 
கடந்துநின்றான் கடல் வண்ணம் எம் மாயன் 
கடந்துநின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன் 
கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே.



ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற 
வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள் 
சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள் 
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே. 

Thursday, August 16, 2012

கடவுள் சகாயம் இல்லாமல் எதுவும் கைகூடாது...

கண்ணபுரி ராஜ்யத்தை ஒரு காலத்தில் ஆண்டுவந்த மன்னன் சுந்தரவதன். இவனிடம் ஒரே ஒரு குறை இருந்தது. அதாவது, அவனுக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது.

ஒருநாள் அமைச்சருடன் மாறுவேடத்தில் நகர் சோதனையில் ஈடுபட்டிருந்தான். அப்பொழுது இருவர் பிச்சை கெட்ட விதம் மன்னனை வியப்படைய செய்தது. மறுநாள் அவர்கள் இருவரும் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார்கள்.

பிச்சை எடுக்கும்போது நீ "ராம சகாயம் ராம சகாயம்" என்று கூறுகிறாய், "ராஜ சகாயம், ராஜ சகாயம்" என்று சொல்கிறான். இதன் அர்த்தம் என்ன சொல்லுங்கள்" என்றார் அமைச்சர். முதலாமவன் "ஐயா! இந்த உலகத்தில் எல்லாருக்கும் படி அளக்கிறவன் சாட்சாத் ராமபிரான்தான். அவனது சகாயம் இருந்தால் போதும். எல்லாச் செல்வங்களும் தாமாகக் கிடைக்கும்" என்றான். இரண்டாமவன் "ஐயா! கண்ணுக்குத் தெரியாமலிருக்கும் கடவுளை விட, கண்ணுக்குத் தெரியும் அரசன் மேலல்லவா? ராஜாவின் சகாயம் இருந்தால் ஒருவன் பணக்காரனாகி விடலாம் என்பது எனது கருத்து|" என்றான்.

மறுநாள் அமைச்சரைப் பார்த்து "அந்த ராஜசகாயம் என்ற பிச்சைக்காரன் மகா புத்திசாலி" என்றார் மன்னன். "அரசே! என்னதான் மனிதர்கள் உதவி செய்தாலும்.., கடவுள் அருள் இல்லாவிட்டால் அந்த உதவி அவனுக்கு கிடைக்காது என்றே நான் நினைக்கிறேன்" என்றார் அமைச்சர்.

ஒருநாள், மன்னனால் தானம் வழங்க ஏற்பாடாகி இருந்தது. அதற்கு ராமசகாயமும், ராஜசகாயமும் வந்திருந்தார்கள். ராமசகாயத்திற்கு ஒரு வேட்டியும் ஒரு பூசணிக்காயும் கிடைத்தது. ராஜசகாயத்தைக் கண்ட மன்னன், நீதானே ராஜசகாயம் என்று கேட்க, அவன் ஆம் என்று பதிலளித்தான். அமைச்சரை வரவழைத்து, காதில் ஏதோ கூறினார். பின்பு அவனுக்கும் ஒரு வேட்டியும் ஒரு பூசணிக்காயும் கொடுக்கப்பட்டது.

சிலநாள் கழிந்த பிறகு மன்னனும், அமைச்சரும் நகர்சோதனைக்குச் சென்ற பொழுது, ராஜசகாயம் பிச்சை எடுப்பதையும், ராமசகாயம் பல்லக்கில் போவதையும் கண்டனர்.

திரும்பவும் இருவரும் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார்கள். "ராஜசகாயம் உன் தரித்திரம் இன்னும் தீரவில்லையா? ஒரு நல்ல பூசணிக்காய் உனக்குக் கொடுத்தேனே|"என்றார் மன்னர். ஆம் அரசே! அந்தப் பூசணிக்காயை சந்தையில் விற்று விட்டேன். ஒரு வெள்ளிக் காசு கிடைத்தது. அதை வைத்து எப்படி நான் பணக்காரனாக முடியும்" என்றான் ராஜசகாயம்.

பிறகு ராமசகாயத்தைக் கூப்பிட்டு, கொஞ்ச நாட்களுக்கு முன் நீ பிச்சை எடுத்தாயே, இப்போது எப்படிப் பணக்காரனானாய்? என்று கேட்க, "அரசே! எல்லாம் ராமபிரான் சகாயம் தான். என்னுடைய தந்தைக்கு திதி கொடுக்க வேண்டியிருந்தது. நானோ ஏழை. பிராமணருக்கு பூசணிக்கீற்றாவது கொடுக்க நினைத்து, சந்தையில் பூசணிக்காய் வாங்கினேன்.

வீட்டுக்குச் சென்று அதைக் கீறியபோது, அதன் உள்ளே நகைகளும், பவுன்களும், வைரங்களும் இருந்தன. ராமபிரான் சகாயத்தினால் நான் பணக்காரனானேன்" என்றான் ராமசகாயம். நான் ராஜசகாயத்திற்கு கொடுத்த பூசணிக்காய் ராமசகாயத்திற்கு கிடைத்திருக்கிறது! கடவுள் கிருபை இருந்தால்தான் உயர்வு பெற முடியும் என்பதை உணர்ந்தார் மன்னன் சுந்தரவதன்.

செங்கல்லைப் போடலாமா?


ஒரு குருவிடம் அவருடைய சீடன் சென்று கேட்டான்.

'ஐயா, நான் திராட்சை சாப்பிடலாமா? அது தவறில்லையே?'

'தவறில்லை' என்றார் குரு.

'தண்ணீர் குடிக்கலாமா?

 'குடிக்கலாம்'

'ஏதாவது புளிப்பான பொருள்...?'

'சாப்பிடலாம்...'

உடனே சீடன் சந்தோஷமாகக் கேட்டான் 'அப்படியானால் இந்த மூன்றும் சேர்ந்து தயாரான திராட்சை மதுவையும் சாப்பிடலாம் இல்லியா?'

சீடன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்து கொண்ட குரு அவனுக்குப் புத்தி புகட்ட எண்ணி, அவனிடம் கேட்க ஆரம்பித்தார்.

'நான் உன் தலையில் சிறிது மண்ணைப் போடலாமா?'

'தாராளமாக செய்யுங்கள் குருவே!'

'சிறிது நீர் தெளித்தால்...?'

'செய்யுங்கள் ஸ்வாமி'

'அந்த மண்ணையும் நீரையும் ஒன்றாக சேர்த்து தீயில் காட்டி உருவாக்கப்பட்ட செங்கல்லை உன் தலையில் போடலாமில்லையா?'

பதில் ஏதும் கூறாமல் சீடன் மெளனமானான்.

திருச்செங்கோடு வரலாறு சுருக்கம்





முன்னொரு காலத்தில் ஆதிசேடனுடன் வாயுதேவனும்தங்களில் யார் பலசாலி என்பதை அறிய இருவரும் போர்செய்தனர்இப்போரினால் உலகில் பேரழிவுகளும்,துன்பங்களும் நேரிடுவதை கண்ட முனிவர்களும்,தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறியஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோஅவர்களே பலசாலி என்றனர்இதன்படி ஆதிசேடன்தன்படங்களால் மேருவின் சிகரத்தின் முடியை அழுத்திகொள்ளவேண்டும்வாயுதேவன் தன் பலத்தால் பிடியைதளர்த்த வேண்டும் என்றும் கூறினர்ஆனால் வாயுதேவன்பிடியை தளர்த்த முடியவில்லை இதனால் கோபம் கொண்டவாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார்இதனால்யிரினங்கள் வாயு பிரயோகமற்று மயங்கினஇந்தபேரழிவை கண்ட முனிவர்களும்தேவர்களும்ஆதிசேடனின் பிடியை தளர்த்த வேண்டினர்ஆதிசேடம்தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார்இந்த சந்தர்ப்பத்தைபயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால்அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிசேடன்சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய்சிதறுண்டு ிழுந்ததுஅவற்றில்ஒன்றுதிருவண்ணாமலையாகவும்மற்றொன்றுஇலங்கையாகவும்மற்றொன்று நாகமலையாகவும்(திருச்செங்கோடாகவும்) காட்சியளிக்கிறது.

இந்த மலையின் சிறப்புகள் படங்களின் மூலம் உணரலாம்.









 இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன












அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். ...


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்....
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.......

சத்குருவின் அறிமுகம்!!!

 
 
 
 
 
 
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே
மன்னனாம் ஆதி சேஷனின் இடம் அமர்ந்த  மங்கையற்ச்  சுடரே
ஈகையுடன் அன்பளிக்கும் தெய்வீக மலரே “பாரதியே  
எம் அன்னையே உம் பாதம் பணிகிறேன்......... 

அறியாத மழலை வயதிலும் நமக்கு ஆன்றோர்களால் அற்புதமான விஷயங்கள் போதிக்கப்படுகின்றன. நல்லொழுக்கமும் , நற்செயலும் பிறவற்றைப் போல நம் மனத்தே பதிகின்றன.  

 
பசுமரத்தாணி போல என்பார்கள் பெரியவர்கள். 

நம் முன்னால் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் அந்த அறியா வயதிலும் நம் மனத்தில் ஆழமாக பதிந்து விடுகின்றன.  அதனால் தான் என்னவோ  நம் வாழும் கண்டத்தில் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை போதிக்கும் வகையில் குருகுலங்கள் அன்றைய கால கட்டத்தில் மலர்ந்து நின்றன. 

ஒருவருக்கு முதல் குரு அவன்/அவளுடைய தந்தை என்பார்கள் சான்றோர்கள். 

ஒவ்வொரு தந்தையும் தனது வருங்கால சந்ததிகளுக்காகவாவது நன்னெறிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமாக இருந்தது.  நன்னெறிகளை பழகி அதன் வழி நிற்றல் என்பது வலியவர்க்கும் , எளியவர்க்கும் பொதுவான ஒன்று.

 
தாங்கள் யுக தர்மங்களை கற்று அதன் வழி நின்று வாழ்வினை காண்பது போல தங்களுடைய மழலைச் செல்வங்களும்  , அந்த தர்மத்தைப் போதிக்கும் கல்வியினை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலே குருகுலங்களுக்கு தம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர் பெற்றோர்கள் .

 
 
அந்தக் குருகுல கல்வி முறையில் குருகுலத்தில் குருவுடன் குறிப்பிட்ட காலம் தங்கி, அவரையே தாயாக , தந்தையாக போற்றி விஞ்ஞானம் முதல் மெய்ஞானம் வரை அனைத்துக் கலைகளையும் கற்று அவர்கள் அந்த குருகுலக்கல்வியினை பூர்த்தி செய்து வரும்போது ஒரு மானுடத்துவம் பெற்று விடுவார்கள். 

அத்தகைய கால கட்டத்தை நாம் தாண்டி ஓர் நூற்றாண்டாகி விட்ட போதிலும் அதன் வழி சற்றும் தவறாத வகையில், சில மாற்றங்களைக் கொண்டு அதே உயர்ந்த நோக்கைக் கொண்டு சத்சங்கங்கள் செயல்படுகின்றன. அந்த குருகுலக் கல்வி முறை இல்லாத குறையினை பூர்த்தி செய்கின்றன.

ஓம்
                                                       யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்
 
 
 
 
 
 
 
 
 
 
மலம் சரீரஸ்ய து வைத்ய  கேன !
  யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
      பதஞ்சலீம்  ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ !!

பாடலின் விளக்கம் -  “நான் கரம் குவித்துப் பதஞ்சலியை வணங்குகிறேன். அவர் முனிவர்களுள் புகழ் பெற்றவர். மனத்தின் அழுக்கினை  யோக சாஸ்த்திரத்தினாலும், வாக்கினை இலக்கண சாஸ்த்திரத்தினாலும், உடம்பினை ஆயுர்வேததினாலும் அவர் தூய்மைப் படுத்தினார் .”

மேற்கண்ட பாடலை அஷ்டாங்க யோக வழி நிற்கும் மாணவர்கள் அனைவரும் பதஞ்சலியை நோக்கிப் பிரார்த்தித்து தங்கள் பயிற்சியினை துவக்குவார்கள்.
வளமைக்குப்பிறகு வறுமை !
ஆன்ம சாதகர்கள் தங்கள் வாழ்க்கையில் இருமைத் தத்துவத்தின் படி  தங்கள் வாழ்க்கையில் வறுமை,வளமை என்ற இரு அனுபவங்களையும் ஒரு சேரப் பெற்று விடுகின்றனர். ஏன் ஒருவேளை உணவிற்கே அல்லாடும் அந்த துயரக் காட்சி ஏறக்குறைய எல்லா ஆன்ம சாதகர்களின் வாழ்விலும் நிகழ்ந்து விடுகின்றது.  
 பண்பாடற்ற மனிதர்கள் இந்த துயரங்களைக் கடக்க முடியாமல் ,மாயையின் வலைகளில் வீழ்ந்து விடுகின்றனர். ஆனால் ஆன்ம சாதகர்களோ தங்களின் சத்திய நிஷ்டையால் அத்தகைய சோதனைகளைக் கடந்து விடுகின்றனர்.  எனவே தான் தங்கள் சிஷ்யப் பிள்ளைகள் அத்தகைய சத்திய சோதனையில் சிக்கும்போது , குருமார்களின்  அருட் கரங்களால் காப்பாற்றப் படுகின்றனர்.