Thursday, September 18, 2014

அத்வைதம் காட்டித் தந்த ஆதி சங்கரர்.

அத்வைதத்தின் அடிப்படையில் ‘அறுவ கைச் சமய நெறி’களை சங்கரர் அறிமுகப் படுத்தினார்.
அவையே, ‘சைவம், வைணவம், சாக்தம், கொமாரம், காணாபத்யம், சொரம்’ எனப்படுகின்றன. முறையே சிவ பெருமான், திருமால், பராசக்தி, முருகக் கடவுள், விநாயகர், சூரியன் ஆகியோரை முழு முதற்கடவுளராக அறுவகைச் சமயப் பிரிவுகள் வரையறுக்கின்றன.
அந்த வகையில் ‘ஷண் மதம்’ எனப்படும் ஆறு வித வழிபாட்டு நெறிகள் மிகவும் அழகானவை.
ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு வகைப்படும். அதனால், ‘இவர் மட்டுமே உனக்குக் கடவுள்’ என்று எந்தவொரு இநதுவையும் கட்டாயப்படுத்தாமல், ‘இந்த அறுவரில் எவர் உன் மனதைக் கவர்கின்றாரோ, அவரையே முழு முதற் கடவுளாக நீ போற்றலாம்’ என்று வழி காட்டுகிறது அத்வைதம்.
அது மட்டுமின்றி, ‘உன்னுடைய இஷ்ட தெய்வமே மற்ற கடவுளராகவும் வடிவம் தாங்கி நிற்கின்றது என்ற உண்மையையும் இந்தச் சித்தாந்தம் சொல்லித் தருகிறது.
இதனால் ஒரே மதத்தில் இருந்து கொண்டு, அதே மதத்திலுள்ள இன்னொரு கடவுளை இழித்துரைக்கும் பாவத்தையும் தடுக்கிறது.
ஆறு விதமான தெய்வ வழிபாடுகளைக் காட்டித் தந்த ஆதி சங்கரர், அந்தந்தத் தெய்வங்களைப் போற்றுவதற்கான துதிக ளையும் தானே இயற்றித் தந்தார்.
அவர் பாடாத கடவுளரே இல்லை எனலாம்.

Wednesday, September 17, 2014

விசிஷ்டாத்வைதம் நிறுவிய ராமானுஜர்.

சங்கரருக்குப் பின்னால் அவதரித்தவர் ‘ராமானுஜர். இவர் விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தத்தை நிறுவினார். ‘உலகம் மாயை! பிரம்மம் ஒன்றே சத்தியமானது’ என்பது அத்வைத சித்தாந்தம் அதில் சில மாறுபாடுகளைக் கொண்டது விசிஷ்டாத்வைதம். ‘திருமாலே முழுமுதற் கடவுள் என்று போதித்தார் ராமானுஜர். இவர் வைணவத்துக்கு ஆற்றிய திருத்தொண்டுகள் மகத்தானவை.
ஆதியில், ‘தேவலர்கள் என்ற அந்தணப் பிரிவினர் மட்டுமே, விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர்களாக இருந்தனர். அவர்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய ‘பஞ்ச சம்ஸ்காரம்’ என்னும் வைணவ தீக்கையை, திருமாலடியார்கள் அனைவர்க்கும் பொதுவாக்கினார் ராமானுஜர். ‘நாராயண நாமத்தைச் சொன்னால் எவருக்கும் வைகுண்டம் உண்டு’ என்று திருக்கோஷ்டியூர் விமானத்தில் ஏறி நின்று, உலகத்தோர் அனைவர்க்கும் உபதேசித்த கருணையாளர் ராமானுஜர்.

Tuesday, September 9, 2014

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம்...


அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு

ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும்

சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு
நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மங்கலக் குடியினில் மங்களமாய்க்
குடிகொண்டு மங்காத ஒளிவீசும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில்
பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சூர்யனார் கோவிலில் சுந்தரமாய்
வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை
அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு
அதிபதியானவனே சந்திரன் செவ்வாய்
பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே
 சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ
உன்திருமுகம் காட்டி அருள்புரியும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சனீஸ்வரரையும் தர்மராஜனையும் மகனாய்ப் பெற்றவனே
அஸ்வினிக்கும் யமுனைக்கும் தந்தையாய் நிற்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
தேரும் மயிலும் வாகனமாய்க் கொண்டவனே பாருலகம் போற்றும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
செந்நிற மேனியனே செந்தாமரைப் ப்ரியனே
இச்செகம் போற்றும் கதிரவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கண்ணால் காணும் கடவுள் நீ
கதிரொளி வீசும் கிரகமும் நீ
உன்னால் வாழும் உயிர்களைக் காக்க
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நாளையும் கோளையும் நம்பி வாழும்
இப்புவியில் நன்மைகள் பல புரியவே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மனித ஜாதகத்தில் பிதுர்காரகனாக விளங்கி
தைரியம் வெற்றி அனுகூலம் யாவும் தந்தருள்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
விழியில் ஒளிதந்து புவியில்
புகழ்தந்து நல்வாழ்வு நல்கிடும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
வான் மழை பொழிந்திட பயிர்கள்
விளைந்திட வையகம் தழைத்திட
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சூர்ய நமஸ்காரம் சர்வரோக நாசனம்
சூர்ய பகவானுக்கு ப்ரதி ஞாயிறன்று
விரதமிருந்து செந்தாமரை மலர்களால்
அர்ச்சித்தால் நலம் உண்டாகும்
சூர்யனின் வாகனமான மயிலுக்கு உணவளித்து
சூர்யனுக்கு உவந்த தானியமான கோதுமையை
செப்புப் பாத்திரத்திலிட்டு தானம் செய்து
சிவசூர்யநாராயணன் தாழ்பணிந்தால் கார்யசித்தியாகும்
சூர்யபகவானின் ஷேத்ரமான சூர்யனார் கோவில் சென்று
சிவசூர்யநாராயணனுக்கு செந்நிற ஆடை
அணிவித்து அபிஷேக ஆராதனை செய்து
வழிபட்டால் சர்வ ஜெயம் உண்டாகும்
சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்
சரணம் சரணம் ஆதித்யனே சரணம்
சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்
சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்
சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்
சரணம் சரணம் ஆதித்யனே சரணம்
சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்
சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்