Friday, October 18, 2013

பிறருக்கு நீ செய்வது..

ஒருவன் மலையைக் கடந்து அடுத்த ஊருக்குச் செல்வதற்காக மலை ஏறிக்கொண்டிருந்தான். அப்போது வழியில் ஒரு துறவியும் வந்து சேர்ந்தார். இருவரும் பேசிக் கொண்டேபோகும் போது..

அவன் தன்மனக் குறையை துறவியிடம் சொன்னான். யாரும் தன்னிடம் பாசமாகவும்,உண்மையாகவும்பழகுவதில்லை. உதவிக்க வருவதில்லை என அதங்கத்துடன் சொல்லிக் கொண்டே வரும் போது அவன் காலை ஒரு கல்தடுக்கியது.உடனே அவன் "ஆ" என்று கத்தினான் அது மலையெங்கும் எதிரொலித்தது.

அப்போது துறவி அவன் தோளில்தட்டி, "நல்லவன்" என்று உரக்கச் சொல்! என்றார். அவனும் "நல்லவன்" என்று சத்தமாகச் சொன்னான். உடனே, மலையின் எல்லா திசைகளிலிருந்தும் "நல்லவன்" என்று எதிரொலித்தது.

உடனே துறவி அவனிடம் "வாழ்க்கையும் அப்படித்தான். பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுதான் உனக்கும் எதிரொலிக்கும்" என்று விளக்கினார் துறவி.

அன்றிலிருந்து அவன் எல்லோரிடமும் பாசமாகவும் அன்பாகவும் இருந்து உதவிசெய்து வரலானான். அதுபோல் மற்றவர்களும் அவனிடம் பாசமாகவும் அன்பாகவும் இருந்தனர்.

Tuesday, October 8, 2013

அலைந்து திரியும் மனது

மனதைப் பற்றிப் பேசாத ஆன்மீகமே இருக்க முடியாது. எல்லாம் அங்கிருந்தே தொடங்கி அங்கேயே முடிவடைகிறது. சிலர் குரங்கு என்பர். வேறு சிலர் 'பாதரசம்' என்பர். இன்னும் சிலர் அதை பேயாய் வருணிப்பர். மனம் அறுத்தலே ஆன்மீகத்தின் முதலும் முடிவுமாகும். வழிபாடுகளின் நோக்கமே புலனடக்கம் தான். மனமடங்க இது முதற்படி. இதை புரிந்து கொள்ளாமல் செய்யும் எந்த ஒரு வழிபாடும் முழுமையானது ஆகாது.
விடாமல் பலவாறான பூஜைகளையும் விரதங்களையும் கடைப்பிடிக்கும் ஒருவன் இறைப்பற்று உள்ளவனா? கபீர் சிரிக்கிறார்.

விரலில் உருளுமே மணி அக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுமே மனம் அங்கு, நவில்வரே இதனை செபமென்று
(அக்குமணி = ஜெபமாலை ; செம்மந்திரம் = ஜெபத்திற்க்கென உபதேசமான மந்திரம்)
( இது செபமாகாது என்னும் வகையில் கபீர் தோஹாவை நிறைவு செய்திருப்பினும் கேலியை சற்று தூக்கலாக்க வேண்டி நவில்வரே என்ற இகழ்ச்சி ஏ காரம் கையாளப்பட்டுள்ளது)


{ இதை சரியல்ல என்று நினப்பவர்களுக்கு, மாற்று :
விரலில் உருளுமே மணியக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுமே மனமங்கு, இவர் செய்வதும் இங்கே செபமன்று
}
இது நமது தினசரி அனுபவம். பத்து நிமிடமாவது ஒருமுக சிந்தையில் கடவுளை துதிக்க முடியாமல், நமக்களித்துள்ள நல்லவிஷயங்களுக்கு நன்றி கூறாமல் செபமென்ற பெயரிலமர்ந்து கொண்டு இல்லாத பொருட்களுக்கு மனக்கோட்டைக் கட்டிக்கொண்டிருப்போம். வெளிப் பார்வைக்கு, பிறருக்கு, நாம் வேண்டுமானால் பக்திமான்களாக காட்சியளிக்கலாம். ஆனால் மஹான்கள் நமது மனதை படம் பிடித்து விடுகின்றனர்.

நாமதேவர் ஒரு பெரிய மனிதரின் வீட்டிற்கு விஜயம் செய்தார். அவரோ பூஜையில் மும்முரமாய் இருந்தார். இவரை கண்டுக்கொள்ளவே இல்லை. வெகு நேரம் கழித்து வந்த அவர் உபசாரமாக "வந்து வெகு நேரமாகி விட்டதா?" என்று விசாரித்து வைத்தார். அவருடைய மனதுள் தாம் செய்த விஸ்தாரமான பூஜையை நாமதேவர் பாராட்டுவார் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ! அதற்கு அவர், "ஓ வண்ணான் வந்த போதே வந்து விட்டேன்" என்று பதிலளித்தார். நெடுஞ்சாண்கிடையாக அம்மகானின் காலில் விழுந்தார் அந்த பெரிய மனிதர். மாட்டாரா பின்னே ! பூஜை முழுவதும், வராமல் போய் விட்ட வண்ணானைப் பற்றியும் மாற்று ஏற்பாடுகள் பற்றியுமே அவர் சிந்தனை திரிந்தது. அதை சர்வ சாதாரணமாக வெளிக்கொணர்ந்தார் நாமதேவர். இத்தகையவர் அன்றும் இன்றும் என்றும் உண்டு. பின் கபீரும் சிரிக்காமல் என்ன செய்வார்?

இன்னும் சிலர் நோன்புகள் நேர்ந்து, பாத யாத்திரை செய்து, முடி களைந்து நேர்த்திக் கடன் செலுத்துவதிலேயே கடவுளை திருப்தி செய்ய முயலுவர். இவர்களைக் கண்டு கபீருக்கு அலுப்புத் தட்டுகிறது.

சிகைசெய்த பாவ மென்ன, மழிப்ப ரதை நூ றுமுறை
சிறுமை தனைம ழியாரோ, மனக்கண் வளரும் நூறுவகை
(சிகை = தலைமுடி)

முண்டனம் செய்தே தினங்கள் கழிந்தன காணுவா ரில்லை இராமனை
இராம நாமம் சொல்லியும் என்ன, மனதில் கிளைக்குதே வேறுவினை

(முண்டனம் = தலை சிரைத்தல்)இதைப் படித்த உடனே நம் நினைவுக்கு வருவது திருக்குறளில் " மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்ற குறள் தான். உலகம் என்பதை 'ஊர் வாய்' என்று கொள்ள முடியுமா ? கற்புக்கரசியான சீதையினுள்ளும் குற்றம் கண்டது 'ஊர் வாய்'. உலகம் என்பது, ஆகையால், சான்றோர் சொன்ன வழி என்றே பொருள் கொள்ள வேண்டும். அதனினும் சிறப்பு தன் எண்ணங்களை தானே பரிசோதித்துக் கொள்ளுவது.
நம் மனதில் ஒவ்வொரு கணமும் தோன்றிக்கொண்டே இருக்கும் எண்ணங்கள் பெரும்பாலும் நம்மைச் சுற்றியே- நமக்கு உண்டாகும் இலாப நஷ்ட கணக்குகளாகவே- இருக்கும். சுயநல எண்ணங்களே எல்லா வகையான சிறுமைகளுக்கும் மூல காரணமாகிறது. இவைகளை கவனித்து களைந்தாலே மனம் தூய்மையடைந்து இறைவனிடம், அதாவது முக்தி நிலைக்கு, அழைத்துச் சென்று விடும். "சித்த ஷோதகம் முக்தி சாதகம்" என்று மகான் ரமணர் தமது 'உபதேச சார'த்தில் இரத்தின சுருக்கமாக உரைக்கிறார். வள்ளுவரும் இரமணரும் சொன்னதை சற்றே கிண்டல் முறையில் 'தலைமுடிக்கென' பரிந்து கூறுவது போல் கபீரும் கூறுகிறார்.

கபீர் உபதேசம் பெற்ற மந்திரம் ராம நாமம். ஆனால் அவர் நிர்குண உபாசகராகவே இருந்தார். அதாவது கடவுளின் எல்லையற்ற தன்மையினால் அவன் அருவானவன் என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதை மனதில் வைத்து (அதாவது ராமனை உருவக் கடவுளாகக் காணாது) அவரது ஈரடியை அருவ கோட்பாட்டிற்கேற்ப மொழிபெயர்க்க வேண்டினால் கீழ்கண்ட முறையில் மொழி பெயர்க்கலாம்.

முண்டனம் செய்தே நாட்கள் கழிந்தன, முட்டினா ரில்லை மூவா முதல்வனை
முணங்கும் மந்திரந் தானென் செய்யும், முடக்கவு மில்லை மறுகும் மனந்தனை


(முட்டுதல் =பற்றிக்கொள்ளுதல் ; மூவா முதல்வன் = கடவுள் ; மறுகுதல் = உலாவுதல், சுழலுதல் ; முடக்கு = செயலிழக்கச் செய்தல்) அப்படியானால் கபீர் பூஜை விரதங்கள் செபம் எல்லாவற்றையும் தேவையற்றவை என்கிறாரா? கண்டிப்பாக இல்லை. அவைகள் மனதை ஒரு கட்டுக்கள் கொண்டு வரும் பயனைத் தராத போது அர்த்தமற்றவை ஆகின்றன என்றே சுட்டிக் காட்டுகிறார். ஈடுபட்டுள்ள செயலின் உண்மையானப் பொருளுணர்ந்து செய்யவே வற்புறுத்துகிறார்.

கபீரின் கனிமொழிகள்!

துயரில் துய்வர் அவன் நாமம் உயர்வில் உன்ன மறந்தனர்
உயர்விலும் உன்னுவராயின் துயரின் சாயலும் தொலையுமே
மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்
ஓயாதுரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்
குயவன் கைமண் கூறும் பிசைமின் பிசைமின் இன்று
கூப்பிடு நாளில் உம்மை பிசைவேன் பிசைவேன் என்று
ஓங்கி உயர்ந்து விட்டாலென்னே ஈச்சந்தரு போலே
ஒதுங்க இல்லை நிழலே எட்டாதே இச்சைதரு பழமே
தீயவன் ஒருவன் எங்கே தேடிக் கண்டிலேன் இங்கே -
தேடிக்கொண்டேன் என்னுளே என்னிலும் தீயவன் இலையே
பொறு மனமே பொறு காலத்தேதான் நிகழும் யாவும் -
நூறு குடம் நீரே இறைப்பினும் பருவத்தே தான் பழுக்கும் பழம்
திருகும் அரவை எந்திரம் கண்டு கலங்கும் கபீரின் அந்தரம்
இருபெரும் கற்களுக்கிடையே தப்பிய தினைகள் இலையே
நவில்வீர் நயமுடனே, தானடங்கி தனுவடக்கி,
தம்மன் பர்தம் உள்ளங் குளிரும் உரைகளே
துவைப்பவன் ஆசான், துணி சீடன், திட்பமே கல்லாம்
துவைப்பின் மந்திர உறை கூட்டி ஒளிரும் சிவமேயாம்
அளப்பிலா நூல் பல தெரிந்து ஆன பண்டிதர் எவரும் இல்லை
அன்பின் அருமை தெளிந்தார் அன்றே பண்டிதர் ஆனாரே
நானிருந்த போது அரி இல்லை, அரி வந்தபின்னே நானில்லை
நாடகம் முடிந்தது, ஒளி வந்த பின்னே இருளங்கு இல்லை
சிகை செய்த பாவமென், மழிப்பரதை நூறு முறை
சிறுமைதனை மழியாரோ, மனக்கண் வளரும் நூறு வகை
நாளையென்பதை இன்றே செய்மின், இன்றென்பதை இப்பொழுதே
நொடியில் வருமே ஊழி, செய்வது பின் நீ எப்பொழுது
விரலில் உருளுமே மணி அக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுதே மனம் அங்கு, நவில்வரே இதனை செபமென்று
தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தன வன்றோ
தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ
ஒன்றே எனில் சரியன்று, இரெண்டென்று உரைப்பின் தவறேயாம்
சொல்லற்று மொழிவான் கபீர், அது என்றும் எதுவோ அதுவேயாம்
செருக்கு வீணில் எதற்கு கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளைய காண்பரா , காலன் கிடத்தும் இடம் கண்டு
சிந்தையைத் தின்னும் கவலைப் பேய், மரந் தின்னும் சிதல் அன்னே
எந்தையே தீர்வேயிலாப் பிணியிது, பேதை மருத்துவன் செய்வது மென்னே
எள்ளுள் உறைவது தைலம் சிக்கிமுக்கியுள் வெந் தழலே
உள்ளுள் உறைவான் ஈசன், விழிப்பரோ உணர்வில் இவரே
கபீர் மனது நிர்மலம் ஆனது தூய கங்கை நீர் போலே- கபீர்
கபீரெனக் குழைந்தே அரி, திரிவான் இவன் பின்னே பின்னே
எமக்கு இத்தனை அருள்வாய் ஈசா, எமை சார்ந்த குடி நலம் கா
யாமும் பசித்திராமலும் அடியார் பசித்துச் செல்லாதிருக்கவுந் தா

Saturday, October 5, 2013

இன்று யுகபுருஷர் மகான் யோகி ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினம். அவரது பாதங்களை வணங்கித் துதிப்போமாக.

திருப்பாத சரணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

அரவிந்தர் பள்ளிச் சிறுவனாக
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

சிறையிலிருந்து வெளிவந்த பின்…
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

யோகி ஸ்ரீ அரவிந்தர்
இந்தக் கண்களை உற்றுப் பாருங்கள் அதில்தான் எவ்வளவு ஒளி…
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா
மகா யோகியாக உயர்ந்த பின் உடல் எப்படிப் பொன்னொளி வீசுகிறது!!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

Thursday, October 3, 2013

நம்மில் [நம்முள்] நடக்கும் விந்தை

நம்மில்  [நம்முள்] நடக்கும் விந்தை   முதுகெழும்பின் மேல் இருந்து கீழ்வரை அதாவது உட்சந்தலையில் இருந்து முதுகெழும்பின் அடிப்பாகம் வரை ஏழு ஆதாரச்சக்கரங்கள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது காங்க்ளியன் மையங்கள் எனப்படும் நரம்புகள் இணைப்பு மையம் உண்டு. நாடி நரம்புகளும்,முடுகெழும்பின் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும். இடமே  மூலாதாரம்  சுவாதிட்டானம்,  மணிபூரகம்,  அனாகதம், விசுத்தி,  ஆக்ஞை,  சகஸ்ராரம்  எனப்படும். ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களிலும் நடக்கும் சுவாசக் கணக்கு. சக்கரம் சுவாச எண்ணிக்கை சுவாச நேரம். மூலாதாரம் 600  காலை ----06.00--06.40 வரை சுவாதிட்டானம் 6000 காலை-----06.40--மதியம். 1.20 வரை மணிபூரகம் 6000 மதியம் ----01.20. இரவு 8 மணி வரை அனாகதம்  6000 இரவு -------8.00-- அதிகாலை 2.40 வரை விசுக்தி 1000 அதிகாலை --0.2.40 --3.40 வரை ஆக்ஞை 1000 அதிகாலை--03.46---04.53 வரை சகஸ்ராரம் 1000 அதிகாலை --04.53 காலை 06.00 வரை. மொத்தம் 21.600 இப்படியாக சுவாசம் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்திலும். நடந்து அந்தந்த சக்கரங்களை உக்குவிக்கின்றன ஆதாரச் சக்கரங்களில் சுவாசம் நடக்காத போது உயிரோட்டத்தில் ஒரு மின்குறுக்கு (SHORT CIRCUIT) ஏற்பட்டு வலியும்,நோயும், மரணமும். சம்பவிக்கிறது அப்போது எந்த சக்கரத்தில் உயிரோட்டம் குறைவு ஏற்பட்டுள்ளது. என்பதை வைத்தியர் அறிந்து அந்தந்த சக்கரத்திற்கு ஏற்ப மருந்து கொடுப்பார் உயிரோட்டம் குறைவுள்ள சக்கரம் கைவைத்துப் பார்த்தால் வெப்பமாக, சூடாக இருக்கும்.


 முதுகெலும்பின் மேல் இருந்து கீழ்வரை அதாவது உச்சந்தலையில் இருந்து முதுகெலும்பின் அடிப்பாகம் வரை ஏழு
ஆதாரச் சக்கரங்கள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது காங்க்ளியன் மையங்கள் எனப்படும் நரம்புகள் இணைப்பு
மையம் உண்டு.
நாடி நரம்புகளும்,முடுகெலும்பின் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும். இடமே
மூலாதாரம்
சுவாதிட்டானம்,
மணிபூரகம்,
அனாகதம்,
விசுத்தி,
ஆக்ஞை,
சகஸ்ராரம்
எனப்படும்.
ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களிலும் நடக்கும் சுவாசக் கணக்கு.
சக்கரம் சுவாச எண்ணிக்கை சுவாச நேரம்.
மூலாதாரம் 600 காலை ----06.00--06.40 வரை
சுவாதிட்டானம் 6000 காலை-----06.40--மதியம். 1.20 வரை
மணிபூரகம் 6000 மதியம் ----01.20. இரவு 8 மணி வரை
அனாகதம் 6000 இரவு -------8.00-- அதிகாலை 2.40 வரை
விசுக்தி 1000 அதிகாலை --0.2.40 --3.40 வரை
ஆக்ஞை 1000 அதிகாலை--03.46---04.53 வரை
சகஸ்ராரம் 1000 அதிகாலை --04.53 காலை 06.00 வரை.
மொத்தம் 21.600
இப்படியாக சுவாசம் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்திலும். நடந்து அந்தந்த சக்கரங்களை உக்குவிக்கின்றன
ஆதாரச் சக்கரங்களில் சுவாசம் நடக்காத போது உயிரோட்டத்தில் ஒரு மின்குறுக்கு (SHORT CIRCUIT) ஏற்பட்டு
வலியும்,நோயும், மரணமும். சம்பவிக்கிறது
அப்போது எந்த சக்கரத்தில் உயிரோட்டம் குறைவு ஏற்பட்டுள்ளது. என்பதை வைத்தியர் அறிந்து அந்தந்த சக்கரத்திற்கு ஏற்ப
மருந்து கொடுப்பார் உயிரோட்டம் குறைவுள்ள
சக்கரம் கைவைத்துப் பார்த்தால் வெப்பமாக, சூடாக இருக்கும்.

Tuesday, October 1, 2013

"உலக உயிர்வணக்கம்"


பாடல் :
"வான்வாழி வானையளி மாதவரும் வாழி
 கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
 ஆன் வாழி அமரர் முத லிருடி சித்தர் வாழி
 நான் நீ யென லகற்று நாதாக்கள் வாழியவே".
பொருள் :
கார்மேகம் சூழ்ந்து , மழை நீர் தந்து, இந்த உலக உயிர்களை
காக்கும் வான மண்டலம் எந்த மாசும் இல்லாமல் வாழ்க!.

இந்த பூமியில் மனிதர்களாக பிறந்து ,வாழ்ந்து , என்னை
உருவாக்கி , உயிர்  தந்து , வாழ்க்கை  தந்து மறைந்து ,
வான் உலகில் 'பிறவியில்லாப் பெருவாழ்வு' பெற்று , மிகப் பெரிய தவத்தன்மை பெற்ற என் தாய் , தந்தை ,வம்சாவழி
முன்னோர்கள் வாழ்க!.
இந்த பூமியில் தன்னுயிர் போல் நாட்டையும் , தன் நாட்டு
மக்களையும்  பசி , பஞ்சம், இல்லாமல் நீதி , நேர்மை , கொண்டு
ஆட்சி செய்யும் , நல்ல ஆட்சி நிர்வாகம்  செய்யும் அரசர்கள்,
நிர்வாகிகள் வாழ்க!.
எனக்கு  பூரண ஞானம் அறிய செய்து , உலகினையும் , உலக
மக்களையும் , உலக சமுதாயத்தை புரிய செய்து, இந்த பிறவியில் நான் யார் ?. என்பதை அறிய செய்து
உலகத்தையும் , இந்த சமுதாய விதிகளை அறிய செய்து ,
நன்மை , தீமை , உண்மை ,பொய் , என அனைத்தையும்
பகுத்து அறியும்  அறிவான 'ஆறாவது அறிவை' அறியும் படி
செய்து , இந்தப் பிறவியில்  எனக்கு எது நல்லது ?. எது கெட்டது என்ற விபரங்களை போதித்து ,என்னையும் தங்கள்
சீடனாக ஏற்று பூரண ஞானத்தை  போதித்து  வரும் என்
குருமார்கள் வாழ்க !.
இந்த உலகில் பிறந்து வாழும் மனிதர்கள் , பசு முதலான  அனைத்து சீவ ராசிகளும் வாழ்க! .
இந்த உலகில் பிறந்து தேசத்திற்கும் , மக்களுக்கும் தொண்டு
செய்து வாழ்ந்து அமரத்துவம்  பெற்று , இன்றும் தான்  செய்த
நற்செயல்களால், மக்கள் மனதில்  வாழ்ந்து கொண்டு
இருக்கும் ஞானிகள் , மகான்கள் , தலைவர்கள் , பெரியோர்கள் 
நாமம் வாழ்க!.
உலக மக்களுக்கு  உண்மை ஞானம் , உலகைப்பற்றிய
விழிப்புணர்வு  போதித்த சித்தர்களும் , ரிஷிகளும் ,
முனிவர்களும்  வாழ்க !.
நான் , நீ , ஜாதி ,மதம் , என பேதம்  பிரிவினை  பாராமல் உலக
உயிர்களை , மனிதர்களை , சீவன்களை ஒன்று போல் நேசித்து  வாழும் ஞான பெரியார்கள் , வழிகாட்டிகள்  வாழ்க!  வாழ்க!  வாழ்க!. 

தெய்வீக கதைகள்.....


எல்லாம் நன்மைக்கே!
அரண்மனையில் மன்னர் ஆர்வமுடன் மந்திரியிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் பழம் ஒன்றை நறுக்க கத்தி எடுக்க, தவறுதலாக கையில் பட்டு ரத்தம் வந்தது. அதைக் கண்ட மந்திரி, "எல்லாம் நன்மைக்கே' என்றார் இயல்புடன்.
மன்னர் கோபத்தில், ""என்ன உளறுகிறீர்?'' என கத்தினார். 
""ஆம்! மன்னா! வேலைக்கு ஆயிரம் பேர் காத்திருக்க, தாங்கள் இப்படி கையை நறுக்கி கொண்டால் அதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது. எல்லாம் நன்மைக்காக!'' என்றார் மந்திரி. 
கொந்தளித்த மன்னர், "" உளறிக் கொட்டும் இவரைச் சிறையில் அடையுங்கள்'' என்று உத்தரவிட்டார். அமைதி தேடி, குதிரையுடன்
தனியாளாகக் காட்டுக்குப் புறப்பட்டார் மன்னர்.
அங்கு காட்டுவாசிகளிடம் சிக்கிக் கொண்டார்.
காளி வழிபாடு செய்யும் அவர்கள், மன்னரை நரபலி கொடுக்க எண்ணி மரத்தில் கட்டி வைத்தனர்.
காட்டுவாசிகளின் தலைவன், மன்னரின் ரத்தக் காயம் கண்டு, ""குறையுள்ள இவனைக் காளிக்கு பலி கொடுப்பது நல்லதல்ல'' என்று அவிழ்த்து விட்டான். மன்னர் அரண்மனை திரும்பினார்.
மந்திரியைக் கண்டு நடந்ததை தெரிவித்தார். 
""மந்திரியாரே! நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. குற்றம் செய்யாத உங்களைச் சிறையில் அடைத்து விட்டேனே'' என்று வருந்தினார். 
""எல்லாம் நன்மைக்கே மன்னா! நானும் வந்திருந்தால் நிலைமை என்னாகும்? காட்டுவாசிகளிடம் நான் அல்லவா சிக்கியிருப்பேன். அதற்காகவே என்னை சிறையில் அடைத்து விட்டீர்கள்!'' என்றார் மந்திரி. 
மந்திரியின் மந்திரச் சொல்லை மன்னரும் அன்று முதல் உச்சரிக்கத் தொடங்கினார்.

ராகங்கள்- தமிழ்,வடமொழிப் பெயர்கள்

தற்போது இன்னிசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வோரிடம் தமிழ் பண்களின் (ராகம்) பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன ராகம் என்று தெரியாது. ஏனெனில் தேவாரம் முதலிய திருமுறைகள் பாடப் பட்ட ராகங்களின் தமிழ்ப் பெயர்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப் பட்ட பழைய பண்களின் பெயர்களை நாம் மீண்டும் உயிர்ப்பிப்பது தமிழ் பண்பாட்டின் பெருமையையும், பழமையையும் நிலைநாட்டும். இப்போது வழக்கத்திலுள்ள பெயர்களுடன் பழைய பண்களின் பெயர்களையும் பயன்படுத்துவது நல்லது.
சம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதற் பாட்டு நைவளம் (நட்டபாடை) என்னும் பண்ணிலும் காரைக்கால் அம்மையாரிம் சில முதல் பாட்டுகளும் இதே பண்ணில் பாடப் பட்டதும் ஒப்பு நோக்கத் தக்கது.
பழந் தமிழ் நூல்களில் 103 பண்கள் இருந்ததாகச் சொல்லபடுகிறது. அவைகளில் 23 பண்கள் தேவாரத் திருப்பதிகங்களில் பயன்படுதப்பட்டன:–
செவ்வழி, தக்கராகம், நேர்திறம்-புறநீர்மை, பஞ்சமம், காந்தாரம், நட்டபாடை, அந்தாளிக் குறிஞ்சி, பழம் பஞ்சுரம், மேகராகக் குறிஞ்சி, கொல்லிக் கௌவாணம், பழந்தக்கராகம், நட்டராகம், குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, செந்துருத்தி, தக்கேசி, கொல்லி, இந்தளம், காந்தார பஞ்சமம், கௌசிகம், பியந்தை, சீகாமரம், சாதாரி.
பழைப பண்கள் இப்போது என்ன பெயரில் உலவுகின்றன என்பதைக் கீழ் கண்ட பட்டியல் காட்டும்:–
செவ்வழி = யதுகுல காம்போதி
சதாரி = காம வர்த்தினா
வியாழக் குறிஞ்சி = சௌராஷ்டிரம்
பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி
இந்தோளம் = மாய மாளகௌளம்
புறநீர்மை = பூபாளம் /ஸ்ரீகண்டி
நட்டராகம் = பந்துவராளி
நட்டபாடை = நாட்டை
கொல்லி = பிலஹரி
கொல்லி கவ்வாமை = நவரோகி
தக்கேசி = காம்போதி
தக்கராகம் = ஏகதேச காம்போதி
நேரிசை = சிந்து கன்னடா
குறிஞ்சி = மலகரி
கௌசிகம் = பைரவி
காந்தார பஞ்சமம்= கேதார கௌளம்
பழம்பஞ்சுரம் = சங்கராபரணம்
மேகராக குறிஞ்சி == நீலாம்பரி
குறுந்தொகை = நாதநாமக்கிரியை
அந்தாளிக் குறிஞ்சி = சாமா / சைலதேசாட்சி
செந்துருத்தி = மத்யமாவதி
திருத் தாண்டகம் = ஹரிகாம்போதி
பஞ்சமம் = ஆஹிரி
ஏகாமரம் = புன்னாக வராளி
சீகாமரம் = நாதநாமக்கிரியை
கொல்லி, கொல்லி,க்கௌவாணம் = சிந்து கன்னடா
தேவார மூவர் ஊர் ஊராகச் சென்ற போது பண்களோடு பதிகங்களைப் பாடிச் சென்றனர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன் என்று அவர் போற்றப் படுவதால் அவர் தமிழையும் இசையையும் தலம் தலமாக கோவில் கோவிலாகப் பரப்பியது தெரிகிறது. அவர்கள் காலத்துக்கு முன்னரே இந்தப் பண்கள் வழக்கில் இருந்ததால்தான் அவர்களால் இப்படிச் செய்யமுடிந்தது.
கோவில்களிலும் காலை, உச்சிக்காலம், மாலை, இரவு/ அர்த்தசாமம் என்று ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு பண் (ராகம்) பாடப் பட்டது. நாதசுரம் அல்லது வாய்ப்பாட்டு மூலம் இது நிகழ்ந்தது.