Friday, October 15, 2010

என்னைத் தன் சேவையால் தன் வசமாக்கித் தன்பால் ஈர்த்துக் கொண்ட என் அன்புத் தாய் "அன்னை திரேசா"

வாழ்க்கை என்னும் சாக்கடையில் தான் எல்லோரும் உழன்று கொண்டிருக்கின்றோம். சிலரது கண்கள் மட்டுமே நட்சத்திரங்களில் லயிக்கின்றன.  இப்படியான வாழ்வில் நின்று கொண்டு அன்னை திரேசா என்ன செய்தார் என்று நோக்குவோம்.
அன்னை திரேசாவிற்கும் ஒரு காட்சி ஏற்பட்டது. இந்த எதிர் மறை நிகழ்வுகளுக்கு ஏது பதிலடி?  ஆழமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். " மற்றவர் உனக்கு எதிராகத் தீமை செய்தால் அவர்களுக்கு எதிராக நீயும் செயல்படு" என்றார். அன்னை திரேசாவை கடவுளாக்கிய ஒரே ஒரு வரி இது தான். இந்த வரியைப் பார்த்தவுடன் அடிக்கு அடி, குத்துக்கு குத்து, வெட்டுக்கு வெட்டு என்று எண்ண வேண்டாம். மற்றவர் நமக்கு எதிராகத் தீமைகள் செய்தால், அது போல் தீமைகளை செய்யக் கூடாது. தீமைக்கு எதிர் என்ன? அது தான் நன்மை.   மக்களில் நன்மை செய்யத் தெரியாது, தீமை செய்வோருக்கு எதிராக நாம் நன்மைகளை செய்ய வேண்டும் என்றார்.
தன் கருத்தில் உறுதியாக இருந்தார். எந்தச் சுய நலன்களும் இல்லாமல் தன்னைத் துறவியாக்கினார்.  தீமைகளே வடிவாக நிற்கும் இந்த உலகத்திற்கு எதிராக நன்மையையே செய்வதென முடிவு செய்தார்.   நன்மையை மட்டும் செய்யும் ஒரு மாபெரும் உலகப் போரை அவர் பிரகடனப் படுத்தினார்.  தெய்வம் அவரிடம் வந்தது. 
அவருடைய கை பட்டு  பலருடைய நோய் குணமாகியது.  சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களில் உலகம் முழுவதும் தெய்வப் பிறவியாக ஏற்றுக் கொள்ளப் பட்டவர்களில் அவரும் ஒருவர்.
எனவே தான் இந்த உலகத்தில் நமக்கு யாருமே இல்லையென  ஒரு போதும் எண்ணிவிடக் கூடாது.  நன்மை செய்யும் போரைத் தொடங்கினால் உலகில் உள்ள எல்லோரையும் வெற்றி கொள்ள முடியும். நமக்கு யாருமே துணையில்லை என்று விரக்தியடைவது  மாபெரும் தவறு.  "நாம்  யாருக்குத் துணையாக இருந்தோம் என்று எண்ணுவதே சிறந்தது. 
தத்துவத்தின் முடிவிலும் வாழ்வின் முடிவிலும் எதுவும் இல்லை. இப்போது கையில் இருக்கும் இந்த வாழ்வு மட்டும் தான் நிஜமானது. அதை ஒரு போதும் நம்பிக்கை வரட்சிக்குள் தள்ளி விடக் கூடாது.
உலகத்தில் தோல்வி இல்லாத வெற்றி மட்டுமே உள்ள ஒரு  விடயம் உண்டென்றால் அது நன்மை செய்யும் போர் தான்.  அந்தப் போரைச் செய்பவருக்கு
உலகம் விரக்தியானது அல்ல.  அன்னை சொன்ன ஒரே ஒரு தத்துவம் அது தான்.
ஆயிரம் சொற்களைச் சேர்த்தாலும் ஒரு செயலைப் போல பயனளிப்பதில்லை.  அடுத்தவர்களுக்கு உதவுங்கள்.  நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அது மற்றவர்களை மகிழ்விப்பதன் மூலம் மட்டுமே அது முடியும்.

No comments:

Post a Comment