Friday, October 15, 2010

"Aum namo Bhagavathe Sri Ramanaya" 'பிரார்த்தனை'

' தெய்வீகமே குன்ற, நாகரீகப் பேய் தலை விரித்தாடும் இக் கலியுக காலத்தில், சாதுக்களைக் காத்தருளி உலகத்தை உய்விக்கவும் பாபாத்மாக்களைக் கருணையுடன் கரையேற்றவும்,    அழகு-சுந்தரர் 
புத்திரனாய்த் திருச்சுழி ஷேத்திரத்தில் அவதரித்து, அருணாச்சலத்தில் காரண ரூபமாய் விளங்கும் பரந்தாமா!  

உங்களைப் போலவே மார்கழி 30 இல் அவதரித்த பாக்கியம் எனக்குக் கிடைத்திட்டதும்,  இப் பிறவியில் எனக்கு ஞான சொரூபனாகிய உங்களது பிரத்தியஷ தரிசனமும் கிடைத்ததைப் பற்றியும்,   அளவிலா ஆனந்தத்தில் மூழ்கின்றேனே தவிர,   நான் பூர்வ ஜன்மத்திலேயே  முக்தியடையாமல் மீண்டும் இந்த ஜன்மம் எடுத்ததைக் குறித்து 
சற்றும் மனக் கிலேசம் அடையவில்லை.  நான் என்னை அறியாமல் செய்த குற்றங்களைப் பொறுத்து,  என் மன எண்ணங்களை அடக்கி,  இம்மை மறுமைகளில் என் வாழ் நாளைச் சுகப்படுத்தி மோட்ஷ  சாம்ராஜ்யம் அளித்து அருளுமாறு,  திருவேங்கட ரமணா!  
உங்களைப் பிரார்த்திக்கின்றேன். 
என் இதயத்தில் எப்பொழுதும் குடிகொண்டிருக்கும் உங்களை
 அனுதினமும் ஹ்ருதய பூர்வமாய் துதித்து  நமஷ்கரிக்கின்றேன். 
"முக்திக்கு எளியது அருணாச்சலம்;  சாதனத்தில் சிறந்தது ஆத்மா விசாரம்;
உபதேசத்தில் வலியது மோனம்; 
குருவில் சிறந்தவர் என் இதய ரமணன் " 



எல்லோருக்கும் மங்களம் உண்டாகுக!

ஓம் சாந்தி!  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

No comments:

Post a Comment