Friday, October 15, 2010

நாளை என்பது நம் கையில் இல்லை. நல்லவை நினைத்தால் அக்கணமே அவற்றைச் செய்யத் தொடங்குக.

நமது உணர்வுகளைக் கட்டுப் படுத்தக் கூடிய வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.   உலக பந்தங்களை படிப்படியாக குறைத்துக் கொண்டு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளும் போது  நமது  மனச் சாட்சி நமக்கு உற்ற தோழனாகி விடுகின்றது.    நமது மனச் சாட்சிக்கு ஆதிக்கம் கொடுத்து ஆளச் செய்தோமானால் நலன் பெறுவோம்.   நம்மை நாமே உயர்த்திக் கொள்கிறோம் என்பதில் சிக்கல்கள் உண்டு.  அதனை நாம் விவேகமாக சமாளிக்க வேண்டும்.   நம்மைக் காத்துக் கொள்ள சிறந்த உபாயங்கள் தேவை என்பதை நாம் உணர வேண்டும்.
உரிய பாதையில் நாம் செல்லும் போது தன்னலம் அற்றவர்களாகவும் உலகப் பொது நலனுக்குப் பாடுபடுபவர்களாகவும் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். நமது பிரார்த்தனைகளும் பொது நலன் கருதுவதாகவே இருக்க வேண்டும்.   நமது எண்ணங்களே நமது செயலுக்கு காரணம். ஆதலால் நம்முடைய எண்ணங்களை உயர்ந்த வழியில் செலுத்த வேண்டும்.   அன்பு நெறியில் நாம் நடக்கத் தொடங்கிவிட்ட பின்னர் வாழ்கையில் ஏற்படும்
ஒவ்வொரு அனுபவமும் நம் ஆன்மீக வளர்ச்சிக்கு அவசியமானதாகவும்
பயனுள்ளதாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment