ஒருவன் மலையைக் கடந்து அடுத்த ஊருக்குச் செல்வதற்காக மலை ஏறிக்கொண்டிருந்தான். அப்போது வழியில் ஒரு துறவியும் வந்து சேர்ந்தார். இருவரும் பேசிக் கொண்டேபோகும் போது..
அவன் தன்மனக் குறையை துறவியிடம் சொன்னான். யாரும் தன்னிடம் பாசமாகவும்,உண்மையாகவும்பழகுவதி ல்லை. உதவிக்க வருவதில்லை என அதங்கத்துடன் சொல்லிக் கொண்டே வரும் போது அவன் காலை ஒரு கல்தடுக்கியது.உடனே அவன் "ஆ" என்று கத்தினான் அது மலையெங்கும் எதிரொலித்தது.
அப்போது துறவி அவன் தோளில்தட்டி, "நல்லவன்" என்று உரக்கச் சொல்! என்றார். அவனும் "நல்லவன்" என்று சத்தமாகச் சொன்னான். உடனே, மலையின் எல்லா திசைகளிலிருந்தும் "நல்லவன்" என்று எதிரொலித்தது.
உடனே துறவி அவனிடம் "வாழ்க்கையும் அப்படித்தான். பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுதான் உனக்கும் எதிரொலிக்கும்" என்று விளக்கினார் துறவி.
அன்றிலிருந்து அவன் எல்லோரிடமும் பாசமாகவும் அன்பாகவும் இருந்து உதவிசெய்து வரலானான். அதுபோல் மற்றவர்களும் அவனிடம் பாசமாகவும் அன்பாகவும் இருந்தனர்.
அவன் தன்மனக் குறையை துறவியிடம் சொன்னான். யாரும் தன்னிடம் பாசமாகவும்,உண்மையாகவும்பழகுவதி
அப்போது துறவி அவன் தோளில்தட்டி, "நல்லவன்" என்று உரக்கச் சொல்! என்றார். அவனும் "நல்லவன்" என்று சத்தமாகச் சொன்னான். உடனே, மலையின் எல்லா திசைகளிலிருந்தும் "நல்லவன்" என்று எதிரொலித்தது.
உடனே துறவி அவனிடம் "வாழ்க்கையும் அப்படித்தான். பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுதான் உனக்கும் எதிரொலிக்கும்" என்று விளக்கினார் துறவி.
அன்றிலிருந்து அவன் எல்லோரிடமும் பாசமாகவும் அன்பாகவும் இருந்து உதவிசெய்து வரலானான். அதுபோல் மற்றவர்களும் அவனிடம் பாசமாகவும் அன்பாகவும் இருந்தனர்.

![நம்மில் [நம்முள்] நடக்கும் விந்தை முதுகெழும்பின் மேல் இருந்து கீழ்வரை அதாவது உட்சந்தலையில் இருந்து முதுகெழும்பின் அடிப்பாகம் வரை ஏழு ஆதாரச்சக்கரங்கள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது காங்க்ளியன் மையங்கள் எனப்படும் நரம்புகள் இணைப்பு மையம் உண்டு. நாடி நரம்புகளும்,முடுகெழும்பின் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும். இடமே மூலாதாரம் சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் எனப்படும். ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களிலும் நடக்கும் சுவாசக் கணக்கு. சக்கரம் சுவாச எண்ணிக்கை சுவாச நேரம். மூலாதாரம் 600 காலை ----06.00--06.40 வரை சுவாதிட்டானம் 6000 காலை-----06.40--மதியம். 1.20 வரை மணிபூரகம் 6000 மதியம் ----01.20. இரவு 8 மணி வரை அனாகதம் 6000 இரவு -------8.00-- அதிகாலை 2.40 வரை விசுக்தி 1000 அதிகாலை --0.2.40 --3.40 வரை ஆக்ஞை 1000 அதிகாலை--03.46---04.53 வரை சகஸ்ராரம் 1000 அதிகாலை --04.53 காலை 06.00 வரை. மொத்தம் 21.600 இப்படியாக சுவாசம் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்திலும். நடந்து அந்தந்த சக்கரங்களை உக்குவிக்கின்றன ஆதாரச் சக்கரங்களில் சுவாசம் நடக்காத போது உயிரோட்டத்தில் ஒரு மின்குறுக்கு (SHORT CIRCUIT) ஏற்பட்டு வலியும்,நோயும், மரணமும். சம்பவிக்கிறது அப்போது எந்த சக்கரத்தில் உயிரோட்டம் குறைவு ஏற்பட்டுள்ளது. என்பதை வைத்தியர் அறிந்து அந்தந்த சக்கரத்திற்கு ஏற்ப மருந்து கொடுப்பார் உயிரோட்டம் குறைவுள்ள சக்கரம் கைவைத்துப் பார்த்தால் வெப்பமாக, சூடாக இருக்கும்.](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc3/p320x320/971842_506739226059515_1693781655_n.jpg)