ஒருவர் எங்கிருந்தோ உன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அவரே கடவுள். அவரை எப்போதும் மறக்காதே. அவருடன் உள்ள தொடர்பு மட்டுமே என்றும் நிலையானது. மற்றவையெல்லாம் அழிந்துவிடக் கூடியவையே. இந்த கலியுகத்தில் மனதால் செய்யும் பாவங்கள் பாவமே அல்ல. எனவே, வேண்டாத கவலையிலிருந்து விடுபடுவாயாக. வேண்டாத பயங்களை வளர்த்துக் கொண்டு உன் வாழ்நாட்களை வீணடித்து விடாதே. உனக்கு வருகின்ற துன்பங்கள் அனைத்தும் பாலத்தின் அடியில் ஓடும் வெள்ளம் போல் ஓடிவிடும். அதனால் உன் துன்பங்களுக்குள் உன்னை மூழ்கடித்து வருத்திக் கொள்ளாதே. தினந்தோறும் செய்ய வேண்டிய கடமையைச் சிறிது நேரமாவது மனஒருமைப்பாட்டுடன் செய்தாலும் போதும். நீ உன் பிறவிப் பயனை பெற்றவனாவாய். துக்கத்தில் வருந்தினால் உன் இதயத்தை இறைவனுக்குத் திறந்து காட்டு. எனக்கு மனஅமைதி தந்தருள்வாய் என்று கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய் . நிச்சயம் மனஅமைதி பெறுவாய்.
பிறரிடம் குற்றம் காணும் ஒருமனிதன் தன் மனத்தையே மாசுபடுத்திக் கொள்வான். ஆனால், மனத்தூய்மை உடையவனோ எல்லாவற்றிலுமே தூய்மையைக் காண்பான்.
No comments:
Post a Comment