துக்கத்தில் அடிபட்ட உங்கள் இதயத்தை இறைவனுக்குத் திறந்து காட்டுங்கள். கண்ணீர் சிந்தி, எம்பெருமானே! எனக்கு மன அமைதி தந்தருள்வாய் என்று பிரார்த்தியுங்கள்! படிப்படியாக உங்கள் மனம் அமைதி அடையும்.
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதன், தனது கர்மத்தின் பலனால் அதே குடும்பத்தில் மீண்டும் மீண்டும் பிறந்து மடிகிறான். இது பல தடவைகள் சம்பவிக்கும் விஷயமாகும்.
தூய்மையே உருவான பகவானைத் தவம் புரிந்தாலன்றி அடைய முடியாது. பகவானுக்கு பக்தர்கள் தம்மை ஆத்மார்ப்பணம் செய்து வருவதும், பகவானிடம் பரிபூரணமான நம்பிக்கை கொண்டு வாழ்வதுமே அவர்களுடைய சாதனையாகும்.
உமது விரல்களும், நாக்கும் செயலற்றிருக்க, மனம் பகவத் ஸ்மரணை செய்துகொண்டே இருப்பதை நீர் பிற்பாடு காண்பீர்.
பிரம்ம மார்க்கம் வெகு கடினமானது. நீர் குருதேவரை (ராமகிருஷ்ணர்) பிரார்த்தித்துக் கொள்ளும். அவர் சரியான காலத்தில் பிரம்ம ஞானத்தை உமக்குத் தருவார்.
என்னை நீ ராதையாகவோ அல்லது உன்னுடைய மனத்திற்கு ஏற்கக்கூடிய வேறு எந்த முறையிலோ கொள்ளலாம். உன்னுடைய தாயாராகவோ கூட என்னை நீ கருதினாலும் போதும்.
அகங்காரத்தால் அந்தகர்களான மக்கள் கர்மத்தைப் பொறுத்தமட்டில் தாமே சுதந்திரமான கர்தாக்கள் என நினைக்கின்றனர். அவர்கள் பகவானைச் சார்ந்து இருப்பதில்லை. தம்மை நம்பியிருப்பவரைப் பகவான் ரட்சிக்கிறார்.
No comments:
Post a Comment