Showing posts with label சாரதாதேவியார். Show all posts
Showing posts with label சாரதாதேவியார். Show all posts

Saturday, October 13, 2012

கடவுள் நமக்கு உறவினர்

* ஏதோ ஒரு நினைவுடன் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்வதைவிட,     இறைவனின் நினைவில் ஊறி ஒருமுறை நாம ஜபம்
செய்வது கோடிக்கணக்கில் செய்ததற்குச் சமமாகும்.
* இறை வழிபாட்டுக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். கடமையின் சுமை
எவ்வளவு அழுத்தினாலும் இறைவழிபாட்டைத் தவறாமல் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
* இறைவனின் செயல்படி அனைத்தும் நடந்தாலும், நம்முடைய வேலையை நாம் தான் செய்தாக வேண்டும். காரணம், இறைவனின் திருவுளம் மனிதனின் செயல் மூலமே வெளிப்படுகிறது.
* இறைவன் அனைவருக்கும் உரியவர். இறை நாமத்தைக் கணக்கிட்டு
ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே இறைவன் நமக்கு விரல்களைத் தந்துள்ளான்.
* கடவுள் நமக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரர். இந்த உறவு எவ்வளவு ஆழமாக ஒருவனுக்கு இறைவனிடம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் அவன் அவரை நெருங்குகிறான்.

Sunday, September 18, 2011

துடைப்பத்துக்கு மரியாதை கொடு



* அனைவருக்கும் அவரவருக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். துடைப்பமாக இருந்தாலும், அதற்குரிய மரியாதையைத் தரவேண்டும். எல்லா வேலைகளையும் பக்திபூர்வமாகச் செய்ய வேண்டும்.
* எதைச் சாப்பிட்டாலும், முதலில் அதைக் கடவுளுக்கு நிவேதனம் செய்தல் வேண்டும். கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யாத எதையும் உண்ணக்கூடாது.
* ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்து அமைவதில்லை. அப்பொருளை எவ்வளவு அன்புடன் கொடுக்கின்றனர். என்பதைப் பொறுத்தே அதனுடைய மதிப்பு உயரும்.
* சோம்பலினால் உடல் மட்டுமல்ல. நம் மனமும் கெட்டுவிடும். அதனால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். அதனால் நாம் நம் கடமையில் முழுமையாக நம்மை இணைத்துக் கொண்டு ஆர்வமுடன் செயல்படவேண்டும்.
* துன்பங்களால் நொந்து வருந்துபவர்கள் தங்கள் உள்ளங்களை இறைவனிடம் திறந்து காட்டுங்கள். ""இறைவா! எனக்கு அமைதி கொடு!'' என்று மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள்.

வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்குக!



* மனிதர்களில் யாரிடமாவது அன்பினைச் செலுத்தினால் அதற்காக நாம் துன்பப் பட்டே ஆக வேண்டும். எவன் தன் அன்பினை முழுமையாக கடவுளுக்குத் தருகிறானோ அவனே உண்மையில் பாக்கியவான். இறைவனை நேசிப்பவனுக்கு துன்பம் என்பதே கிடையாது.
* கவலைப்படாதீர்கள்! அலைபாயும் மனதை அடக்கும் வலிமை இறைவனுக்கு மட்டுமே உண்டு. இறைநாமத்தை விடாது ஜபித்து வருபவர்களால் மட்டுமே புலன்களை கட்டுப்படுத்த முடியும்.
* கடமைகள் எவ்வளவு இருந்தாலும், பணிச்சுமை உங்களை எப்படி அழுத்தினாலும் இறைவழிபாட்டினைத் தவற விடாதீர்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வழிபாடு செய்வதை முக்கிய கடமையாகக் கொள்ளுங்கள்.
* ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்தது கிடையாது. அப்பொருளை கொடுத்தவரின் அன்பைப் பொறுத்தே அப்பொருள் மதிப்பு பெறுகிறது. சிறியதோ, பெரியதோ அன்பினால் எந்தப் பொருளும் மதிப்புடையதாகி விடும். * உண்ணும் உணவினைப் பொறுத்து மனிதனின் குணம் அமைகிறது. கடவுளுக்கு படைத்த உணவு உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் எந்த உணவாயினும் கடவுளுக்கு அர்ப்பணித்த பின்னரே உண்ணுங்கள்.

 

கடவுள் நமக்கு உறவினர்

* ஏதோ ஒரு நினைவுடன் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்வதைவிட, இறைவனின் நினைவில் ஊறி ஒருமுறை நாம ஜபம்
செய்வது கோடிக்கணக்கில் செய்ததற்கு  சமமாகும்.
* இறை வழிபாட்டுக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். கடமையின் சுமை
எவ்வளவு அழுத்தினாலும் இறைவழிபாட்டைத் தவறாமல் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
* இறைவனின் செயல்படி அனைத்தும் நடந்தாலும்,  நம்முடைய வேலையை நாம் தான் செய்தாக வேண்டும். காரணம், இறைவனின் திருவுளம் மனிதனின் செயல் மூலமே வெளிப்படுகிறது.
* இறைவன் அனைவருக்கும் உரியவர். இறை நாமத்தைக் கணக்கிட்டு ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே இறைவன் நமக்கு விரல்களைத்
தந்துள்ளான்.
* கடவுள் நமக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரர். இந்த உறவு எவ்வளவு ஆழமாக ஒருவனுக்கு இறைவனிடம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் அவன் அவரை
நெருங்குகிறான்.

இதயத்தைத் திறந்து காட்டு


ஒருவர் எங்கிருந்தோ உன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அவரே கடவுள். அவரை எப்போதும் மறக்காதே. அவருடன் உள்ள தொடர்பு மட்டுமே என்றும் நிலையானது. மற்றவையெல்லாம் அழிந்துவிடக் கூடியவையே. இந்த கலியுகத்தில் மனதால் செய்யும் பாவங்கள் பாவமே அல்ல. எனவே, வேண்டாத கவலையிலிருந்து விடுபடுவாயாக. வேண்டாத பயங்களை வளர்த்துக் கொண்டு உன் வாழ்நாட்களை வீணடித்து விடாதே. உனக்கு வருகின்ற துன்பங்கள் அனைத்தும் பாலத்தின் அடியில் ஓடும் வெள்ளம் போல் ஓடிவிடும். அதனால் உன் துன்பங்களுக்குள் உன்னை மூழ்கடித்து வருத்திக் கொள்ளாதே. தினந்தோறும் செய்ய வேண்டிய கடமையைச் சிறிது நேரமாவது மனஒருமைப்பாட்டுடன் செய்தாலும் போதும். நீ உன் பிறவிப் பயனை பெற்றவனாவாய். துக்கத்தில் வருந்தினால் உன் இதயத்தை இறைவனுக்குத் திறந்து காட்டு. எனக்கு மனஅமைதி தந்தருள்வாய் என்று கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய் . நிச்சயம் மனஅமைதி பெறுவாய்.
பிறரிடம் குற்றம் காணும் ஒருமனிதன் தன் மனத்தையே மாசுபடுத்திக் கொள்வான். ஆனால், மனத்தூய்மை உடையவனோ எல்லாவற்றிலுமே தூய்மையைக் காண்பான்.

தெரிந்ததை சொல்லிக் கொடுங்கள்


நல்ல விஷயங்களைச் சொல்லும் போது கேட்பவருக்கும் தகுதி வேண்டும். தகுதி இல்லாதவனிடத் தில் நல்ல விஷயங்களைச் சொன் னாலும் பயனேதும் விளையாது. உலகியல் இன்பத்தின் மீதானஆசை, புறவுலக இன்பத்தையும், பந்ததத்தையும் தூண்டி விடுவதாக இருக்கும். வைராக்கியத்தின் (பக்தி) மீது வைக்கும் ஆசை நம்மை கட்டுக்களிலிருந்து விடுவிக் கும். உங்களுடைய துன்பங்களைக் கண்ணீருடன் இறைவனிடம் எடுத்துச் சொல்லுங்கள். மனச்சுமையை அவர்முன் இறக்கி வையுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை நிச்சயம் அவர் நிறைவேற்றி வைப்பார். இந்த உலகம் இறைவனுடையது. அவரது கையில் நாம் வெறும் பொம்மைகளே. அவர் நம்மை எப்படி வைத்தாலும், எங்கு வைத்தாலும் அதை நாம் திருப்தியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். விவேகமும், வைராக்கியமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயமாக இருக்க வேண்டியவை. இவை இருந்தால் தான் இல்லறமும் சோபிக்கும். துறவறமும் சோபிக்கும். தானங்களில் சிறந்ததாக இருப்பது ஞானதானமே. தனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு வழங்கிடும் மகத்தான பண்பினை எல்லோரும் பெற வேண்டும்.

Saturday, September 17, 2011

பொறுமைதான் சிறந்த பண்பு

* உண்மை என்பதற்காக முரட்டுத்தனமாக சொல்வதில் பயனில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொன்னால் தான் சொல்பவருக்கும் மதிப்பு, உண்மைக்கும் மதிப்பு என்பதை உணருங்கள்.
* ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய குணங்களில் பொறுமை மிக முக்கியமானது. பொறுமையை விடச் சிறந்த பண்பு வேறு இல்லை.
* பெண்களுக்கு அழகு தருவது தங்கத்தால் ஆன
ஆபரணங்கள் என்று நாம் நினைக்கிறோம்.
உண்மையில் சிறந்த ஒரே ஆபரணம் நாணம் மட்டுமே. நாணத்தை இழந்தவள், பெண் என்ற தகுதியையே இழந்து விடுவாள்.
* மனதிற்கு அமைதி வேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் பின்பற்றவேண்டிய அடிப்படை குணம் பிறர் குற்றங்களைப் பற்றி எண்ணாமல் தன்னைப் பற்றி
அறியத் தொடங்குவது தான்.
* செல்வந்தர்கள் தங்கள் பணத்தைக் கொண்டு
ஆண்டவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். முடியாத ஏழைகளோ உடலுழைப்பால் தம்மால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.
* போதுமென்ற மனநிறைவிற்கு நிகரான செல்வம் எதுவுமில்லை. சாதிக்க முடியாததையும், உண்மையான பக்தியின் மூலமாக நிச்சயம் சாதித்துக் காட்டலாம்.

எல்லாம் விளையாட்டே



* இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததாகவே உலகம் இருக்கிறது. துன்பமில்லா விட்டால் இன்பத்தை ரசிக்கும் தன்மை இல்லாமல் போய் விடும். எல்லா மக்களும் ஒரே நேரத்தில் இன்பத்துடன் இருக்க வேண்டும் என்பது இயலாத ஒன்றாகும். எங்கும் இன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்திற்கே மதிப்பிருக்காது. மதிப்பில்லாத போது இன்பத்தை பெற விரும்பும் முயற்சியும் இல்லாமல் போய்விடும்.
* இறைவன் ஒருவனே நமக்கு நிரந்தரமான உறவு. மற்ற உறவுகளெல்லாம் நிலையில்லாதவை. இருப்பதுபோலத் தோன்றி பாதியிலேயே மறைந்து விடும். இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர். நாம் அவரைப் புரிந்து கொள்வதில் காட்டும் தீவிர தன்மைக்கு ஏற்பவே அவரை அறிந்து கொள்ள முடியும்.
* வீட்டில் மாலை நேரத்தில் ஓய்வெடுக்கும் போது அன்றைய விஷயங்களை எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு கூர வேண்டும். குறிப்பாக நம் மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும். முன்பு எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கிறோம் என்ற சுயசிந்தனையினால் நம் வாழ்வில் சரியான பாதை எதுவென்ற தெளிவு ஏற்படும்.
* மரணத்தைக் கண்ட மனிதன் அழுகிறான். ஆனால், மகான்கள் மரணத்தைக் கண்டு சிரிப்பார்கள். ஏனெனில் உண்மையை உணர்ந்தவனுக்கு எல்லாம் விளையாட்டே என்பது நன்கு தெரியும். 

நீங்கள் ஒரு திறமைசாலியா?




* கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவங் களை நினைத்து மனம் கலங்காதீர்கள். அது நம்மை விட்டு சென்றுவிட்ட ஒன்று. அதை நினைத்து வருந்துவதால் எந்த பயனுமில்லை.
* நாம் மட்டும் சிறந்தவர்கள் என்ற அகந்தை கொண்டு பிறரை அவமதிப்புடன் எண்ணாதீர்கள். உலகில் அற்பமானவர் என்று யாரும் இல்லை. வீட்டை தூய்மைப்படுத்தும் துடைப்பம் கூட முக்கியமான பொருள் தான். சிறிய செயல், பெரிய செயல் என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் மதிப்புடனே செய்யும் பண்பு நம்மை நெறிப்படுத்தும்.
* உங்களுக்கு ஒரு திறமையோ, செல்வமோ அல்லது எந்த சிறப்புத்தன்மை இருந்தாலும், அந்த ஆற்றல்வளத்தை பிறர் நன்மைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இயற்கை நமக்கு அதை வழங்கி இருக்கிறது.
* ஒரு மனிதன் அன்றாடம் தன் கடமையாக ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவது தனக்கும் தன்னைச் சுற்றி இருப்பவர்
களுக்கும் நன்மையைத் தரும். இதனால் உடல், மனம் ஆகிய இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும்.கடமையைச் செய்வதில் தான் உண்மையான ஆனந்தம் உண்டாகும்.
* ஒருவன் தன் கடமைகளை அக்கறையுடன் செய்யும் போது அற்ப நினைவுகள் அவனை தீண்டுவதில்லை. எந்த வேலையும் செய்யாமல் மனிதன் உட்கார்ந்திருந்தால் பலவகையான பயனற்ற எண்ணங்களும், தீய பண்புகளும் அவன் மனதில் புகுந்து விடும்.

பொறுமையே சிறந்த பண்பு


பணம் மனத்தை மாசறச் செய்கிறது. பணத்தில் உம்மை வெகு, அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டீரானால், நீர் அதன் கவர்ச்சிக்குள்ளாவீர், பணத்தின் மோகம் அத்தகையதாகும்.

உலகினில் நீர் காணுகின்ற விபத்துக்கள் யாவற்றிற்கும் பணமே மூலமாகும். பணமானது ஒருவனுடைய மனம் வேறு திசைகளில் விகாரப்படுமாறும் செய்துவிடுகின்றது.

போதுமென்ற மன நிறைவுக்கு நிகரான செல்வம் எதுவும் இல்லை. பொறுமைக்குச் சமமான பண்பு வேறில்லை.

வாழ்க்கையில் ஆபத்துக்கள் வராது என்பது உண்மையல்ல. துன்பங்கள் எப்போதும் தொடரத்தான் செய்யும். ஆனால் அவை நிலைத்து நிற்காது. பாலத்திற்கு அடியில் என்றும் ஓடிக்கொண்டிருக்கும் நீரைப்போல அவையும் நிற்காது போய் விடுவதைக் காண்பாய்.

அஞ்சவேண்டாம்! மனிதப் பிறவி துன்பங்கள் நிறைந்தது. எனவே எதையும் தாங்கிக் கொள்வதே சிறந்தது. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே துன்பங்களைப் பொறுமையாக சகித்துக் கொள்.

எவருமே இறைவனாக இருந்தாலும் மனித வடிவில் வரும்போது மனம், உடல் இவைதரும் துன்பங்களை ஏற்றே ஆக வேண்டும்.

ஒருவனிடம் நல்வினை தோன்றும்போது அவனது சிந்தனைகள் இறைவனை நோக்கித் திரும்புகின்றன. தீவினை அவனிடம் தோன்றுமானால் தீய சிந்தனைகளே அவனிடம் எழுகின்றன. இவை அனைத்தும் இறைவனுடைய திருவுளப்படியே நடக்கின்றன.
எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். இறைவனுடைய பாதார விந்தங்களில் மனிதன் தன்னை முழுமையாக அடைக்கலமாக்கும் போது அவனுக்கு எல்லாவற்றையும் இறைவன் அருளுகிறார்.

கண்ணீருடன் பிரார்த்தியுங்கள்


ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்தா அமைகிறது? அப்பொருளை எவ்வளவு பக்தியுடனும் அன்புடனும் கொடுக்கிறார்கள் என்பதனைப் பொறுத்தே அதனுடைய மதிப்பு கணிக்கப்படுகிறது.

துக்கத்தில் அடிபட்ட உங்கள் இதயத்தை இறைவனுக்குத் திறந்து காட்டுங்கள். கண்ணீர் சிந்தி, எம்பெருமானே! எனக்கு மன அமைதி தந்தருள்வாய் என்று பிரார்த்தியுங்கள்! படிப்படியாக உங்கள் மனம் அமைதி அடையும்.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதன், தனது கர்மத்தின் பலனால் அதே குடும்பத்தில் மீண்டும் மீண்டும் பிறந்து மடிகிறான். இது பல தடவைகள் சம்பவிக்கும் விஷயமாகும்.

தூய்மையே உருவான பகவானைத் தவம் புரிந்தாலன்றி அடைய முடியாது. பகவானுக்கு பக்தர்கள் தம்மை ஆத்மார்ப்பணம் செய்து வருவதும், பகவானிடம் பரிபூரணமான நம்பிக்கை கொண்டு வாழ்வதுமே அவர்களுடைய சாதனையாகும்.

உமது விரல்களும், நாக்கும் செயலற்றிருக்க, மனம் பகவத் ஸ்மரணை செய்துகொண்டே இருப்பதை நீர் பிற்பாடு காண்பீர்.

பிரம்ம மார்க்கம் வெகு கடினமானது. நீர் குருதேவரை (ராமகிருஷ்ணர்) பிரார்த்தித்துக் கொள்ளும். அவர் சரியான காலத்தில் பிரம்ம ஞானத்தை உமக்குத் தருவார்.

என்னை நீ ராதையாகவோ அல்லது உன்னுடைய மனத்திற்கு ஏற்கக்கூடிய வேறு எந்த முறையிலோ கொள்ளலாம். உன்னுடைய தாயாராகவோ கூட என்னை நீ கருதினாலும் போதும்.

அகங்காரத்தால் அந்தகர்களான மக்கள் கர்மத்தைப் பொறுத்தமட்டில் தாமே சுதந்திரமான கர்தாக்கள் என நினைக்கின்றனர். அவர்கள் பகவானைச் சார்ந்து இருப்பதில்லை. தம்மை நம்பியிருப்பவரைப் பகவான் ரட்சிக்கிறார்.























































































 

இறைவனை நேசிப்பதே புண்ணியம்

* ஒருவனால் நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. பணிபுரியும் நேரத்திலும் பக்தி உணர்வுடன் செயல்பட்டால் மனம் தூய்மை பெறும்.
* உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள்.
* குணத்தையோ, குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும் அங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேர்ந்துவிடும்.
* எதையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க, இறைவனை வேண்டுங்கள், அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான்.
* இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இறைவனை மட்டும் நேசிப்பவன் புண்ணியவனாகிறான்.
* உலகம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள், அவன் தனது கருணையை உங்கள் மீது பொழிவான்.
-