குருபக்தியில்
சிறந்த சூர்தாசர்,
கிருஷ்ணபக்தியை வடஇந்தியாவில்
பரப்பிய மகான்களில் வல்லபாச்சாரியாரும் ஒருவர். இவருடைய பக்திநெறியை,
"புஷ்டிமார்க்கம்' என்பர். "புஷ்டி' என்றால் "கிருஷ்ணரின் அருள்'. இவரது சீடரான
சூர்தாசர் கிருஷ்ணர் மீது 25 ஆயிரம் பாடல்கள் பாடினார். குருபக்தியில் சிறந்த
சூர்தாசர், தன்னுடைய பாடல்களில் ஒன்றில் கூட குருநாதர் வல்லபாச்சாரியாரின் பெயரைக்
குறிப்பிட்டதில்லை. பக்தர் ஒருவர், ""நீங்கள் உங்கள் குருவின் பெயரை ஏன் பாடல்களில்
குறிப்பிடவில்லை?,'' என்று கேட்டார். அதற்கு சூர்தாசர், ""நான் என் குருவையும்,
கிருஷ்ணரையும் வேறுவேறாக நினைக்கவில்லை,'' என்று பதிலளித்தார்
No comments:
Post a Comment