* யாரிடமும் கோபம் கொண்டு, சண்டை போடாதீர்கள். சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் மனதில் நிம்மதி கெடுவதை தவிர, பயன் ஏதும் ஏற்படுவதில்லை. பண்பட்ட மனம் உடையவர்கள் யாரிடமும் சண்டையிடுவதில்லை. அவர்கள் கோபப்படும் விதமாக ஏதேனும் நிகழ்ந்தாலும்கூட அமைதியாக இருந்து விடுவர்.
* ஒருவர் உயர்கல்வி கற்றாலோ, சமூகத்தில் உயரிய பொறுப்பில் இருந்தாலோ அவரிடம் கோபப்படும் குணம் இருக்குமானால் அவர் கற்ற கல்வியும், சமூக நற்பெயரும் அந்த நொடியிலேயே அழிந்து விடும். சிறுவிஷயங்களுக்காக சண்டையிடுவது மரியாதையைக் குறைக்கிறது. இதனால் உறவு, அன்பு, பாசம் ஆகியவை அழிந்து, அனாதையாக நிற்கும் உணர்வு ஏற்படுகிறது. * கோபம், மனதில் பல தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. பொறாமை, வஞ்சகம், ஒழுக்கமின்மை போன்ற பல தீய குணங்களையும் உண்டாக்கி விடுகிறது. வீண் விபரீதங்களையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே, கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
* மனிதர்களின் மனம் தண்ணீர் போன்றது. கோபம், ஆற்றாமை போன்ற தீய குணங்கள் கழிவு போன்றவை. தண்ணீர் நல்ல நிலையில் இருக்கும்போது அதனை நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தலாம். அதே நீரில், கழிவு சேர்ந்துவிட்டால் அதன் தன்மையே மாறிவிடுகிறது. எதற்கும் பயன்படுத்தவும் முடியாது. உங்கள் மனம் தெளிந்த நீரைப் போல இருப்பதற்கு முதலில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment