பித்தம் கலங்கி இப் பிறப்பை அறுத்தெறிந்து
உத்தம எண்ணமதால் உறவறுத்து இறை எண்ணம்
நித்தம் தனதாக்கி நீல மேக வண்ணன் பால்
சித்தம் வைத்தானே சித்தன்
என் குரு ரமணருக்கு சமர்ப்பிக்கின்றேன்! "அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கருளிய பத்ம பாதங்களுக்கு இச் சிறியவளின் இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்" "முக்திக்கு எளியது அருணாச்சலம்; சாதனத்தில் சிறந்தது ஆத்மா விசாரம்; உபதேசத்தில் வலியது மோனம்; குருவில் சிறந்தவர் என் இதய ரமணன் " Sri Ramanarpanam Astu!