Showing posts with label -சாரதாதேவியார். Show all posts
Showing posts with label -சாரதாதேவியார். Show all posts

Sunday, September 18, 2011

எண்ணத்தில் குழப்பம் எதற்கு?

* இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும்போது, அப்பொருட்களின் நிலையில்லாத தன்மையை நினைவில் கொள்ளுங்கள். என்றும் நிலையான இறைவனின் புனிதத்திருவடிகளில் அடைக்கலம் அடையுங்கள்.
* பலவிதமான எண்ணங்களையும் மனதில் எண்ணிக் குழப்பம் கொள்ளாதீர்கள். ஒரே ஒரு எண்ணத்தை செயல்படுத்துவதே சிறந்தது. எதிர்மறையான சிந்தனைகளை தொடர்ந்து எண்ணினால் நம் மன ஆற்றல்கள் சிதறடிக்கப்படுகின்றன.
* தூய்மை, தூய்மையின்மை இரண்டும் நம் மனத்தின் வெளிப்பாடுகளே. ஒருவன் தன் குறைகளை உணரத் தொடங்கினால் மற்றவர்களிடம் குறைகளைக் காண முடியாது.
* அலை பாய்வது மனத்தின் இயல்பே. அம்மனத்தைக் கட்டுப்படுத்துவதில் இறைநாமங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இறைவனின் திருநாமங்கள் நம் புலன்களை விட ஆற்றல் கொண்டவை. நமக்கு என்றென்றும் நிலையாக இருக்கின்ற உண்மையான சொந்தம் கடவுள் ஒருவர் மட்டுமே.
* எதைச் சாப்பிட்டாலும் முதலில் கடவுளுக்கு அதை நிவேதனம் செய்ய வேண்டும். கடவுளுக்கு வழிபாடு செய்த உணவை உண்பவர்களின் உடலும், உள்ளமும் தூய்மை பெறுகின்றன.

இளமையிலேயே கடமையாற்றுங்கள்

 யாருடைய குற்றங்களையும் காணாதே. பிறரது குற்றங்களைக் காணத்
தொடங்கினால் அதுவே கடைசியில் உங்கள் இயல்பாகிவிடும்.
* மனித உடம்பு நிலையற்றது. இப்போது இருக்கிறது. ஆனால், அடுத்த கணம்
இல்லாமல் போய்விடும். அதற்குள் உன்னால் முடிந்த நல்ல செயல்களைச் செய்வது மேலானது.
* சாதனை ஆகட்டும். தவமாகட்டும். தீர்த்த யாத்திரை ஆகட்டும். பணம் சம்பாதிப்பது ஆகட்டும். எந்த நல்ல செயலையும் செய்வதென்று தீர்மானித்து விட்டால் அதை இளமையிலேயே செய்துவிடுங்கள்.
* ஆசையின் சாயலே நம் மனதில் அற்றுப் போக வேண்டும். அப்போது தான் பிறவியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
* நீங்கள் ஒரு நற்பணி செய்தால், அதனால் உங்கள் பாவச்சுமை விலகும். தியானம், ஜபம், தெய்வீகச்
சிந்தனை இவற்றால் பாவம் குறைவதோடு புண்ணிய பலன் நம்மை வந்தடையும்.
* யார் என்ன சொன்னாலும், மனதிற்குச் சரியென்று பட்டதை துணிவோடு செய்து முடியுங்கள். நிச்சயம் கடவுளின் துணை உங்களுக்கு கைகொடுக்கும்.
 

Saturday, September 17, 2011

நல்லது நடக்குமென நம்புங்கள்

* ஒரு மனிதனுக்கு நல்லகாலம் வந்தால் மட்டுமே அவன் மனம் ஆன்மிக
விஷயத்தில் நாட்டம் கொள்ளும்.
* ஆசைகள் அனைத்தும் நம்மை விட்டு எப்போது விலகிச் செல்கிறதோ அந்தப்
பிறவிதான் நம்முடைய கடைசிப் பிறவியாகும்.
* கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. உலகைப் படைத்தவன் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான். நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்பி அவனைச் சரணடையுங்கள்.
* நம்மை விட்டு என்றும் நீங்காத உறவு கடவுள் மட்டுமே. அவனுடைய கருணைக்காக மனம் ஒன்றி வழிபடுங்கள். நிச்சயம் பிரச்னைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று மகிழ்வீர்கள்.
* முதலில் ஒழிக்கவேண்டியது சோம்பல் மட்டும் தான். அதிகாலையில் எழுந்து தியானப்பயிற்சியில் ஈடுபடுவதால் அபரிமிதமான ஆற்றலை நாம் பெற்று விடமுடியும்.
*பணியிடத்தில் ஒவ்வொரு வேலையையும் தவமாக எண்ணி புனிதமான பணியாற்றுங்கள்.
* நாம் அனைவருமே தெய்வீகக்குழந்தைகள். வாசனை மிக்க மலர்களை ஆண்டவன் விரும்பி ஏற்பது போல, நம்மையும் கடவுள் அன்போடு அரவணைத்துக் கொள்வார்.