Showing posts with label லாஹிரி மகாசாயர். Show all posts
Showing posts with label லாஹிரி மகாசாயர். Show all posts

Saturday, September 17, 2011

எண்ணிப்பார்!!!

நீ யாருக்கும் சொந்தமில்லை; யாரும் உனக்குச் சொந்தமில்லை என்பதை நினைவில் கொள்.  இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் ஒரு நாள் திடீர் என்று விட்டு விட வேண்டுமென்பதை நினைத்துப் பார். ஆகையால் இறைவனிடம் இப்போதே அறிமுகப் படுத்திக் கொள்.  தெய்வீக ஞானமென்னும் பலூனில் தினமும் சவாரி செய்து வரப் போகின்ற மரணம் என்னும் சூட்சும யாத்திரைக்கு உன்னைத் தயார் செய்து கொள். மாயையினால் நீ உன்னைச் சதையும் எலும்பும் கூடிய ஒரு  கட்டான உடலாகக் காண்கின்றாய். அது ஒரு துன்பக் கூடமே தவிர வேறல்ல. இடை விடாது தியானம் செய். அதனால் நீ சீக்கிரமே உன்னை எல்லா விதமான துக்கத்திலிருந்தும் விடுபட்ட எல்லையற்ற சாரமாக உணர்வாய். உடலின் கைதியாக இருந்து கொண்டிருப்பதை நிறுத்து.  யோகம் என்னும் ரகசியத் திறவு கோலின் மூலம் பரம்பொருளினுள்  தப்பித்துக் கொள்ளக் கற்றுக் கொள்.
 உன் மனத்திலிருந்து பிடிவாதமான சாத்திரக் குப்பைகளைக் களைந்தெறி. நேரடி அனுபவம் எனும் தெளிந்த அறிவைப் பெறு.  உன் ஆற்றல் வாய்ந்த வழிகாட்டுதலுக்கு உன்னைப் பொருத்தமாக்கிக் கொள். வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு குழப்பத்திற்கும் தெய்வீகக் குரலிடம் விடையுண்டு.