Showing posts with label உன்னை நீ அறிவாய். Show all posts
Showing posts with label உன்னை நீ அறிவாய். Show all posts

Friday, October 15, 2010

முன்னோக்கிய பார்வை

நமது வாழ்க்கை முறை, வாழ்கையின் நோக்கம், இவற்றை நாம் ஆராய்ந்து கொள்ள வேண்டும். நல்ல நல்ல செயல்கள் மூலம் நன்மைகளைப் புண்ணியங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். இறைவனுடன் கலப்பதற்கு நாம் மேற்கொண்டிருக்கும் பயணம் இதனால் துரிதப் படுத்தப்படும்.
இறைவனை அடையும் முயற்சி தொடுவானத்துக்கும் அப்பால் தேடுவது போன்றது. அதே நேரத்தில் இதயத்துக்குள் தேடுவோமானால் இறையருளை
 நெஞ்சத்திலேயே  உணரப் பெறலாம். அந்த இறைவனை நாடிச் செல்லும்
முயற்சிக்கும் வரம்புகிடையாது.  
அந்த இறை ஞான மெய்   ஒளியை நம் இதயத்திற்குள் நிறுத்தி, அதன் கட்டளைப் படி இயங்க ஆரம்பித்தோமானால் நம் வாழ்க்கையும் பயனுள்ளதாய்ப் பிரகாசமடையும் என்பது உறுதி. 

சுபம்!!!