- கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப்படமாட்டார்கள்.
- நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு. கடவுளை உணர்வதற்கு நாம் செய்ய வேண்டியது சும்மா இருப்பது தான், சும்மா இருப்பதைப் போல சிரமமான செயல் வேறு இல்லை.
- அமைதியே நமது இயல்பான சுபாவம். எனவே அதைத் தேடவேண்டாம். உபத்திரவப்படுத்தும் எண்ணங்களை ஒழித்தாலே போதும்.
- நாமே தான் நமது பிரச்னைகளுக்கு மூலகாரணம், எனவே, நாம் யார் என்பதை நன்கு புரிந்து கொண்ட பிறகு, கடவுள் ஆராய்ச்சியில் இறங்குவது நல்ல பயன் தரும்.
- மனதை மெதுவாக சிறுகச் சிறுக அடக்கி தன் வழிக்குக் கொண்டு வரவேண்டும், இதற்கு கடும் பயிற்சியும் வைராக்கியமும் தேவை.அறிவு, நம்மிடத்திலுள்ள அறியாமையைப் போக்குகிறது, அது புதிதாக எதையும் உருவாக்குவதில்லை.
என் குரு ரமணருக்கு சமர்ப்பிக்கின்றேன்! "அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கருளிய பத்ம பாதங்களுக்கு இச் சிறியவளின் இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்" "முக்திக்கு எளியது அருணாச்சலம்; சாதனத்தில் சிறந்தது ஆத்மா விசாரம்; உபதேசத்தில் வலியது மோனம்; குருவில் சிறந்தவர் என் இதய ரமணன் " Sri Ramanarpanam Astu!
Wednesday, June 4, 2014
சும்மா இருப்பது சிரமம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment