பாடல் :
"வான்வாழி வானையளி மாதவரும் வாழி
கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
ஆன் வாழி அமரர் முத லிருடி சித்தர் வாழி
நான் நீ யென லகற்று நாதாக்கள் வாழியவே".
பொருள் :
கார்மேகம் சூழ்ந்து , மழை நீர் தந்து, இந்த உலக உயிர்களை
காக்கும் வான மண்டலம் எந்த மாசும் இல்லாமல் வாழ்க!.
இந்த பூமியில் மனிதர்களாக பிறந்து ,வாழ்ந்து , என்னை
உருவாக்கி , உயிர் தந்து , வாழ்க்கை தந்து மறைந்து ,
வான் உலகில் 'பிறவியில்லாப் பெருவாழ்வு' பெற்று , மிகப் பெரிய தவத்தன்மை பெற்ற என் தாய் , தந்தை ,வம்சாவழி
முன்னோர்கள் வாழ்க!.
இந்த பூமியில் தன்னுயிர் போல் நாட்டையும் , தன் நாட்டு
மக்களையும் பசி , பஞ்சம், இல்லாமல் நீதி , நேர்மை , கொண்டு
ஆட்சி செய்யும் , நல்ல ஆட்சி நிர்வாகம் செய்யும் அரசர்கள்,
நிர்வாகிகள் வாழ்க!.
எனக்கு பூரண ஞானம் அறிய செய்து , உலகினையும் , உலக
மக்களையும் , உலக சமுதாயத்தை புரிய செய்து, இந்த பிறவியில் நான் யார் ?. என்பதை அறிய செய்து
உலகத்தையும் , இந்த சமுதாய விதிகளை அறிய செய்து ,
நன்மை , தீமை , உண்மை ,பொய் , என அனைத்தையும்
பகுத்து அறியும் அறிவான 'ஆறாவது அறிவை' அறியும் படி
செய்து , இந்தப் பிறவியில் எனக்கு எது நல்லது ?. எது கெட்டது என்ற விபரங்களை போதித்து ,என்னையும் தங்கள்
சீடனாக ஏற்று பூரண ஞானத்தை போதித்து வரும் என்
குருமார்கள் வாழ்க !.
இந்த உலகில் பிறந்து வாழும் மனிதர்கள் , பசு முதலான அனைத்து சீவ ராசிகளும் வாழ்க! .
இந்த உலகில் பிறந்து தேசத்திற்கும் , மக்களுக்கும் தொண்டு
செய்து வாழ்ந்து அமரத்துவம் பெற்று , இன்றும் தான் செய்த
நற்செயல்களால், மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு
இருக்கும் ஞானிகள் , மகான்கள் , தலைவர்கள் , பெரியோர்கள்
நாமம் வாழ்க!.
உலக மக்களுக்கு உண்மை ஞானம் , உலகைப்பற்றிய
விழிப்புணர்வு போதித்த சித்தர்களும் , ரிஷிகளும் ,
முனிவர்களும் வாழ்க !.
நான் , நீ , ஜாதி ,மதம் , என பேதம் பிரிவினை பாராமல் உலக
உயிர்களை , மனிதர்களை , சீவன்களை ஒன்று போல் நேசித்து வாழும் ஞான பெரியார்கள் , வழிகாட்டிகள் வாழ்க! வாழ்க! வாழ்க!.

No comments:
Post a Comment