Spiritual Path ஆன்மீகப் பாதை

என் குரு ரமணருக்கு சமர்ப்பிக்கின்றேன்! "அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கருளிய பத்ம பாதங்களுக்கு இச் சிறியவளின் இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்" "முக்திக்கு எளியது அருணாச்சலம்; சாதனத்தில் சிறந்தது ஆத்மா விசாரம்; உபதேசத்தில் வலியது மோனம்; குருவில் சிறந்தவர் என் இதய ரமணன் " Sri Ramanarpanam Astu!

Friday, February 20, 2015

சிவராத்திரி விரதத்தின் மகிமை பற்றிய சிறிய கதை

  ஒரு ஊரில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான்..அவனுக்கு ஒரு மந்திரி இருந்தான். அரசவையில் மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான்..அந்த மந்திரி க்கு இரு மகன்கள்..ஒருவன் பெயர் பாலன் ..

மற்றவன் பெயர் வேத நெறி - இருவரும் மந்திரியின் சொல் பேச்சை கேட்காமல் தன்னுடைய இஷ்டம் போல வாழ்பவர்கள் ..
அதனால் வயது வந்த பின் தனது சொத்தை உடனடியாக பிரித்து தரும்படி கேட்டுச்சென்றனர்..
அரசனுக்கு மந்திரி மீது மிகவும் பிரியம்..அவர் அறிவுத் திறமை குறித்து நன்கு அவரிடம் அன்பும் பண்பும் நிறைந்ததாக இருப்பார்.. ஒருநாள் அரசவையில் மந்திரியின் பெருமை கண்டு மாதிரிக்கு அரசன் ஒரு நவரத்தினங்களால் செய்யப்பட்ட அழகிய மோதிரத்தை பரிசாக கொடுத்தான்.. அன்று மந்திரி அந்த மோதிரத்தை வீட்டிற்கு எடுத்து சென்று பத்திரமாக வைத்து கொள் என்று தனது மனைவியிடம் ஆணையிட்டார்..ஒரு நாள் இதை அறிந்து தனது வீட்டிற்கு வந்த வேதநெறி என்ற இரண்டாமவன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அந்த மோதிரத்தை எடுத்து திருடி ஒரு அழகான நாட்டிய பெண்ணுக்கு பரிசளித்தான்,,
மறு நாள் அந்த பெண் அரசவையில் அரசன் முன் நடனம் ஆடிகொண்டிருக்கும் வேளையில் அவளது கையில் இருந்த மோதிரத்தை பார்த்து அரசனுக்கு மிகவும் அதிர்ச்சி.. நாம் மந்திரிக்கு கொடுத்த மோதிரமாச்சே!! இது எப்படி இந்த பெண்ணின் கையில் என்று யோசித்தவாறு மந்திரியை அழைத்து உங்களிடம் தந்த அந்த நவரத்தினம் பதித்த மோதிரத்தை எடுத்து வாருங்கள் என்று ஆணை இட்டான்.. மந்திரியும் வீட்டிற்கு சென்று பார்க்கிறார்..மோதிரம் காணவில்லை.. வுடனே மந்திரி இல்லை என்ற விபரத்தை கூறியவுடன் அரசன் அந்த பெண்ணிடம் யார் உனக்கு மோதிரத்தை கொடுத்தார்கள் என்று கேட்டவுடன்,அவளும் வேதநெறி எண்டு மந்திரி மகனை சொல்ல அங்கிருந்த மந்திரி தான் மகன் செய்த காரியத்தை நினைத்து மிகவும் வேதனை அடைந்து சில காவலாளிகளை கூட்டிட்டு மகனை கொல்ல போகிறேன் என்று செல்கிறார்.. மகன் வேதநெறியும் விஷயம் அறிந்து வேகமாக ஓடுகிறான்..
அன்று காலை ஆரம்பித்தது ஓட்டம். முடியவில்லை..
அன்று சிவராத்திரி தினம். அவன் காலையில் இருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் காவலாளிகளுக்கு பயந்து விட்டு ஓடி கிட்டே இருக்கின்றான்.. இறுதியில் ஒரு சிவாலயம் வருகிறது.. அங்கு எம்பெருமானார் சிவனுக்கு சில நெய்வைத்தியங்கள் பக்தர்கள் படைத்தது இருந்தனர்.. அவன் ஓட்டம் தாங்காமல் ஈசன் கருவறைக்குள் செல்கிறான்..ஒரு சிறிய விளக்கு மட்டும் அணைந்து போகின்ற நிலைமையில் உள்ளது..அவன் தான் வயிற்று பசி தாங்காமல் அந்த இறைவனின் அறைக்குள் ஏதேனும் நெய்வைத்தியம் உண்பதற்காக அந்த விளக்கை தூண்டினான்..தூண்டிய உடன் கோவிலில் இருந்து சிலர் அவனை அடிக்கலானர்.
அவன் சப்தம் கேட்டவுடன் எந்த பிரசாதத்தையும் சாப்பிடாமல் ஓடத்துவங்கினான்.. இறுதியில் பசி தாங்கமுடியாமல் இறந்து போனான்..
உடனே அவன் இறந்த உடன் எம தூதர்கள்
அவனை கூட்டிச்செல்ல ஒருபுறம் வருகின்றனர்., மறுபுறம் கைலாயத்தில் இருந்து எம்பெருமானாரால் தேவர்கள் அழைத்துச்செல்ல வருகின்றனர்.. எமதூதர்கள் சரியாக அவனை தொடும் வேளையில்,தேவர்கள் அந்த வேத நெறியை விட்டு விடுங்கள்..அவன் கைலாயத்தில் சிவபெருமனரால் அழைக்கப் பட்டிருக்கின்றான் என்ற வுடன் எமதூதர்கள் என் எதற்கு என்று வினவினார்கள்..
அதற்கு தேவர்கள் கூறிய பதில்
அவன் இறந்த நாள் முதலில் சிவராத்திரி
அவன் அன்று பச்சை தண்ணீர் கூட குடிக்க வில்லை..
அவன் ஈசனின் கருவறைக்குள் அணையும் நிலையில் இருந்த விளக்கை தூண்டினான்,,
என்று கூறியவுடன் எமதூதர்கள் தேவர்களிடமே அவனை விட்டுவிட்டனர்..
அவனும் கைலாயமலையில் ஈசனின் முக்தி பேற்றிற்கு ஆளானான்.
தெரியாமல் நடந்தது அந்த வேதநெறியின் செயல்கள்,,
அதற்கே அவனுக்கு முக்தி கிடைத்தது என்றால்,நாம் தினமும் கடவுளை மனதை ஒருமுக படுத்தி இறைவனை வழிபட்டால் எந்த அளவு இறைவனிடம் பேரருள் பெற்று முக்திநிலையை அடையலாம்..
Posted by ரமணி. N at Friday, February 20, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, February 19, 2015

சித்தர் பாடல்கள் ,(ஒலி அலைகளில் ....)

சித்தர் வணக்கம்,
 மெய் சிலிர்க்கும் பாடல்கள் !!! .,  அரிய ரம்யமான சித்தர் பாடல்களை .,இணையத் தளத்தில்  வெளியிட்ட  முகமறியா நண்பருக்கு மனமார்ந்த !! நன்றிகள் கோடி !!!
சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் ,
http://www.4shared.com/file/191245638/d44bf476/01_sivavakkiyar__001-140_.html
http://www.4shared.com/file/191245856/6f3753fd/02_sivavakkiyar__141-280_.html
http://www.4shared.com/file/191246257/7124953/03_sivavakkiyar__281-420_.html
http://www.4shared.com/file/191246408/ee57dc35/04_sivavakkiyar__421-550_.html
பத்திரகரியார் சித்தர்  பாடல்கள் ,
http://www.4shared.com/file/191245761/d122d2a0/02_BADRAGIRIYAR.html
பாம்பாட்டிச்சித்தர் பாடல்கள் ,
http://www.4shared.com/file/191245977/2bc46bde/03_PAAMPAATTI_SIDDHAR.html
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்,
http://www.4shared.com/file/191246305/95a9b60d/04_AGAPPEI_SIDDHAR.html
குதம்பைச்சித்தர் பாடல்கள்
 http://www.4shared.com/file/191246460/b6d6f381/05_KUDHAMBAI_SIDDHAR.html
அழுத்தவும் : ==>  மேலும் பல சித்தர் பாடல்கள் ,திருமுறைகள் ,
இரவு நேரங்களில் இந்த சித்தர் பாடல்களை
கேட்டு பாருங்கள் ஞானமது உங்களை தாலாட்டும் !!!
இப்படிக்கு ,

சித்தர் பைத்தியம் ,
Posted by ரமணி. N at Thursday, February 19, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, January 30, 2015

ஓஷோவின் விளக்கம்


கேள்வி – பதில்
தியானம் என்றால் என்ன - பகுதி – 1
தியானம் என்ற இந்த வார்த்தை தவறாகவும் குழப்பமானதாகவும் இருக்கலாம், ஏனெனில் தியானம் என்பதற்கு ஆங்கிலத்தில் மூன்று வார்த்தைகள் உள்ளன. கான்சென்ட்ரேஷன் – கான்டெம்லேஷன் – மெடிடேஷன் – அதாவது ஒருமுகப்படுத்துதல், சிந்தனை, தியானம். ஆனால் இந்த மூன்று வார்த்தைகளுமே சமஸ்கிருத வார்த்தையான தியானா என்ற வார்த்தையை மொழிபெயர்க்க போதுமானதாக இல்லை. புத்தர் உபயோகித்த பாலி மொழியில் முதலில் அது ஜானா என்று கூறப்பட்டது. ஜானா என்ற பாலி மொழி வார்த்தைதான் சமஸ்கிருத மொழியில் தியானா என்று உச்சரிக்கப்பட்டது. போதிதர்மர் புத்தரின் கொள்கைகளை சீனாவுக்கு எடுத்துச் சென்றபோது அது ஜானாவிலிருந்து சானா என்று மாறியது. ரின்ஜாய் சீனாவிலிருந்து அந்த கொள்கையை ஜப்பானுக்கு எடுத்துச் சென்ற போது சானா என்பதிலிருந்து அது ஜென் என்று உருமாறியது. அது புத்தரின் ஜான் அல்லது ஜானா என்பதற்கு அருகில் வருகிறது.
ஆனால் அதற்கிணையான வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை. ஏனெனில் மெடிடேஷன் என்ற ஆங்கில வார்த்தை எதன் மீதாவது கவனம் வைப்பது என்ற அர்த்தத்தை கொடுக்கிறது. எதன் மீதாவது கவனத்தை குவிப்பது, எதைப் பற்றியாவது சிந்தனை செய்வது, எதைக் குறித்தாவது தியானம் செய்வது என்பது போல – ஆனால் தியான் அல்லது ஜென் என்றால் எந்த பொருளும் இல்லை.
ஜென் என்றால் ஒருமுகப்படுத்துவதோ, சிந்தனை செய்வதோ, எதன் மீதாவது தியானம் செய்வதோ அல்ல. ஏனெனில் அதற்கு எந்த பொருளும் இல்லை. நீ இருக்கிறாய், அவ்வளவுதான். மௌனமாக, மனமின்றி, எந்த எண்ணங்களுமின்றி இருக்கிறாய்.
இதனால்தான் சிகிடோ தியானத்தைப் பற்றி கூறும்போது ஒருவர் ஞானமடைய தியானமோ அல்லது எந்த வித இடைவிடாத முயற்சியுமோ தேவையில்லை. என்று கூறுகிறார்.
ஆனால் உங்களுடைய புரிதலுக்காகவும் தெளிவுக்காகவும் நான் தியானத்தைப் பற்றி பேசும்போது மெடிடேஷன் என்ற இந்த வார்த்தையைத்தான் உபயோகிக்க வேண்டி வருகிறது. இது ஒரு பொருளற்ற வார்த்தை, இதற்கு தியானம் அல்லது ஜென் ஆகியவற்றின் குணம் கிடையாது. ஆனால் ஆங்கிலத்தில் வேறு வார்த்தை இல்லாததால் நான் இதை உபயோகிக்கிறேன்.
வேறு எந்த வார்த்தையும் இல்லை என்பதற்கு ஒரு காரணம் உண்டு. மேற்கத்திய நாடுகளில் தியானம் என்ற நிலை வரை வரவேயில்லை. ஒருவர் வெளியுகத்திலும் உள்உலகத்திலும் எதுவும் செய்யாமல் வெறுமனே தானாயிருக்கும் நிலை வரை வளரவேயில்லை. ஒருவர் வெறுமனே ஒரு ஆழ்ந்த அமைதியில் இருப்பில் இருத்தல். அது உன்னை உன் மையத்தினுள் கொண்டு வரும், நீ உள் மையத்தில் இருக்கும் கணம் நீயும் ஒரு புத்தனாக ஞானமடைந்த ஒருவராக வளர்கிறாய். உன்னுடைய விழிப்புணர்வு முதல் முறையாக, எப்படி இரவு முடிந்து சூரியன் உதயமாகி காலை வந்தவுடன் ஒரு தாமரை தனது இதழ்களை விரிக்கிறதோ அப்படி தனது இதழ்களை விரிக்கிறது.
சிகிடோ கூறியது மிகவும் சரிதான் எந்த வித முக்கியமான ஒழுங்குமுறையும் தேவையில்லை. எந்த வித குறிப்பிட்ட விதிமுறையும் தேவையில்லை. எந்த வித மனம் குறித்த முயற்சியும் தேவையில்லை. அதைத்தான் அவர் தியானம் என்று குறிப்பிடுகிறார். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்தல் மட்டுமே தேவை. மனம், உடல், இதயம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து விடு. இதுதான் சாலையின் எல்லை என்ற இடம் வரை எல்லாவற்றையும் கடந்து சென்று கொண்டே இரு. அந்த எல்லையில் நீ மட்டுமே இருப்பாய்.
பாஷோ கூறுகிறார் :
அமைதியாக அமர்ந்திரு
எதையும் செய்யாதே
வசந்த காலம் வரும்
புல் தானாகவே வளரும்.
நீ எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை, வெறுமனே அமர்ந்திரு, எதையும் செய்யாதே. ஏனெனில் நீ செய்யும் எதுவும் உன்னை உன்னிடமிருந்து எடுத்து சென்று விடும். நீ எதையும் செய்யாத போது முழு சக்தியும் உள்ளே சேருகிறது, அது வேறு எங்கும் செலவிடப்படுவதில்லை. நீ உனது மனதை கடக்கும் போது உனது எண்ணத்தில் செலவிடப்பட்டுள்ள சக்தி விடுவிக்கப்படுகிறது. நீ உனது இதயத்தை கடக்கும்போது உனது உணர்ச்சிகளில், உணர்வுகளில், பந்தபாசங்களில், பிடிப்புகளில் சிக்கியுள்ள சக்தி விடுவிக்கப்படுகிறது.
நீ இப்போது அளவற்ற சக்தியால் நிரம்பி இருக்கிறாய். இந்த அளவற்ற சக்தி உனக்கு பிரபஞ்சத்தின் முதல் சுவையை தரும். இந்த அளவற்ற சக்தி மிகபிரம்மாண்டமான தூண் போல விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நிற்கும் போது நீ அண்டத்துடன் உள்ள தொடர்பை காண்கிறாய். நீ இனிமேலும் தனியானவன் அல்ல. உண்மையில் நீ என்பது இல்லை. பிரபஞ்சம் மட்டுமே இருக்கிறது. பின் இந்த பிரபஞ்சம், இந்த அண்டம், இந்த வாழ்வு எல்லாமே ஒரு நடனம்தான்.
நான் உங்களுக்கு நடனமாட சொல்லிக் கொடுக்கிறேன்.
நான் உங்களுக்கு நேசமானவர்களாக இருக்க சொல்லிக் கொடுக்கிறேன்.
நான் முழுக்க முழுக்க வாழ்வுக்கு ஆதரவானவன், உங்களது அனைத்து மதங்களும் வாழ்க்கைக்கு எதிரானவை.
நான் இந்த நிகழ்கால கணத்திற்கு முழுக்க முழுக்க ஆதரவானவன். இறந்த காலத்தில் நுழைய வேண்டியதில்லை, ஏனெனில் அது நினைவு மட்டுமே. உனது நினைவு எந்த விதத்திலும் பிரபஞ்சத்துடன் தொடர்புடையதல்ல. எதிர்காலத்தில் நுழைய வேண்டியதில்லை, ஏனெனில் அது கற்பனை மட்டுமே.
இங்கே மட்டுமே இரு, நீ ஆச்சரியப்படுவாய். நீ இப்போது இங்கே மட்டுமே இருந்தால் எல்லா எண்ணங்களும் மறைந்து விடும். ஏனெனில் எல்லா எண்ணங்களும் இறந்த காலத்தை சேர்ந்ததாகவோ எதிர் காலத்தை சேர்ந்ததாகவோ தான் இருக்கும். எந்த எண்ணமும் நிகழ்காலத்தை சேர்ந்ததில்லை.
நிகழ்காலம் மிகவும் தூய்மையானது, சுத்தமானது, தெளிவானது, அது அண்டத்துடன் இணைய ஒரு இணைப்பு. இதுதான் ஜென். இதுதான் நிலையான வாழ்வினுள் நுழைய இருக்கும் சாவி. நிலையான வாழ்வின் உணர்வே எல்லா பதட்டங்களையும், முதுமை இறப்பு பிறப்பு நோய் ஆகியவற்றின் வேதனைகளையும் உன்னிடமிருந்து எடுத்துவிடும்.
நீ பிறக்கவேயில்லை, மேலும் நீ இறப்பதேயில்லை.
இந்த உடல் மட்டும் தான் மாறிக் கொண்டேயிருக்கிறது
நீ வீடுகளை மட்டும்தான் மாற்றிக் கொண்டேயிருக்கிறாய்
ஆனால் நீ உண்மை, நிஜமானவன்.
சத்தியம் வெளியே எங்கோ இல்லை, அது ஆழ் மையத்தில் உள்ளே இருக்கிறது.
அதனால் ஜென் என்பது எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பது. அந்த ஆழ்ந்த மௌனத்தின் இருப்பில் நீ தளர்வு கொள்ள கொள்ள வசந்த காலம் வரும், புல் தானாகவே வளரும். நீ திடீரென மலர்வாய் – உனது கண்களில் ஒரு ஆழம் வரும். உனது தோற்றத்தில் ஒரு புதிய பொலிவு வரும், உனது ஒவ்வொரு செயலும் சந்தோஷமானதாக மாறும். அது மரம் வெட்டுவதாக இருந்தாலும் சரி, கிணற்றிலிருந்து நீர் இறைப்பதாக இருந்தாலும் சரி அது என்னவாக இருந்தாலும் சரிதான்.
I celebrate myself : God is no where life is nowhere che # 1
Posted by ரமணி. N at Friday, January 30, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, January 16, 2015

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள் ...

1கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
2. கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும்     கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சனசக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் .
3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து      நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்,ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.
4.இக் கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
5.இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை . 
6.இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும் ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை மீந்து போய் வீணானதும் இல்லை.
7.இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.
8.சிங்கத்துவாராவின் முதல்படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும் . இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.
Posted by ரமணி. N at Friday, January 16, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, January 10, 2015

நெற்றிக்கண் - தெரிந்துகொள்வோம்


நெற்றிக் கண் என்று ஒன்று உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை.சிவனை முக்கண்ணன் என்று அழைத்து வணங்குவார்கள். நக்கீரரை சோதிப்பதற்காக வந்த சிவன் தனது நெற்றிக்கண்ணை திறந்தார் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
கடவுள் என்று ஒருவரே இல்லை என்றும், இந்து மதத்தில் கூறப்படுவது ஜஸ்ட் புராணக்கதை என்றும் கூறும் அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் வாழும் நாம் நெற்றிக்கண் என்று ஒன்று உண்டு என்று கூறினால் அதற்கும் ஏதாவது வாதம் வைப்பார்கள்.
பகுத்தறிவு என்றால் என்ன என்றே விளங்கிக் கொள்ளாமல், இறை நம்பிக்கையற்ற தாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்றும் இறை நம்பிக்கையுள்ளவர்கள் (எம் மதமானாலும்) பகுத்தறிவு அற்றவர்கள் என்றும் கூறி மிகவும் வெப்பமான காலத்திலும் கருப்புச்சட்டையை அணிவது எந்த பகுத்தறிவில் சேர்ந்தது என்று தெரியவில்லை.
ஆனால் இந்துமதம் பகுத்தறிவுள்ள விஞ்ஞானத்துடன் இணைத்த மதம்.அதன் சிறப்பை மெல்ல மெல்ல இப்போது தான் சில மேற்கத்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து நமது அறிவு ஜீவிகளுக்கு புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோவில்கள் கட்டி வைத்ததற்கும், பரம்பொருள் ஒன்றே என்று கூறும் இந்துமதம் கடவுளை பல நாமங்களில் அவரவர் விருப்பப்படி வழிபட அனுமதிப்பதற்கும் மற்றும் அதன் சில கொள்கைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் பின்னால் பலமான காரணங்கள் உள்ளன.இதை விளங்கிக்கொள்ளும் அறிவு குறைவாக உள்ள காரணத்தால் அதை பொய் என்றோ மூட நம்பிக்கை என்றோ கூறக்கூடாது.
அதன் சில வழக்கங்களை சுயநலத்திற்காக சிலர் துஷ்பிரயோகம் செய்தால் அதற்கு மதம் பொறுப்பல்ல. எம்மதமானாலும் அன்பையும் கடவுளை அடையும் வழியயும்தான் கூறும்.ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு மதங்களை பழிப்பது சரியல்ல.
இப்போது மூன்றாவது கண்ணை பற்றி பார்ப்போம்.
“த்ரியம்பகன்” என்பது சிவனின் திருநாமங்களில் ஒன்று. இது மூன்றாவது கண்ணைக் குறிக்கும். மற்ற இரண்டு கண்களும் புறக்கண்கள். பார்வையில் படும் குப்பைகளையெல்லாம் அவை மூளைக்கு புகட்டிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக யாரையாவது பார்த்தால், பழைய அபிப்பிராயங்கள் உங்களுக்குள் புறப்படுகின்றன. இந்த இரண்டு கண்களும் உண்மையை பார்ப்பதில்லை. எனவே அறிதலுக்கென்றே சிவனின் மூன்றாவது கண் திறக்கிறது. அதுவே ஞானக்கண். இந்திய மரபில் அறிதல் என்பது படிப்பால் பெறுவதல்ல. புத்தகங்கள் தருவதல்ல. ஆழ்ந்த புரிதலையே அறிதல் என்கிறோம். இந்த மூன்றாவது கண் திறக்கிற போதுதான் சிவனை உணர்கிறீர்கள்.
படித்த மனிதர்கள் எல்லோருக்குமே ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த கதை தெரியும். ஆப்பிள் பழம் கீழே விழுந்தது பற்றியே அனைவரும் பேசுகிறார்கள். ஆனால், செடியாக இருந்த அந்த ஆப்பிள் மரத்தை ஒரு சக்தி மேல் நோக்கி வளர்த்திருக்கிறதே அது குறித்து யாரும் பேசுவதில்லை.
ஆனால் இப்போது ஆய்வுகளின் மூலம் மனிதனுக்கு ஒரு மூன்றாவது கண் இருப்பதாகவும் அதன் மூலம் பல அற்புதங்கள் நிகழ்த்தமுடியும் என்றும் தெரியவருகிறது. இந்த மூன்றாவது கண் பெயர் பினியல் சுரப்பி. (Pineal Gland).
பிரெஞ்சு அறிவியல் நிபுணரான Rene Descartes (René Descartes was a French philosopher, mathematician and writer who spent most of his life in the Dutch Republic (1596-1650) இதனை ஆன்மாவின் இருக்கை என குறிப்பிடுகிறார். இது இந்துக்களின் ஆக்ஞா சக்கரத்துடன் ( நெற்றி சக்கரம்) தொடர்புடையது.
சிவபெருமானின் நெற்றிக்கண் எந்த வடிவில் எப்படி காணப்படுகிறதோ அதே மாதிரி இதுவும் அமைந்துள்ளது.
இந்த பினியல் சுரப்பி ஒளியின் மூலம் தூண்டப்படுகிறது.இது மெலெண்டொனின் எனும் திரவத்தை சுரக்கிறது. இத்திரவம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மன அழுத்தத்தை குறைக்கிறது.
நமது மதம் இந்த சுரப்பியை தூண்டுவதன்மூலம் ஞானம்/ பேரின்பம் அடையலாம் என கூறுகிறது. இந்த மூன்றாவது கண்ணை தூண்டுவதன்மூலம் முக்காலங்களை அர்யும் தன்மை,விழிப்புணர்வு, பல நல்ல சக்திகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
குண்டலினி தியானம் மூலம் இந்த மூன்றாவது கண்ணை தூண்டலாம். நம் குருமார்கள் தீட்சயளிக்கும் பொருட்டு புருவ மத்தியில் ஆசீர்வாதம் செய்வது எத்தன பொருட்டு என்பது இப்போதாவது புரிகிறதா?
தகுந்த பயிற்சியுடனும் நம்பிக்கையுடனும் இந்த ஆக்ஞா சக்கரத்தை இயங்கச்செய்து அளவில்லா ஆனந்தத்தையும் சக்தியையும் பெறலாம்.ஒருவர் தகுந்த பயிற்சி பெற்றால் நினைவுகளைக் குவித்து நெற்றிப்பொட்டின் ஊடாக வெளியேற்றி தீயை கூட வரவைக்கலாம் . (சிவன் திரிபுரங்களை எரித்த கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்).
மனதிலுள்ள தீய எண்ணங்களை எரித்து நல்ல எண்ணங்களை வளர்க்கலாம்( சிவன் காமனை எரிந்தத கதையும் ஏன் முருகப்பெருமான் தோன்றிய கதையும் அனைவரும் அறிந்ததே )
இதை தகுந்தபயிற்சியிடன் எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருந்தால் நாம் திறமைசாலிகளாக வாழலாம். அப்படி நாம் வாழக் கூடாது என்று நினைக்கும் சிலர்தான் இதயெல்லாம் போலி என்று கதைபரப்பினார்களோ தெரியவில்லை.
நம் முன்னோர்களின் நல்ல சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் நமது அறிவீனத்தால் போலி என்று கேலி செய்து இழந்து விட்டோம். இனியாவது விழிப்போம்.
''இந்துமதம் அர்த்தமுள்ளது. பொருள் பொதிந்தது''
Posted by ரமணி. N at Saturday, January 10, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, January 1, 2015

ஓஷோ அமைதி பற்றி

 
தியானம் செய்யும்போது சில நேரங்களில் அமைதிநிலை நீரோடை போல வந்து சேரும். கவனித்துக் கொண்டிரு. அமைதி நிலை நிகழ்கிறது, நான் சாட்சி மட்டுமே என்பது போல தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிரு. சில நேரங்களில் ஆனந்தம் நீருற்று போல பொங்கி வரும், ஒவ்வொரு நாடி நரம்பிலும் பரவும், அதையும் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிரு. எதையும் பிடித்து தொங்காதே.
உனது வெறுமை ஆனந்த தன்மை, அமைதி நிலை, பிரகாசம் ஆகியவற்றின் அலைகளை அனுமதிக்கும்.
உன்னுடன் நீ அமைதியாக இருத்தலே அமைதி நிலை.
உனக்குத் தேவை உயிர்த்துடிப்புள்ள அமைதிநிலை மற்றும் சுறுசுறுப்புடன் கூடிய மௌனம்.
உள்ளார்ந்த மௌனமும் உள்ளார்ந்த அமைதியும்தான் முழுமையான தளர்வு நிலையின் கனிந்த நிலை.
உள்ளார்ந்த அமைதி தியானத்தின் பக்க விளைவே.
உள்ளார்ந்த அமைதியின் நிழல் போல அன்பு தொடர்ந்து வரும்.
வானம்
உனது உள்இருப்பு என்பது உனது உள்வானமே. சூரியன், சந்திரன், நட்சத்திரம், பூமி, கோளங்கள், இந்த முழு பிரபஞ்சம் என யாவற்றையும் உள்ளடக்கிய வானம் அது. எல்லாவற்றிற்க்கும் இடம் தரும் வானம் அது. இருக்கும் அனைத்திற்க்கும் பின்புலமாக விளங்கும் நீலவானம் அது. எல்லாமும் வரும் போகும். ஆனால் வானம் அதேபோலவே இருக்கும்.
மனமற்ற தன்மை என்பது வெறும் விழிப்புணர்வு மட்டுமே. அது வெறும் வானம் போன்றது.
வானமாக மட்டுமே இருக்க உனக்கு தைரியம் வேண்டும்.
உன்னுள் நீ தளர்வு பெற்றால் உனது உள் வானத்தை நீ காண்பாய்.
வானத்தை மட்டும் பார், மேகத்தை மறந்து விடு. இது நிலைமாறுதலை கொண்டு வரும்.
உன்னுடைய அனுபவங்கள், உன்னுடைய இருப்பாகிய வானத்தில் வரும் மேகங்கள் போன்றதே.
நீல வானத்தில் செல்லும் மேகங்கள் எந்த தடயத்தையும் விட்டுச் செல்வதில்லை.
சப்தமும் நிசப்தமும்
வாழ்வை விளையாட்டாக எடுத்துக் கொள், அப்போதுதான் இரண்டு உலகங்களும் ஒருசேர உனக்கு கிடைக்கும், இந்த வெளி மற்றும் உள் உலகம், சப்தமும் நிசப்தமும், அன்பும் தியானமும், தொடர்பும் ஒருமையும் என இந்த விஷயங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சேர்ந்தாற்போல வாழப்பட வேண்டும், அப்போதுதான் உனது இருப்பின் அடி ஆழமும், உயர்ந்த உச்சியும் உனக்குத் தெரியவரும்.
இசை என்பது சப்தம் மட்டுமல்ல, அது மௌனத்தையும் உள்ளடக்கியது.
மிக ஆழ்ந்த மௌனத்தில் உண்டாக்கும் சில சிறிய சப்தங்களே நாம்.
சப்தமும் நிசப்தமும் ஒன்றிணைந்தே செல்லும், எதிர்மறை இல்லாவிடில் இதுவும் இருக்க முடியாது.
சப்தம் நமது மனம், மௌனம் நமது இருப்பு.
சப்தம் இந்த பூமியை சேர்ந்தது, மௌனம் கடந்ததை சேர்ந்தது.
வாழ்க்கை சப்தமும் நிசப்தமும் இணைந்த லயமாக இருக்க வேண்டும்
Posted by ரமணி. N at Thursday, January 01, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

சேஷாத்ரி சுவாமிகள் - சிறை செய்தால் அறை விழும்!

இது போன்ற சித்து விளையாடல் ஒன்றை சற்று வேறுவிதமாக சுவாமிகள் 1928ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவின் போது நிகழ்த்தினார். ஈ மொய்த்த தின்பண்டங்களை விற்றுக் கொண்டிருந்த கடைக்காரனிடம் சுவாமிகள் ‘இதை விற்காதே’ என்று எச்சரித்தார். அவருடைய எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினான் கடைக்காரன். இரண்டு முறை எச்சரித்த சுவாமிகள் மூன்றாவது முறை கடையில் இருப்பவற்றை எடுத்து வீதியில் கொட்டிவிட்டுச் சென்றார்.
கடைக்காரன் வெளியூரிலிருந்து வியாபாரம் செய்ய வந்தவன். சேஷாத்திரி சுவாமிகளின் பெருமை அறியாத அந்த முரடன் காவல் துறையில் புகார் செய்தான். போளூரிலிருந்து திருவண்ணாமலைக்கு திருவிழா பணிசெய்ய வந்த இன்ஸ்பெக்டர், மகானின் பெருமை அறியாமல் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்.
அடுத்த அரைமணியில் அந்தச் செய்தி ஊர்முழுவதும் பரவி, மக்கள் கொதிப்படைந்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சுவாமிகளை வெளியே விடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் பிடிவாதமாக திருவிழா முடிந்தபிறகே சுவாமிகளை வெளியே விடமுடியும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். சுவாமிகளுக்கு கெடுதல் செய்தால் பெரும் அபாயத்தைச் சந்திக்க வேண்டிவரும் என்று மக்கள் எச்சரித்தனர். இன்ஸ்பெக்டர் அதை இலட்சியம் செய்யவில்லை.
ஆனால் அடுத்த அரைமணியில் போளூரிலிருந்து அவருக்குத் தந்தி வந்தது. அவர் மனைவி கொடுத்திருந்தாள். இன்ஸ்பெக்டரின் ஐந்து வயது மகன், அறைக்குள் சென்று கதவைத் தாழ் போட்டுக் கொண்டான். “கதவைத் திறக்கத் தெரியாமல் பயந்து அழுது, மூர்ச்சையாகக் கிடக்கிறான். உடனே புறப்பட்டு வரவும்” என்று தந்தி தெரிவித்தது.
இன்ஸ்பெக்டர் அவசரமாகக் புறப்பட்டு போளூருக்குச் சென்றார். வீட்டின் முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அறையில் ஜன்னல் எதுவும் இல்லை. மேலும் கதவை உடைத்து எடுக்கமுடியாத வகையில் அந்த அறை அமைந்திருந்தது.
அந்த நிலையில் திருவண்ணாமலையிலிருந்து அவருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. அதில் மகானை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யும் படியாக மக்கள் கேட்டிருந்தனர். அவர் மனைவி இந்த விஷயத்தை அறிந்து பதறினாள். அவளுக்கு சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றித் தெரியும். “மகானின் பெருமை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டீர்கள். அந்தப்பாபம் தான் நம் மகன் இப்போது அறைக்குள் சிக்கிக் கொண்டான். அவரை முதலில் வெளியே விடச் சொல்லுங்கள்” என்று அழுதாள்.
இன்ஸ்பெக்டருக்கு தன் தவறு புலப்பட்டது. சுவாமிகளை விடுவிக்கும்படி திருவண்ணாமலைக்கு தந்தி ஒன்று கொடுத்தார். அவரே வியந்து போகும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
அடுத்த இரண்டாவது நிமிடம் அறைக்குள் கிடந்த அவருடைய மகன் மயக்கம் தெளிந்து எழுந்தான். வெளியே இருப்பவர்கள் சொல்லியதைப் புரிந்து கொண்டு, முரண்டு செய்யாமல், அச்சம் கொள்ளாமல் தானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். இது எப்படி நடந்தது? ஆச்சரியப்பட்டுப் போனார் இன்ஸ்பெக்டர். சுவாமிகளின் மகத்தான சக்தியை அறிந்த அவர் அன்றே குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்று, சேஷாத்திரி சுவாமிகளை வணங்கி தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
Posted by ரமணி. N at Thursday, January 01, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Followers

Blog Archive

  • ►  2010 (26)
    • ►  October (19)
    • ►  November (4)
    • ►  December (3)
  • ►  2011 (52)
    • ►  May (1)
    • ►  June (2)
    • ►  July (6)
    • ►  August (6)
    • ►  September (32)
    • ►  October (2)
    • ►  November (2)
    • ►  December (1)
  • ►  2012 (131)
    • ►  January (18)
    • ►  February (13)
    • ►  March (12)
    • ►  April (23)
    • ►  May (20)
    • ►  June (10)
    • ►  July (10)
    • ►  August (7)
    • ►  September (6)
    • ►  October (11)
    • ►  November (1)
  • ►  2013 (43)
    • ►  January (4)
    • ►  February (1)
    • ►  March (1)
    • ►  April (3)
    • ►  May (4)
    • ►  June (3)
    • ►  July (5)
    • ►  August (8)
    • ►  September (6)
    • ►  October (8)
  • ►  2014 (54)
    • ►  January (5)
    • ►  March (2)
    • ►  April (9)
    • ►  May (5)
    • ►  June (9)
    • ►  July (4)
    • ►  August (6)
    • ►  September (3)
    • ►  October (8)
    • ►  November (1)
    • ►  December (2)
  • ▼  2015 (26)
    • ►  January (7)
    • ►  February (3)
    • ►  March (7)
    • ►  April (3)
    • ►  May (2)
    • ►  June (2)
    • ►  July (1)
    • ▼  August (1)
      • ஈஸ்வரப்பட்ட மகரிஷியின் வாக்கு...

About Me

My photo
ரமணி. N
Toronto, Ontario, Canada
வணக்கம்! என்னுடைய அனுபவங்களை, சிந்தனைகளை, எண்ணங்களை, நான் அறிந்தவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதே என் எழுத்தின் தலையாய நோக்கம். மனிதர்களுக்கு மார்க்கங்களை காட்டிக் கொண்டிருப்பவர்கள், அதை விட முக்கியமாக செய்ய வேண்டியது ஒன்று உண்டு. அது.................... மனிதர்களுக்கு மனிதர்களை அடையாளம் காட்ட வேண்டியது. அந்த சிந்தனைத் தூண்டுதலின் விளைவு தான் உங்களுக்கான இந்தப் பக்கங்கள். "ஆன்மீகப் பாதை" என்கின்ற இந்த தமிழ் வலையத்தளம் ஒரு மாத, வார சஞ்சிகை அல்ல. இது எனது 'வலையத்தள மின் நூலகம்’. இங்கு எனக்குப் பிடித்த சில ஆக்கங்களை ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். " நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்கின்ற வார்த்தைக்கு ஒப்பாக, எனக்குப் பிடித்த, என் உயிரோடு ஒன்றாகிப் போன, என்னைச் சிந்திக்க வைத்த சில பகுதிகள்,மற்றும் உங்களுக்குப் பயனுள்ளதான தமிழ் இணையம் பற்றிய சில கடந்த கால,நிகழ்காலத் தகவல்களையும் இணைத்துள்ளேன். நீங்களும் இந்த மின் நூல் நிலையத்திற்குள் நுழைந்து உங்களுக்கு விருப்பமான பகுதிகளை வாசிக்கலாம். இவை உங்களுக்குப் பயன்படுபவையாக இருக்க விரும்புகின்றேன். இவ்வலயத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை விமர்சனப் படுத்துங்கள். அவற்றை நான் வரவேற்கின்றேன். நன்றி என்றென்றும் நட்புடன், ரமணி. N கனடாவிலிருந்து.. ஐப்பசி 14, 2010
View my complete profile

Pages

  • Home

Ramanamaharshi

  • http://www.arunachala.org

Ramanamaharshi

  • www.Davidgodman,org
Picture Window theme. Powered by Blogger.