Wednesday, July 31, 2013

சர்வமங்களம் தரும் பிரதோஷ வழிபாடு....


இறைவழிபாடு குறைகளை களைந்து நிறைவினை தரும். முக்கியமாக, புண்ணிய நாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பயனைத் தரும். காலத்துக்கு அதிக வலிமையுண்டு. காலத்தில் செய்வதற்கு அதிக பயன் கிட்டும். இறைவனை எப்பொழுதும் வழிபட வேண்டும். ஆனால் புண்ணிய தினங்களில் வழிபட்டால், ஒன்றுக்கு கோடி மடங்கு மிகுதியான உயர்ந்த பயன் விளையும். இந்நாட்களில் அன்புடன் இறைவழிபாடு புரிபவர்கள் பாவங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெற்று, இகம், பரம், வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.

பிரதோஷம் எப்படி ஏற்பட்டது?
 
நீண்ட காலத்திற்கு முன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் போர் மூண்டது. இருபுறத்திலும் ஏராளமான பேர் மடிந்தனர். எனவே தேவர்கள், பிரமனை அடைந்து சாகாமல் இருக்க என்ன வழி என ஆராய்ந்தனர்.
அவர், தேவர்களை நாராயணனிடம் அழைத்துச் சென்று முறையிட அமிர்தம் உண்டால் சாகாமலிருக்கலாம் என்று அவரும் யோசனை தெரிவித்தார்.
பாற்கடலைக் கடைந்தால்தான் அமிர்தம் எடுக்க முடியும், அசுரர்கள் தயவில்லாமல் பாற்கடலை கடைய முடியாது. அவர்களை சேர்த்துக் கொண்டால், அசுரர்களுக்கும் பங்குதர வேண்டும். வேறு வழியில்லாததால், தேவர்கள் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டனர்.
தந்திரசாலியான, விஷ்ணுவின் ஏற்பாட்டின்படி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர். மேரு மலையை மத்தாகவும், ஆயிரம் நாக்குடைய வாசுகியைக் கயிறாகவும் கொண்டு, வால்பக்கம் தேவர்களும் தலைப்புறத்தை அசுரர்களும் பிடித்துக் கடைய ஆரம்பித்தனர்.
இவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் கடைந்தனர். இரண்டு பக்கத்தினரும் மாறி மாறி இழுத்ததால் வாசுகியின் உடல் புண்ணானது. அவன் தன்னையும், அறியாமல் வலி பொறுக்காமல், ஆயிரம் வாயினாலும் விஷத்தைக் கக்கிவிட்டான். அச்சமயத்தில், கடலில் இருந்து விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட 'காளம்' என்று நீல விஷமும், பாற்கடலில் பிறந்த 'ஆலம்' என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும். கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது.
தலைப்பக்கம் நின்ற பல நூற்றுக்கணக்கான அசுரர்கள் எரிந்து சாம்பலாக தேவர்கள் தறி கெட்டு, இடமும் வலமும் ஆக ஓடி ஒளிந்தனர். எல்லோரும் பயந்து போய், ஈசனிடம் முறையிட கயிலங்கிரி சென்றனர்.
நந்தியம் பெருமானிடம் அனுமதி பெற்று உள்ளே சென்று சிவபெருமானிடம் அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன் தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய 'சுந்தரர்' என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி "அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!" என்று பணிந்தார்.
சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.
எல்லோரும் அதிசயயிக்க, சிவபெருமான் ஒரு கண நேரம் 'விஷாபகரணமூர்த்தி' என்னும் ரௌத்ர வடிவம் தாங்கி அவ்விஷத்தை உண்டருளினார். அப்போது தேவியார் அவ்விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே என்று கருதி அவருடைய கழுத்தில் தங்கும்படி செய்தாள். 'கண்டத்தில்' விஷத்தை நிறுத்தியதால் 'நீலகண்டர' ஆனார். விஷம் கொண்டுவந்த 'சுந்தரர்' 'ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார்.
கயிலையில் ஈசன் விஷம் உண்டபிறகு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அனைவரும் அவரை போற்றித் துதி பாடியவாறு இருந்தனார்.
ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவனை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி மருகத்தை ஒலித்து 'சந்தியா நிருத்தம்' எனும் நடனம் ஆடினார்.
இந்நாட்டியத்தை கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். நந்தி சுத்த மத்தளம் வாசிக்க அனைவரும் 'ஹரஹர' என்று துதித்தனர்.
அன்று முதல் பெருமான் ஒவ்வொரு நாளும் அந்தி வேளையில் இக்கூத்தை நிகழ்தி வருகிறார். இவ் கூத்தில், சரஸ்வதி வீணையையும், பிரமன் தாளத்தையும், விஷ்ணு புல்லாங்குழலையும் பூதங்கணங்கள் எண்ணற்ற இசைக்கருவிகளையும் இசைக்கின்றனர் என்பர். 

Thursday, July 18, 2013

காரணகுரு-காரியகுரு

 எல்லாம் வல்ல ஆண்டவர் ஒருவரே என்று யார் நமக்கு உணரச்
செய்கிறாரோ - கிடைத்ததற்கு அரிதான இம் மானிட பிறவியிலேயே
அடைதற்கு அரிதான மேலான பேரின்ப பெருநிலைக்கு செல்ல யார்
வழி காட்டுகிறாரோ - இவ்வுலக வாழ்க்கயை நமக்கு அறிவித்து வாழ்வாங்கு
வாழ வாழ்க்கை நெறியை யார் உபதேசிக்கிறார்களோ -இறைவன்
இத்தன்மையன் , நீ இத்தன்மையன் - நீ எப்படி அதுவாக வேண்டும்
என உரைக்கிறோ அவர்தான் குரு.

Wednesday, July 17, 2013

16 முகம் கொண்ட அரிதான சிவலிங்கம்

சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று அங்கிருந்து 27 கி.மீ. தூரத்தில் உள்ள அம்மையகரகம் அடையலாம். அங்கிருந்து பேருந்தில் சென்றால் ஒரு கி.மீ. தூரத்தில் கோவில் உள்ளது. கோவில் காலை 5.30-லிருந்து இரவு 9.30 மணி வரை.

பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ, 16 பட்டை லிங்கமான சுவர்ணபுரீஸ்வரரை கார்த்திகை சோமவாரத்தில் வழிபடுவது சிறப்பு. இத்தலம் விழுப்புரம் மாவட்டம் தென்பொன்பரப்பியில் உள்ளது.
சிவனின் தரிசனம் வேண்டி 16 ஆண்டு காலம் கடும் தவம் மேற்கொண்டார் காகபுஜண்ட சித்தர். இவர மேற்கொண்ட தவத்தின் காரணமாக இறைவன் 16 முகங்களை கொண்டவராக லிங்கமாக காட்சி தந்தார். இந்த சித்தர் இறையடி சேர்ந்தபின், வானகோவராயன் என்ற மன்னன் இவ்விடத்தில் கோவில் எழுப்பினான். இத்தலத்தின் இறைவன் அருளால் இப்பகுதி மக்கள் பொன், பொருளுடன் செல்வச் செழிப்பாக வாழ்ந்தனர். எனவே இத்தலம் "பொன்பரப்பி' என்றும், இறைவன் "சுவர்ணபுரீஸ்வரர்' என்றும், அம்மன் "சுவர்ணாம்பிகை' என்றும், பைரவர் "சுவர்ண பைரவர்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இத்திருத்தலத்தின் மூலஸ்தானமும் அர்த்த மண்டபமும் எப்போதும் உஷ்ணத்துடன் இருக்கும். ஏனென்றால் இத்தலத்தில் 5.5 அடி உயரமுள்ள சிவலிங்கத்தை சூரியகாந்தக்கல்லால் வடித்துள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் அக்னி சொரூபமாக உள்ளார். இங்குள்ள சிவலிங்கம் சித்தர் பிரதிஷ்டை என்பதால், கிரக தோஷம் உள்ளவர்கள், சிவனுக்கு தேனபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சூரியகாந்தக்கல் நவபாஷாணத்திற்கு ஒப்பானது. லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் விரைவில் குணமாக குணமடைகின்றன. மேலும் குழந்தை செல்வம் வேண்டுவோர், ஐப்பசி பௌவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தின் போது தரப்படும் பாகற்காய் குழம்பை பிரசாதமாக சாப்பிடுகிறார்கள்.
இத்தலத்திலுள்ள இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் பதினாறு முக லிங்கம் எ‌ன்று அழைக்கப்படுகிறார். பொதுவாக பதினாறு முக லிங்கத்தில், அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும். ஆனால், இங்கு ஆவுடையாரும் (பீடம்) 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது தனி சிறப்பு.
இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அம்பாள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியிருக்கும். காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி அம்பாளின் பார்வையில் படும்படி உள்ளது.
சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். ஏனென்றால் காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். இத்தலத்தில் உள்ள நந்தி சிறியதாக இருக்கும். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. "பால நந்தி' என்பது இதன் திருநாமம்.
சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சியளிக்கிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார். முருகன் ஆறுமுகத்துடனும், 12 திருக்கரங்களுடனும் 8 அடி உயரத்தில் மயிலில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள். கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக துவார லிங்கங்கள் உள்ளன.
மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இங்குள்ள பாணலிங்கத்திற்கு, பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபாடு செய்கின்றனர். அவிட்டம் நட்சத்திரத்திற்குரியவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தேனபிஷேகம் வழிபடுவது சிறப்பு.

Wednesday, July 10, 2013

தன்னை அறிந்தால் கடவுளை அறியலாம்.

உன்னையோ கடவுளையோ அறிய வென்றால்
ஒரு குறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து
தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும்
தனிக்கருணை வடிவான குரு வடைந்தால்
அன்னை வயிற்றடைந்துருவாய் உடலாய் வந்த
ஆதி கருவைப் புருவத்திடையுணர்த்தப்
பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க,
உந்தன் பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்....
 *** *** *** *** *** *** *** ***
பிரம்மம் :
நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன் அஃது
நினைவதனின் முடிவாகும், மூலமாகும்
சூனியமே ! தோற்றமெலாம் அதிலிருந்தே !
சுத்த வெளி ! மௌனமது ! உவமை இல்லை !
ஊன் உருவில் ஓடும் உயிர்ச்சுழற்சி வேகம்
உற்பத்தி செய்கின்ற மின் சாரத்தில்
தோன்றுகின்ற அலை இயக்கம் அறிவு ஆகும்.
சுயநிலையில் தியானித்து அறிதல் வேண்டும்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Monday, July 1, 2013

Astronomical Radiations


எப்பொழுதும் நட்சத்திரங்கள், கோள்கள், பிரபஞ்சத்திலிருந்து வந்துகொண்டே இருக்கும். எந்த அலை வருகிறதோ அந்த அலையில் ஆற்றல் துகள்களும் ஓரளவுக்கு அடித்து வரப்படும். உதாரணமாக ஓடையில் தண்ணீர் ஓடுகிறது. தண்ணீரைவிட கல்லில், மண்ணில் வலுவு அதிகம் என்றாலும் ஓடும் தண்ணீர் அந்தக் கல்லையும் அரித்து மணலையும் அடித்துக் கொண்டு ஓடுகிறது அல்லவா? அதே போல ஆற்றல் துகள்களும் அடித்து வரப்படுகின்...றன. அதிலேயிருந்து வந்து மோதும்போது எந்தெந்த உயிர் - வகை இருக்கிறதோ அந்த species க்குத் தக்கவாறு அந்த blue-print உள்ளே இருக்கும். எது எதை வாங்குகிறது. எது எதை விட்டுவிடுவது என்பது அவற்றின் தன்மையை ஒத்தது; it is super - computerised. உதாரணமாக நூறு தொட்டி வைத்திருக்கின்றோம்; நூறு விதைகளை ஊன்றுகிறோம். ஒரே மண், ஒரே தண்ணீர் என்றாலும் அந்த விதைக்குத் தகுந்தவாறு மரம் வளரும். அது போல ஒவ்வொரு ஜீவனும் உணவு, காற்று கோள்களின் அலையியக்கம், பூமியின் மத்தியிலிருந்து மேற்பரப்பு நோக்கி வந்து கொண்டேயிருக்கின்ற சக்தி - தனக்கு வேண்டியதைத்தான் எடுக்கும். மனிதன் தான் தனக்கு உதவாது போனாலும் வாரி வைத்துக் கொண்டு சேர்த்து வைத்து பூட்டி வைத்துக் கொண்டு இன்னும் இன்னும் என்று காத்திருப்பான். ஆனால் இயற்கையில் எந்தப் பொருளும் தனக்கு வேண்டாததை எடுப்பதே இல்லை. அது அதற்கு ஒரு அளவு முறை இருக்கிறது.
சந்திரனிலிருந்து ஒரு radiation; சூரியனிலிருந்து ஒரு radiation; இரண்டும் வேறு வேறு. பதினான்குக்குப் பதினான்கு விதமான radiations; அந்த பதினான்கும் நிறைவாக இருந்தால் அதனுடைய radiation வேறு. தண்ணீர் அலை யாது? உடலில் உள்ள ரத்தம். இதனுடைய இயக்கம் வேறு. திடப்பொருளின் இயக்கம் வேறு. அதனால் Astronomical radiations ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பிறந்தபொழுது என்ன magnetic wave balance capital ஆக இருந்ததோ, அதற்கும் மேலாக ஒவ்வொரு கோளும் அருகில் வரவும், தூரம் போகவும், ஒரு கோள் இன்னொரு கோளோடு சேர்ந்து வரும்போது ஒரு வகையிலேயும், மாறி வரும்போது வேறுவகையிலேயும், இப்படியே கோள்களின் கூட்டமைப்புக்கும் தகுந்தவாறு அதன் பலன் (effect) வித்தியாசப்படும். ஆகையினால் இந்த Astronomical radiations are also one of the causes for change in the mechanical, electrical and other functions in the metabolism.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, June 12, 2013

நாம் எடுக்கும் ஒரு சிறு கூடுதல் முயற்சி‏

நாம் எடுக்கும் ஒரு சிறு கூடுதல் முயற்சி நமக்கும் நம் சுற்றத்திற்கும் மிகுந்த இன்பத்தை கொடுக்கும்.

1. ஒரு குறுகிய சாலைக்குள் இரு வண்டிகள் நுழைய முற்படும் போது முன்னே செல்ல அனுமதித்தவரை பார்த்து நன்றி சொல்லி புன்னகிப்பது..

2. சமைத்த உணவை மேஜை மீது வைத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லாமால் அதை அன்போடு பரிமாறிக் கொடுப்பது..

3. நம் அன்புக்குரியவர் செய்த தவறை நினைத்து வருந்தும் நேரத்தில் அ...வரை உடனே மன்னித்து அணைத்துக் கொள்வது..

4. நாம் எதிர்ப்பார்க்கும் விடங்களை மற்றவருக்கு கொடுத்து மகிழ்வது..

5. 'மன்னிக்கவும்', ' நன்றி' இந்த வார்த்தைகளை அலுவலகத்தில் மட்டும் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் வீட்டிலும் உபயோகிப்பது.

6. வீட்டையும் குழந்தையும் உங்களையும் அரவணைத்து பார்த்துக் கொள்ளும் உங்கள் துணைவியை மனதார அங்கீகரிப்பது..

7. முகநூலில் நல்ல பதிவை 'LIKE' செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு பின்னூட்டம் (comment) செய்து மற்ற நண்பர்களுக்கும் பகிர்வது

Wednesday, June 5, 2013

மேலோர் என்றும் சம நோக்கினரே

கபீர்தாஸருக்கு, அவர் காலத்தில், இருந்த பக்தர்களைக் காட்டிலும் எதிரிகளே அதிகம். எல்லா சீர்திருத்தவாதிகளும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை இதுவானாலும் இரு மதத்தை சேர்ந்தவரும் இந்த எதிர்ப்பைத் தனித்தனியாகக் காட்டினர். கபீருடைய குற்றமெல்லாம், அவர் உள்ளதை உள்ளபடி கூறியதே. வரலாற்றில் இது சாதாரணமாகக் காணப்படுவதுதான்.

ஒருவரை அவரது காலத்திற்கு பிறகு மகானாக ஏற்றுக் கொள்ளும் மனித சமுதாயம் அவர்கள் தம்மிடையே வாழும் காலத்தில் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. தமக்குள்ள முக்கியத்துவத்திற்கு இம்மகான்கள் கூறும் உண்மைகள் ஊறு உண்டு பண்ணும் என்ற பய உணர்ச்சியே சிலரை அத்தகைய செயல்களில் தூண்டுகிறது. அப்படியானால் இந்த ஏற்பு பின்னர் எப்படி ஏற்படுகிறது?

இறந்து போன ஒருவர் யாருக்கும் எதிரியாவதில்லை. எனவே காலப்போக்கில் அவர்கள் விட்டுச் சென்ற நல்ல விஷயங்கள் எவ்வித பூச்சுமின்றி நினைவில் நிற்கின்றன. பேசப்படுகின்றன. பொய் எதிர்ப்புகளும் பொறாமை பிரசாரங்களும் வலுவிழந்து மடிந்து போகின்றன. புத்தர் ஏசுவின் காலத்திலிருந்து வள்ளலார், ஷிரடி ஸாயி வரையிலும் காலம் கண்ட உண்மை இது.

சமுதாயத்தின் கோணத்திலிருந்து உண்மை இதுவானால், அம்மகான்கள் சமுதாயத்தை எப்படிக் காண்கிறார்கள் ?

கபீரே விடை சொல்கிறார்.

அண்டுவர் சிலர் உள்ளன்போடு, அஃதிலார் சிலரும் அண்டுவரே
கண்டிலர் அவருள் வேற்றுமை மேலோரென் றும்சம நோக்கினரே

உள்ளன்பு இல்லாத ஒருவன் நம்மை அணுகும் பொழுது சில சுயநல நோக்கம் இருக்கும் என்பதை யாவரும் அறிவோம். ஆனால் ஏதுமில்லா துறவியை அணுகினான் என்றால் அது அவருக்கு மாசு கற்பிக்கும் நோக்கமே பெரும்பாலும் கொண்டிருக்கும்.

புத்தருடைய வாழ்வில் ஒரு நிகழ்வு. புத்தரின் அமைதியான குணத்தை உடைத்து அவரது இன்னொரு முகத்தை காண்பிப்பதாக ஒருவன் சூளுரைத்து அவர் பிட்சைக்கு போகும் வழியில் நிற்கிறான் ஒருவன். புத்தரும் அமைதியாக வந்து கொண்டிருந்தார். அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி, துறவி என்ற பெயரில் ஊரில் உள்ளவர்களை கூட்டி தனக்கு ஒரு சீடர் குழாமை உருவாக்கி மேலும் பல சோம்பேறிகளை உருவாக்குபவன் என்றெல்லாம் ஏசுகிறான். எல்லாவற்றையும் அமைதியாக நின்று கேட்டுக் கொள்கிறார். பதிலேதும் கூறவில்லை. ஆனால் அவனை விட்டு விலகிச் செல்லவும் இல்லை. ஏசத் தொடங்கியவன் மேலும் பல அபாண்டமான குற்றங்களை அடுக்கிக் கொண்டே போனான். புத்தரின் நிலயில் மாற்றம் ஏதும் இருக்கவில்லை. சுற்றிலும் கூட்டம் சேரத் தொடங்கியது. ஒரு நிலையில் ஏசியவனுக்கு கோபம் அதிகமாகியது. "இவ்வளவு திட்டியும் உனக்கு சற்றும் உரைக்கவில்லையா ?" என்று கேட்கிறான். பேச வேண்டிய தருணத்தைப் புரிந்து கொண்டார் புத்தர்.
"அன்பரே ஒருவர் உமக்கு கொடுக்கும் பொருள் உமக்கு தேவையில்லை என்றால் அது யாருக்குச் சொந்தம் ?" என்று வினவினார்.
" ஏன் அது அவனுக்குத் தான் சொந்தம் " என்று பதிலளித்தான் ஒன்றும் புரியாதவனாக.
"இப்பொழுது நீர் சொன்ன எதையும் எனக்கென நான் கருதவில்லை. ஆகையால் எனக்கு பதில் கூற அவசியமுமில்லை" என்று சொல்லி விட்டு சென்றார்.
சூளுரைத்தவன் செய்வதறியாது நின்றான். ஞானியர்கள் சமநோக்கினராக இருக்க எப்படி இயல்கிறது எனில் அவர்களது அளப்பற்ற கருணையேயாகும்.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும், கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (579)

(கண்ணோடி = இரக்கம் கொள்ளுதல்)தண்டிக்கப் படவேண்டிய குற்ற இயல்புகள் உள்ளவரிடத்தும் கருணை உள்ளங்கொண்டு இரக்கத்துடன் பொறுத்துக் கொள்ளும் பண்பே தலைசிறந்தது என்று உரைப்பார் திருவள்ளுவரும்.
சமநோக்குடைய சான்றோர் எவரிடமும் எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாது, பகைமையும் இல்லாது வாழ்நாட்களை கழிப்பர்