Spiritual Path ஆன்மீகப் பாதை

என் குரு ரமணருக்கு சமர்ப்பிக்கின்றேன்! "அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கருளிய பத்ம பாதங்களுக்கு இச் சிறியவளின் இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்" "முக்திக்கு எளியது அருணாச்சலம்; சாதனத்தில் சிறந்தது ஆத்மா விசாரம்; உபதேசத்தில் வலியது மோனம்; குருவில் சிறந்தவர் என் இதய ரமணன் " Sri Ramanarpanam Astu!

Thursday, February 26, 2015

ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் -இந்திய தத்துவ ஞானி ஓஷோ

தியானத்தில் இறங்க விரும்புபவர்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை பூரணமாக தொடர்ந்து நினைத்து அதைதியானமாக செய்யலாம் என்று சொல்லியிருந்தோம். இந்தியாவில் பிறப்பெடுத்த தத்துவஞானியான ஓஷோஅதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார். மனதை தன்போக்கில் இலகுவாக விட்டுவிட்டு இயற்கையாகவேஎண்ணங்களை கடந்து போவது தான் தியானம் என்கிறார். குறிப்பாக பல காலம் தவம் இருந்து ஒரு யோகிஅடையும் உணர்வை சாதாரணமாக அன்றாடம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் ஒரு நபர் எதேச்சையாகஅடையக்கூடும் என்கிறார். அவர் சொல்வதை சற்று விரிவாகவே இங்கு பார்க்கலாம்.
"மனம் அற்ற நிலையே யோகம் எனப்படும். எந்த விஷய ஞானமும் இல்லாமல், பூரண உணர்வுநிலையேயோகம் ஆகும். ஓர் கண்ணாடியில் படிந்து கிடக்கும் தூசு போல மனதில் விஷய ஞானங்கள் படிந்துகிடக்கின்றன. அவைகள் பகல் பூராவும், ஏன் இரவிலும் கூட, உங்களின் கனவு வாயிலாக உங்களை சுற்றிவருகின்றன. உங்கள் மனம் எதைப்பற்றியாவது நினைத்துக் கொண்டும், எதைப்பற்றியாவது கவலையும்,துக்கமும் அடைந்து கொண்டே தான் இருக்கிறது. அடுத்த நாளைப்பற்றி இன்றைக்கே அது தன்னைதயார்படுத்திக் கொள்கிறது. இது தன் இயல்பாக, சுயநினைவின்றி, சதா அடிமனத்தில் இயங்கிக் கொண்டு தான்இருக்கிறது. இது தான் யோகம் அற்ற நிலையின் இயக்கமாகும்.
இதன் எதிர்ச்செயல்பாடே யோகநிலையாகும். அதாவது, எப்போது எண்ணக்குறுக்கீடுகள் நின்றுவிடுகின்றனவோ, இறந்த கால எண்ணங்கள் செயலற்றுப் போகின்றனவோ, எவ்வித ஆசையின் தூண்டுதல்இல்லாமல், மனம் சஞ்சலமின்றி நிசப்தமாக ஒடுங்கி நிற்கின்றதோ, அந்த நிலையே யோகமாகும். அந்த அமைதிநிலையில் தான் " உண்மை" வெளிப்படும். வேறு எந்த நிலையிலும் அது தன்னைக்காட்டிக் கொள்ளாது. ஆகவே,யோகம் என்பது மனம் அற்ற நிலையே.
நீங்கள் மனதுடன் யோகத்தை அடையவே முடியாது. ஏனெனில் மனம் ஒரு போதும் தானாக நின்று விடாது.அதன் செயல் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் மனதுடன் போராடாமல், அதே சமயம் அதைசிறிது ஒதுக்கி வைத்து அது கொடுக்கும் விஷயத்துடன் உங்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல், மனம்இயங்குவதை ஒரு சாட்சியாக நின்று பார்த்து " நான், மனம் இல்லை" என்ற உணர்வுடன் செயல்படுங்கள்.
" நான், மனம் இல்லை" என்ற விழிப்புணர்வு நிலையே யோகமாகும். இந்த விழிப்புணர்வு உங்களிடத்தில்ஆழமாக, ஆழமாக பதிய பதிய அமைதியான எண்ணமற்ற நிலை, வெறும் வெட்டவெளியாக படிகம் போன்றசுத்தமாக சில கணங்கள் தோன்றலாம். அந்த இயக்கமற்ற நிலையில் நீங்கள் உண்மையிலேயே "யார்" என்றுஅறிந்து கொள்வீர்கள். அப்பொழுது உங்களுக்கு இந்த உலக இயக்க ரகசியங்கள் அனைத்தும் புரியும். இப்படி ஒருகாலததில் நீங்கள் பூர்ண யோகத்தில் எப்போதும் இருந்து விடுவீர்கள். அந்த காலமே இயற்கையால்ஆசிர்வதிக்கப்பட்ட காலமாகும்.
ஒன்றையே நினைப்பது என்பது தியானமோ அல்லது யோகமோ அல்ல. ஒன்றையே நினைப்பதில் நீங்களேவலிய ஒரு முயற்சியை மேற்கொள்கிறீர்கள். ஏதோ ஒரு பொருளைச்சுற்றி மனத்தை நிலைப்படுத்தவிரும்புகிறீர்கள். இந்த முயற்சியில் இரு வேறு நிலைகள் ஏற்படுகின்றன. உண்மையான தியானத்தில் உங்கள்உள்ளேயும், வெளியேயும் உள்ளவைகள் எந்த வித தடங்கல் இன்றி, வெளியே செல்ல முடியும். அதே போலவெளியே உள்ளவைகள் அனைத்தும் உங்கள் உள்ளே செல்ல முடியும். இரண்டுக்கும் எந்த வரம்போ, எந்தவேலியோ கிடையாது. உள்ளே உள்ளது இயங்குகிறது. இரண்டு மாறுபட்ட விழிப்புணர்வு கிடையாது. இது தான்உண்மையான தியானத்தின் நிலையாகும்.
ஆனால் ஒன்றையே நினைத்தல் என்பது இரு வேறான விழிப்புணர்வு ஆகும். அதனால் தான் ஒன்றையேநினைத்தால் களைப்பையே உண்டு பண்ணுகிறது. நீங்கள் எளிதில் களைப்படைவதற்கு, ஒன்றையே நினைத்துக்கொண்டிருத்தலே காரணமாகிறது. உங்களால் இருபத்து நான்குமணி நேரமும் ஒன்றையே நினைத்துக்கொண்டிருந்தல் என்பது முடியாத காரியம். ஒன்றையே நினைத்தல் என்பது இயற்கையான செயல் அல்ல.உண்மையான தியானம் என்பது உங்களுக்கு களைப்பையே உண்டாக்காது. நாள் பூராவும், ஏன் ஆண்டுமுழுவதும் தியானம் தொடர்ந்து செயல்படுவதாகும். அது பேரின்பமாக மாற முடியும். அது ஒரு குறிக்கோள்இல்லாத பரிபூரண ஓய்வாகும்.
ஒன்றையே நினைப்பதன் மூலம் உங்கள் மனம் ஒரு முடிவுக்கு, ஒரு குறிக்கோளுக்கு முன்பே வந்து அதற்காகசெயல்படுகிறது. ஆகவே நீங்கள் அதற்காக ஏதோ செயல்படுகிறீர்கள். உண்மையான தியான முறையில் எந்தகுறிக்கோளும் தொக்கி நிற்கவில்லை. நீங்கள் குறிப்பாக எதுவும் அதற்காக செய்ய வேண்டியது இல்லை. நீங்கள்"நீங்களாகவே" இருக்கிறீர்கள். மனதாலும், உடலாலும் எதையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து, தங்கள்உள்மனம் சுரக்கும் ஊற்றையும், தானே முளைக்கும் அந்த அரிய பூக்களையும் உணர்ந்தார்கள். நன்றாகஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் "தானாகவே செயல்படுதல்" என்பதை. அந்த ஊற்று தானாகவே சுரக்கிறது. அந்தபூச்செடிகள் தானாகவே மேல் நோக்கி வளர்கின்றன.

இந்த நிலை, அதாவது எப்பொழுது நீங்கள் வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதன் போக்கிலேயேவிட்டு விடுகிறீர்களோ, எப்பொழுது உங்கள் விருப்பப்படி அமைய அதற்கு கட்டளை எதும் பிறப்பிக்கமால்இருக்கிறீர்களோ, அதே போல் அதை உங்கள் நோக்கப்படி நடத்த ஆசைப்படாமல் இருக்கிறீர்களோ, உங்கள்மூளைத்திறனைக்கொண்டு அதை மாற்றி போதனைகளை அதன் மேல் திணிக்கமால் இருக்கிறீர்களோ, அந்தஇயற்கையான கோட்பாடுகளற்ற, அந்த நேர வாழ்க்கைத்தன்மையை தியானம் என்று அழைக்கலாம்.
யோகம் என்பது "இப்பொழுது, இங்கே, இதோ நிகழ்வது தான். " அது ஒரு முழுமையான நிகழ்கால நிகழ்ச்சி. நீதியானம் என்று ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் தியானத்தில் எப்பொழுதும் இருக்கலாம். ஆனால்ஒன்றையே நினைத்துக் கொண்டு உன்னால் எப்பொழுதும் இருக்க முடியாது. ஒன்றையே நினைத்துக்கொண்டிருப்பது மனித இயல்பு தான். ஆனால் யோகம் என்பது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது. புனிதத்தன்மைஉடையது. அதற்கும், ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பதற்கும் அவ்வளவாக தொடர்பு கிடையாது.தியானம் என்பது எதையும் வலுக்கட்டாயமாக உங்கள் மேல் திணித்துக் கொள்வதல்ல".
தியானம் அல்லது யோகம் என்பது விளையாட்டான விடயம் அல்ல. சில சமயம் அவை உங்களுக்கு ஆபத்தைஉண்டு பண்ணும். ஏனெனில், தியானத்தால் நீங்கள் உங்கள் மனதின் ஆழமான இடத்தில் விளையாடஆரம்பிக்கிறீர்கள். உங்களை அறியாமலே செய்யும் தவறு ஒரு பெரிய ஆபத்தை உண்டு பண்ணிவிடும். ஆகவே,இதில் எதையும் புதிதாக கண்டு பிடிக்க முயலாதீர்கள். உங்களால் முழு ஈடுபாட்டுடன் கடைபிடிக்க முடிகிறஇரண்டு வகை தியான முறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு தியான முறைமகிழ்ச்சியை கொடுத்தால், அதில் ஆழ்ந்து முழு ஈடுபாட்டுடன் செல்லுங்கள். ஆனால் அதை ஒரு பழக்கமாக்கி,மனதை அடிமையாக்கி விடாதீர்கள். ஏனெனில் ஒரு நாள் அந்த முறையை விட்டு விடும்படி நேரிடும். நீங்கள்உங்கள் மனதை அதனுடன் நெருங்கி சம்பந்தப்படுத்தி விட்டால் அது போதை மருந்து போல் வேலை செய்து,உங்கள் மனதை அடிமைப்படுத்தி விடும். பிறகு அந்த முறையை உங்கள் இஷ்டப்படி விடுவது கஷ்டம். எனவேஇரண்டு முறைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் ஈடுபடுங்கள். அதில் முழுமையாக செல்லுங்கள். பிறகுஅதை கைவிடுங்கள். மற்றொரு முறையை பின்பற்றுங்கள். இப்படி மாறி மாறி தொடருங்கள்.ஆத்மீகப்பயணத்தில் ஒரே தியான முறையை மட்டும் கடைப்பிடித்து கடைசி எல்லையை அடைவது என்பதுமிக மிக அரிது.
மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது தியானம் அல்ல. முழுமையான விழிப்புணர்வு தான் தியானம். உங்கள்உடல் அசைந்து கொண்டு இருக்கும் போது, அதாவது ஓடும் பொழுது, குதிக்கும் பொழுது, உங்களுடையஎச்சரிக்கை உணர்வு இயல்பாகவும், அதிகமாகவும் இருக்கும். ஆனால் ஓய்வாக இருக்கும் பொழுது எச்சரிக்கைஉணர்வு மிகவும் குறைந்து உங்களை தூக்கத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் படுக்கையில் இருக்கும்பொழுது எச்சரிக்கை உணர்வு மிகமிக குறைவாக இருக்கும். ஆனால் உடல், மனம், உயிர் மூன்றும் ஒன்றாகஎந்த நிலையிலும் ஒன்றாக செயல்படும்படி கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு முதலில் ஒரு வழியைகண்டுபிடியுங்கள். ஓடும் பயிற்சி செய்பவர்கள், இந்த மூன்றும் ஒன்றாக இயங்குவதை உணர்ந்திருக்கிறார்கள்.ஓடுவது ஒரு யோகம் என்று நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் பல பேர் யோகத்தின் அனுபவத்தை,ஓடும் போது அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இது அவர்களை அறியாமலே கிடைக்கிறது. கடவுள்தன்மையை அடைய ஓடுதல் கூட ஒரு யோகம் தான்.
அதிகாலை வேளையில் காற்று மென்மையாகவும், தெளிவாகவும் இருக்கும் பொழுது, இந்த உலகம்தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு வரும் பொழுது, நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது உங்கள்உடல் மிக அழகாக அசைந்து கொண்டு செல்கிறது. அந்த புதுமை நிறைந்த இளங்காற்றும், இருட்டிலிருந்துவெளிச்சத்துக்கு இந்த உலகம் வரும் நேரமும், பறவைகள் பாட்டிசைக்கும் அற்புதமான வேளையும், உங்களைஉயிர்த்துடிப்புள்ளதாக ஆக்கும். அப்பொழுது, ஒரு கட்டத்தில் ஓடுபவர் முற்றிலும் மறைந்து "ஓடுதல்" மட்டும்இயங்கிக் கொண்டிருக்கும். அங்கே மனம், உடல், உயிர் என்ற மூன்றும் ஒன்றாகி இயங்கிக் கொண்டிருக்கும்.திடீரென்று உங்கள் உள்ளே ஒரும் பேரின்பம், அதிர்ச்சி அல்லது உச்சம் ஏற்படும். இந்த துரிய நிலைக்குஓடுபவர்கள் தற்செயலாக அவர்களே அறியாமல் வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த அனுபவம் தாங்கள்ஓடுவதால் வந்ததாக எண்ணி யோகநிலை உணர்வின் அனுபவத்தை தவறவிட்டிருக்கிறார்கள். ஆனால், அதைஉணர்வுபூர்வமாக எதிர்கொண்டால், அந்த வேளை மிக அற்புதமாகவும், உங்கள் உடல் மிக ஆரோக்கியமாகவும்,ஏன் இந்த உலகம் மிகமிக அழகானதாகவும் தோன்றும்.
நான் அறிந்தவரை மற்றவர்களை விட ஓடும்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்ற எவரைக்காட்டிலும் மிக எளிதாகயோக உச்சத்திற்கு வர முடியும்".

- ஓஷோவின் தியானமுறைகள்
Posted by ரமணி. N at Thursday, February 26, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, February 20, 2015

சிவராத்திரி விரதத்தின் மகிமை பற்றிய சிறிய கதை

  ஒரு ஊரில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான்..அவனுக்கு ஒரு மந்திரி இருந்தான். அரசவையில் மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான்..அந்த மந்திரி க்கு இரு மகன்கள்..ஒருவன் பெயர் பாலன் ..

மற்றவன் பெயர் வேத நெறி - இருவரும் மந்திரியின் சொல் பேச்சை கேட்காமல் தன்னுடைய இஷ்டம் போல வாழ்பவர்கள் ..
அதனால் வயது வந்த பின் தனது சொத்தை உடனடியாக பிரித்து தரும்படி கேட்டுச்சென்றனர்..
அரசனுக்கு மந்திரி மீது மிகவும் பிரியம்..அவர் அறிவுத் திறமை குறித்து நன்கு அவரிடம் அன்பும் பண்பும் நிறைந்ததாக இருப்பார்.. ஒருநாள் அரசவையில் மந்திரியின் பெருமை கண்டு மாதிரிக்கு அரசன் ஒரு நவரத்தினங்களால் செய்யப்பட்ட அழகிய மோதிரத்தை பரிசாக கொடுத்தான்.. அன்று மந்திரி அந்த மோதிரத்தை வீட்டிற்கு எடுத்து சென்று பத்திரமாக வைத்து கொள் என்று தனது மனைவியிடம் ஆணையிட்டார்..ஒரு நாள் இதை அறிந்து தனது வீட்டிற்கு வந்த வேதநெறி என்ற இரண்டாமவன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அந்த மோதிரத்தை எடுத்து திருடி ஒரு அழகான நாட்டிய பெண்ணுக்கு பரிசளித்தான்,,
மறு நாள் அந்த பெண் அரசவையில் அரசன் முன் நடனம் ஆடிகொண்டிருக்கும் வேளையில் அவளது கையில் இருந்த மோதிரத்தை பார்த்து அரசனுக்கு மிகவும் அதிர்ச்சி.. நாம் மந்திரிக்கு கொடுத்த மோதிரமாச்சே!! இது எப்படி இந்த பெண்ணின் கையில் என்று யோசித்தவாறு மந்திரியை அழைத்து உங்களிடம் தந்த அந்த நவரத்தினம் பதித்த மோதிரத்தை எடுத்து வாருங்கள் என்று ஆணை இட்டான்.. மந்திரியும் வீட்டிற்கு சென்று பார்க்கிறார்..மோதிரம் காணவில்லை.. வுடனே மந்திரி இல்லை என்ற விபரத்தை கூறியவுடன் அரசன் அந்த பெண்ணிடம் யார் உனக்கு மோதிரத்தை கொடுத்தார்கள் என்று கேட்டவுடன்,அவளும் வேதநெறி எண்டு மந்திரி மகனை சொல்ல அங்கிருந்த மந்திரி தான் மகன் செய்த காரியத்தை நினைத்து மிகவும் வேதனை அடைந்து சில காவலாளிகளை கூட்டிட்டு மகனை கொல்ல போகிறேன் என்று செல்கிறார்.. மகன் வேதநெறியும் விஷயம் அறிந்து வேகமாக ஓடுகிறான்..
அன்று காலை ஆரம்பித்தது ஓட்டம். முடியவில்லை..
அன்று சிவராத்திரி தினம். அவன் காலையில் இருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் காவலாளிகளுக்கு பயந்து விட்டு ஓடி கிட்டே இருக்கின்றான்.. இறுதியில் ஒரு சிவாலயம் வருகிறது.. அங்கு எம்பெருமானார் சிவனுக்கு சில நெய்வைத்தியங்கள் பக்தர்கள் படைத்தது இருந்தனர்.. அவன் ஓட்டம் தாங்காமல் ஈசன் கருவறைக்குள் செல்கிறான்..ஒரு சிறிய விளக்கு மட்டும் அணைந்து போகின்ற நிலைமையில் உள்ளது..அவன் தான் வயிற்று பசி தாங்காமல் அந்த இறைவனின் அறைக்குள் ஏதேனும் நெய்வைத்தியம் உண்பதற்காக அந்த விளக்கை தூண்டினான்..தூண்டிய உடன் கோவிலில் இருந்து சிலர் அவனை அடிக்கலானர்.
அவன் சப்தம் கேட்டவுடன் எந்த பிரசாதத்தையும் சாப்பிடாமல் ஓடத்துவங்கினான்.. இறுதியில் பசி தாங்கமுடியாமல் இறந்து போனான்..
உடனே அவன் இறந்த உடன் எம தூதர்கள்
அவனை கூட்டிச்செல்ல ஒருபுறம் வருகின்றனர்., மறுபுறம் கைலாயத்தில் இருந்து எம்பெருமானாரால் தேவர்கள் அழைத்துச்செல்ல வருகின்றனர்.. எமதூதர்கள் சரியாக அவனை தொடும் வேளையில்,தேவர்கள் அந்த வேத நெறியை விட்டு விடுங்கள்..அவன் கைலாயத்தில் சிவபெருமனரால் அழைக்கப் பட்டிருக்கின்றான் என்ற வுடன் எமதூதர்கள் என் எதற்கு என்று வினவினார்கள்..
அதற்கு தேவர்கள் கூறிய பதில்
அவன் இறந்த நாள் முதலில் சிவராத்திரி
அவன் அன்று பச்சை தண்ணீர் கூட குடிக்க வில்லை..
அவன் ஈசனின் கருவறைக்குள் அணையும் நிலையில் இருந்த விளக்கை தூண்டினான்,,
என்று கூறியவுடன் எமதூதர்கள் தேவர்களிடமே அவனை விட்டுவிட்டனர்..
அவனும் கைலாயமலையில் ஈசனின் முக்தி பேற்றிற்கு ஆளானான்.
தெரியாமல் நடந்தது அந்த வேதநெறியின் செயல்கள்,,
அதற்கே அவனுக்கு முக்தி கிடைத்தது என்றால்,நாம் தினமும் கடவுளை மனதை ஒருமுக படுத்தி இறைவனை வழிபட்டால் எந்த அளவு இறைவனிடம் பேரருள் பெற்று முக்திநிலையை அடையலாம்..
Posted by ரமணி. N at Friday, February 20, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, February 19, 2015

சித்தர் பாடல்கள் ,(ஒலி அலைகளில் ....)

சித்தர் வணக்கம்,
 மெய் சிலிர்க்கும் பாடல்கள் !!! .,  அரிய ரம்யமான சித்தர் பாடல்களை .,இணையத் தளத்தில்  வெளியிட்ட  முகமறியா நண்பருக்கு மனமார்ந்த !! நன்றிகள் கோடி !!!
சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் ,
http://www.4shared.com/file/191245638/d44bf476/01_sivavakkiyar__001-140_.html
http://www.4shared.com/file/191245856/6f3753fd/02_sivavakkiyar__141-280_.html
http://www.4shared.com/file/191246257/7124953/03_sivavakkiyar__281-420_.html
http://www.4shared.com/file/191246408/ee57dc35/04_sivavakkiyar__421-550_.html
பத்திரகரியார் சித்தர்  பாடல்கள் ,
http://www.4shared.com/file/191245761/d122d2a0/02_BADRAGIRIYAR.html
பாம்பாட்டிச்சித்தர் பாடல்கள் ,
http://www.4shared.com/file/191245977/2bc46bde/03_PAAMPAATTI_SIDDHAR.html
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்,
http://www.4shared.com/file/191246305/95a9b60d/04_AGAPPEI_SIDDHAR.html
குதம்பைச்சித்தர் பாடல்கள்
 http://www.4shared.com/file/191246460/b6d6f381/05_KUDHAMBAI_SIDDHAR.html
அழுத்தவும் : ==>  மேலும் பல சித்தர் பாடல்கள் ,திருமுறைகள் ,
இரவு நேரங்களில் இந்த சித்தர் பாடல்களை
கேட்டு பாருங்கள் ஞானமது உங்களை தாலாட்டும் !!!
இப்படிக்கு ,

சித்தர் பைத்தியம் ,
Posted by ரமணி. N at Thursday, February 19, 2015 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Followers

Blog Archive

  • ►  2010 (26)
    • ►  October (19)
    • ►  November (4)
    • ►  December (3)
  • ►  2011 (52)
    • ►  May (1)
    • ►  June (2)
    • ►  July (6)
    • ►  August (6)
    • ►  September (32)
    • ►  October (2)
    • ►  November (2)
    • ►  December (1)
  • ►  2012 (131)
    • ►  January (18)
    • ►  February (13)
    • ►  March (12)
    • ►  April (23)
    • ►  May (20)
    • ►  June (10)
    • ►  July (10)
    • ►  August (7)
    • ►  September (6)
    • ►  October (11)
    • ►  November (1)
  • ►  2013 (43)
    • ►  January (4)
    • ►  February (1)
    • ►  March (1)
    • ►  April (3)
    • ►  May (4)
    • ►  June (3)
    • ►  July (5)
    • ►  August (8)
    • ►  September (6)
    • ►  October (8)
  • ►  2014 (54)
    • ►  January (5)
    • ►  March (2)
    • ►  April (9)
    • ►  May (5)
    • ►  June (9)
    • ►  July (4)
    • ►  August (6)
    • ►  September (3)
    • ►  October (8)
    • ►  November (1)
    • ►  December (2)
  • ▼  2015 (26)
    • ►  January (7)
    • ►  February (3)
    • ►  March (7)
    • ►  April (3)
    • ►  May (2)
    • ►  June (2)
    • ►  July (1)
    • ▼  August (1)
      • ஈஸ்வரப்பட்ட மகரிஷியின் வாக்கு...

About Me

My photo
ரமணி. N
Toronto, Ontario, Canada
வணக்கம்! என்னுடைய அனுபவங்களை, சிந்தனைகளை, எண்ணங்களை, நான் அறிந்தவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதே என் எழுத்தின் தலையாய நோக்கம். மனிதர்களுக்கு மார்க்கங்களை காட்டிக் கொண்டிருப்பவர்கள், அதை விட முக்கியமாக செய்ய வேண்டியது ஒன்று உண்டு. அது.................... மனிதர்களுக்கு மனிதர்களை அடையாளம் காட்ட வேண்டியது. அந்த சிந்தனைத் தூண்டுதலின் விளைவு தான் உங்களுக்கான இந்தப் பக்கங்கள். "ஆன்மீகப் பாதை" என்கின்ற இந்த தமிழ் வலையத்தளம் ஒரு மாத, வார சஞ்சிகை அல்ல. இது எனது 'வலையத்தள மின் நூலகம்’. இங்கு எனக்குப் பிடித்த சில ஆக்கங்களை ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். " நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்கின்ற வார்த்தைக்கு ஒப்பாக, எனக்குப் பிடித்த, என் உயிரோடு ஒன்றாகிப் போன, என்னைச் சிந்திக்க வைத்த சில பகுதிகள்,மற்றும் உங்களுக்குப் பயனுள்ளதான தமிழ் இணையம் பற்றிய சில கடந்த கால,நிகழ்காலத் தகவல்களையும் இணைத்துள்ளேன். நீங்களும் இந்த மின் நூல் நிலையத்திற்குள் நுழைந்து உங்களுக்கு விருப்பமான பகுதிகளை வாசிக்கலாம். இவை உங்களுக்குப் பயன்படுபவையாக இருக்க விரும்புகின்றேன். இவ்வலயத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை விமர்சனப் படுத்துங்கள். அவற்றை நான் வரவேற்கின்றேன். நன்றி என்றென்றும் நட்புடன், ரமணி. N கனடாவிலிருந்து.. ஐப்பசி 14, 2010
View my complete profile

Pages

  • Home

Ramanamaharshi

  • http://www.arunachala.org

Ramanamaharshi

  • www.Davidgodman,org
Picture Window theme. Powered by Blogger.