Monday, January 2, 2012

ஜோதி வடிவான ராமலிங்க வள்ளலார் -


"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறியவர் ஜோதி வடிவான ராமலிங்க வள்ளலார். அவர் நிறுவிய சத்யஞான சபையில் தைப்பூசத்தன்று ஜோதி தரிசன விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

கடலூரிலிருந்து 34 கிலோமீட்டர் தூரத் தில் உள்ளது வடலூர். வடலூரிலிருந்து பார்த் தால் இராமலிங்கரின் இஷ்டதெய்வமான தில்லை அம்பலவாணரின் ஆலய நான்கு கோபுரங்களும் தெரியும். இந்த புனிதத் தன்மையை முன்னிட்டுதான் ஒளி வடிவ இறைவனுக்கு சத்ய ஞான சபை உருவாக்க வடலூரைத் தேர்ந்தெடுத்தார் வள்ளலார்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்ற சித்தாந்தத்தை மேற்கொண்ட வள்ளலார், 1865-ல் உலகை நல்வழிப்படுத்துவதற்கு உருவாக்கியதுதான் சமரச சுத்த சன்மார்க்க சங்கமாகும்.

பசித்தவர்களுக்கு அன்னமிட 23-5-1867-ல் உருவாக்கப்பட்டதுதான் சத்ய தரும சாலை. இதை அமைத்து அன்னதானத்தை வள்ளலார் துவக்கினார். அதற்கு அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்று வரை 145 ஆண்டுகளாக எரிந்து கொண்டே உள்ளது. இது 21 அடி நீளமும், இரண்டரை அடி அகலமும் ஆழமும் கொண்டது. தினமும் காலை 6.00 மணி, 8.00 மணி, பகல் 12.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 8.00 மணி என்று ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடத்துகின்றனர்.

சத்யஞான சபை என்ற கோவில் 25-1-1872-ல் அமைக்கப்பட்டது. இறைவன் ஒளிமயமானவன். இதை உணர்த்த நிறுவியதுதான் இது. உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் எண் கோண வடிவில் சத்யஞான சபை அமைக்கப் பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப் புறம் சிற்சபையும் உள்ளன. பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து படிகள் உள்ளன. அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத் தின்மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபத்தைக் காணலாம். அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடி உள்ளது. கண்ணாடியை மறைக்கும் வண்ணம் ஏழு நிறங்களைக் கொண்ட ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப் பட்டுள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடியில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் எனப்படுகிறது.

சத்யஞான சபையில் 1872-ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று வள்ளலார் ஜோதி தரிசனத் தைத் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காணலாம். மாத பூசங்களில் ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும்.

இந்த ஏழு வண்ணத் திரைகளுக்கும் தத்துவங்கள் உண்டு.

கருப்புத்திரை- மாயையை விலக்கும்.

நீலத்திரை- உயர்ந்த நோக்கத்திற்கு ஏற்படும் தடையை விலக்கும்.

பச்சைத்திரை- உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும்.

சிவப்புத்திரை- உணர்வுகளைச் சீராக்கும்.

பொன்னிறத்திரை- ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும்.

ஆறு வண்ணங்களும் இணைந்த திரை- உலக மாயைகளை விலக்கும்.

இந்த ஏழு திரைகளை விலக்கி ஞான ஒளி யைக் காண்பதே ஜோதி தரிசனமாகும்.

சூரியனின் உத்தராயன புண்ணிய காலப் பயணம்- அதாவது வடக்கு நோக்கிய நகர்தல் தை மாத முதல் நாளில் தொடங்குகிறது. அந்த மாதத்தில் வரும் பூச நாளின் அதிகாலையில், கிழக்கில் சூரியனும் மேற்கில் முழு நிலவும் நடுவில் ஞானசபையில் உள்ள ஜோதியும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். இந்த அபூர்வ அமைப்பால்தான் எல்லா ஆலயங்களும் தைப் பூசத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடத்துகின் றனர். அன்றைய நாளில் சூரிய ஒளியிலிருந்து காஸ்மிக் கதிர்கள் எனும் மெய்காந்த அலைகள் அதிக அளவில் வெளிப்படும்.

"ஆன்ம விசாரணை என்ற தியானத்தை தினமும் செய்து வந்தால் மெய் காந்த அலைகளைப் பெறமுடியும். தியானத்தின் மூலம் இயற்கையின் உண்மை விளக்கங்களையும் ரகசியங்களையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்' என வள்ளலார் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

"தேவையற்ற எண்ணங்களையும் ஆசை களையும் மனதிலிருந்து அகற்ற மனத்தூய்மை வேண்டும். இதை அடைய தியானத்தால் மட்டுமே இயலும். இதுதான் ஆன்ம விசாரணை ஆகும். மனம் ஒருமைப்பட சுவாசம்தான் உறு துணை. சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலை என்ற சுவாசத்தால் புருவ மத்தியான சிற்சபை யில் மென்மையான ஜோதியாக உருவெடுக்கும். இதை ஒவ்வொரு மனிதனும் தன் முயற்சியால் உணரலாம்' என்கிறார் வள்ளலார். தியானத் தால் இயற்கை ரகசியங்களான இயற்கைச் சீற்றம், பேரழிவு போன்றவற்றையும் அறியலாம்.

வள்ளலார் இயற்றிய நூல்கள்

திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனு முறை கண்ட வாசகம் ஆகியவை. திருவருட்பா ஆறாயிரம் பாடல்களைக் கொண்டது. இவர் ஒரே இரவில் எழுதிய 1956 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி என்ற அகவல் பா, இவரின் சன்மார்க்க சங்கத்தினரால் பொதுமறை என போற்றப்படுகிறது.

ஆன்மநேய ஒருமைப்பாடு பன்னிரண்டு

ஏமசித்தி, சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், கடவுள் நிலையறிந்து அவ்வமயம் ஆதல் என நான்கு நெறிகளும்; இந்திரிய ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு ஒழுக்கமும்; சமரச சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்யஞான சபை, சித்திவளாகம் ஆகிய நான்கும் என பன்னி ரண்டும் ஒன்றுபட்டதே ஆன்மநேய ஒருமை.

வள்ளலாரின் பத்து நிலைகள்

● நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

● தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சுகமாக வாழவேண்டும் என்று எண்ண வேண்டும்.

● உலகில் உள்ள எல்லாரும் இன்பமாய் வாழவேண்டும் என நினைத்தல்.

● மனிதனைவிட குறைந்த அறிவுடைய விலங்குகள்மீதும் கருணை காட்ட வேண்டும்.

● பறவை, ஊர்வன என அனைத்தையும் நேசிக்க வேண்டும்.

● புழு, மீன் ஆகியவற் றிடம்கூட இரக்கம் காட்ட வேண்டும்.

● ஓரறிவு உயிர்கள் வாடி னால்கூட நாம் வாட வேண்டும்.

● எல்லா உயிர்களையும் தம் உயிர் என நினைத்துப் பழக வேண்டும்.

இவை புற வாழ்வு தொடர் பான எட்டு நிலைகளாகும்.

அடுத்த இரண்டு நிலை களில் இறைவழிபாட்டுச் சிந்தனை தோன்றிவிடுகிறது.

● எல்லா உயிர்களும் இறைவன் வாழும் நிலையங் கள் என்று எண்ணி அவற் றுக்குத் தொண்டு புரிந்து வாழ்வதே இறைவழிபாடு என்று நினைப்பது.

● இறைவழிபாட்டின்படி வாழ்ந்து இறுதி யில் கருணைமயமான இறைவனோடு இரண் டறக் கலந்து மரணமில்லாத பெருவாழ்வு.

வள்ளலாரின் பத்து நெறிகள்

● கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதிமயமானவர்.

● மக்களிடம் ஜாதி- சமய வேறுபாடு கூடாது.

● மாமிசம் உண்பதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

● ஏழைகளின் பசி போக்க வேண்டும்.

● ஜீவகாருண்யம்தான் அன்பு வடிவமான ஆண்டவனை அடைய சுலபமான வழியாகும்.

● உயிர்கள் யாவும் சமமானவை.

● அவற்றை அரவணைக்கும் ஆன்மநேய ஒருமைப்பாடு எல்லாரிடமும் வர வேண்டும்.

● தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுக்கக் கூடாது.

● உடலும் உள்ளமும் இறைவன் வாழும் ஆலயங்களாகும். இறந்தவர்களை தகனம் செய்யாமல் புதைக்க வேண்டும்.

● உண்மையான அன்பால் கடவுளை வழி பாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண வேண்டும்.

வள்ளலார் கூறிய வாழ்க்கை வழிமுறைகள்

காலையில் சூரிய உதயத்திற்குமுன் எழுந்து தியானம் செய்ய வேண்டும். அதுபோல் இரவு படுக்கும் முன்பும் தியானம் செய்ய வேண்டும். கடவுள் சிந்தனையுடன் எழவேண்டும். அதே சிந்தனையுடன் உறங்க வேண்டும். கீரைகள், பழங் களைப் புசிப்பது நல்லது. எப்போதும் மன உற்சாகத்து டன் இருக்க வேண்டும். ஜீவகாருண்யத்துடனும் சுபகுணங்களுடனும் வாழ வேண்டும்.

வள்ளலார் வாழ்ந்த இடங்கள்:

சென்னை 1825- 1858; கருங்குழி- 1858- 1867; வடலூர் 1867- 1870; மேட்டுக் குப்பம் 1870- 1874.

வள்ளலாரின் அற்புதங்கள்

தில்லை நடராசர் தரிசனம் காண இராமை யாப் பிள்ளை குடும்பத்துடன் தன் நான்கு மாதக் குழந்தையான வள்ளலாரை எடுத்துச் சென்றார். அக்குழந்தை நடராசப் பெருமானுக்கு கற்பூர ஆராதனை நடக்கும்போது கண்ணிமை யாது கண்டு மகிழ்ந்து, கலகலவென சிரித்தது. இது கண்ட தீட்சிதர், "இக்குழந்தை அம்பல வாணரின் அருட்குழந்தைதான்' என்று போற்றி னார்.

பிள்ளைப் பருவத்தில் முருகன் அருளால் திண்ணையிலிருந்து கீழே விழாமல் காக்கப் பட்டார். ஐந்து வயது குழந்தைப் பருவத்திலேயே சிதம்பர ரகசியத்தை மக்களுக்குக் காட்டினார். சக்திதேவியே அண்ணி வடிவில் வந்து இவருக்கு உணவு அளித்துள்ளார். தண்ணீராலேயே இவர் விளக்கெரிய வைத்துள்ளார்.

இராமலிங்கர் தனியறையில் கண்ணாடிமுன் விளக்கேற்றி வழிபட்டார். அப்போது முருகன் கண்ணாடியில் திருக்காட்சி தந்து, எல்லா கலைகளையும் ஓதாது உணர்த்தியருளினார்.

திருவொற்றியூர் பட்டினத்தடிகள் ஆலயத் தில் தொண்டாற்றிய மூதாட்டி, தான் உய்யுமாறு ஓர் அற்புதம் காட்டியருள வேண்டினதால், அவர் கரத்தில் மணலைக் கொடுத்தார் வள்ள லார். அது உடனே சிவலிங்கமாக மாறியது.

கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவரின் வாதநோயை- அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் தீர்த்து வைத்து, வாத நோய் போக்கிய வள்ளலார் என்று பெயர் பெற்றார்.

துலுக்காணத்தம்மன் கோவிலில் பக்தர்கள் வள்ளலாரைப் பாட அழைத்தனர். அங்கு பலி கொடுக்க ஆடு, கோழிகள் இருந்தன. அது கண்ட வள்ளலார், "பலி கொடுப்பது கூடாது; ஆடு, கோழிகளை விடுவித்தால்தான் பாடுவேன்' என்றார். அப்படியே செய்தனர். பின்னர்தான் இவர் பாடினார். அப்போது இவருக்கு வயது 44. அன்று பக்தர்கள் இவருக்கு வள்ளலார் என்ற பட்டம் தந்தனர்.

வள்ளலாரின் வாழ்க்கைக் குறிப்பு

தவ அருட்செல்வர், ஆன்மிக விஞ்ஞானி, ஓதாது உணர்ந்தவர், வள்ளலார் எல பலவாறு போற்றப்பெற்றவர் இராமலிங்க சுவாமிகள். இவரது பெற்றோர் ராமையா- சின்னம்மை. சுபானு ஆண்டு, புரட்டாசி மாதம், 21-ஆம் தேதி (5-10-1823) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.54 மணிக்கு மீன லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரத்தில் வடலூரில் அவதரித்தார்.

வள்ளலாருக்கு சபாபதி, பரசுராமன் என்ற சகோதரர்களும்; சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் ஆன்மிக நாட்டத்தில் வளர்ந்த அவர், பெரியோர்களின் வற்புறத்தலால் தன் சகோதரி உண்ணாமுலை அம்மையின் மகள் தனகோடியை மணந்தார். மனைவியை ஆன்மிக வழியில் ஈடுபடுத்தினார். ராமகிருஷ்ணர்- சாரதாதேவிபோல் இருவரும் வாழ்ந்தனர்.

பல்வேறு ஆன்ம சாதனைகளையும் சமுதாயத் தொண்டையும் செய்த வள்ளலார், இறுதியாக தை மாத வெள்ளிக்கிழமை (30-1-1874) நள்ளிரவு 12.00 மணியளவில், மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தின் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு இறைஜோதியில் கலந்தார். இந்த அறை திருக்காப்பீட்டு அறை எனப்படுகிறது.

தைப்பூசத்துக்கு மறுநாள் இவ்வறை திறக் கப்படுகிறது. அன்று சத்யஞான சபையிலிருந்து வள்ளலார் அருளிய திருவருட்பா பல்லக்கில் எடுத்து வரப்பட்டு இவ்வறையில் வைக்கப்படு கிறது. நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இவ்வறையை ஜன்னல் வழியாக பக்தர்கள் தரிசிக்கலாம்.

Sunday, January 1, 2012

பசு தானம்

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியன. பொன்னிறம், கருமை, வெண்மை, புகைநிறம், சிவப்பு நிறமானவை. இவற்றின் சந்திகளே பூலோகத்தில் வாழும் பசுக்கூட்டமாகும். இந்த ஐந்தும் கிருஷ்ணருக்குரிய கோலோகத்தில் இன்றும் இருப்பதாக ஐதீகம்.
பசுதானம் செய்தால் பிதுர்சாபம், முன் வினைப்பாவம் நீங்கும். திருமந்திரத்தில் திருமூலர் தினமும் பசுவிற்கு புல் இடும்படி வேண்டுகோள் விடுக்கிறார். இதனை வேதம் "கோக்ராஸம்' என்று குறிப்பிடுகிறது. ஒருவர், தானம் தரும் பசுவின் உடம்பில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கைக்கு ஈடான ஆண்டுகள் கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழும் பாக்கியத்தை அடைவார் என சில நூல்களிலும் தகவல் உள்ளது.
அவ்வையார், "ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று கோயில் வழிபாட்டோடு, பசுவின் சிறப்பையும் பாடியுள்ளார். ஆலயம் என்ற சொல்லை ஆ+ லயம் என்று பிரித்து "பசுக்கள் சேர்ந்திருக்கும் இடம்' என்று பொருள் கூறுவர். அவ்விடத்தை தொழுவது நன்மையைத் தரும் என்பதே இதன் பொருள். பசுமாடுகள் கட்டியிருக்கும் இடம் தொழுவதற்குரிய (வழிபாட்டுக்குரிய) இடமாக இருப்பதால் "மாட்டுத் தொழுவம்' எனப்படுகிறது.

Saturday, December 10, 2011

குரைக்கும் உலகம் என்ன செய்யும்? - கபீர் தாசர்

* நதியானது கடலில் சங்கமமாவது போல் என் மனம் இறைவனாகிய உன்னிடம் சங்கமமாகிறது.
* ஞானத்தின் யானை மேல் ஏறித் தியானம் என்ற ஆசனம் போட்டு அமர்ந்துகொள். நாய் போன்றது உலகம். நன்றாகக் குரைக்கட்டும். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
* இறைவா! உன்னிடம் நான் போகம், முக்தி ஒன்றையும் கேட்கமாட்டேன். எனக்கு பக்தியை தானமாக அருள்வாயாக. வேறு ஒருவரிடமும் இரத்தல் செய்ய மாட்டேன். உன்னைத்தான் இரப்பேன்.
* நீ ஜபமாலை உருட்டலாம், நெற்றியில் திருநீறு பூசலாம், நீண்ட ஜடை தரிக்கலாம். ஆனால், உள்ளத்தில் கொடிய விஷமிருந்தால் எப்படி கடவுளைக் காண முடியும்?
* பூஜை, சேவை, நியமம், விரதம் எல்லாம் வெறும் விளையாட்டுக்களே. ஆண்டவனை உள்ளத்தால் தொட வேண்டும். கடவுள் திருநாமத்தை நெஞ்சில் ஒரு வினாடி மனம் கசிந்து நினைத்தாலும் போதும்.
* மீனுக்கு நீரிலும், உலோபிக்குக் காசிலும், தாய்க்கு மகளிடமும், பக்தனுக்கு ஆண்டவனிடமும் பற்று அதிகம்.
* உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்து கொள்வார்கள். ஒருவரும் மனதை அவ்விதம் செய்து கொள்வதில்லை.
* கடவுள் ஒருவரே; எல்லா ஜீவராசிகளும் அவருடைய சொரூபமே. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ''அவர் என் கடவுள், இவர் அவன் கடவுள், உன் கடவுள் வேறு,'' என்ற பிரிவினை எல்லாம் ஏன்?
* காலம் தவறாது நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பதுமே முக்தியளிக்கும் என்று நினைத்தால் மீன்களுக்கும், விவசாயக்
கருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.

Wednesday, November 16, 2011

பூமியின் வரலாறு

இன்று நாம் வசிக்கும்  இந்த உலகம் ஒரு காலத்தில் இப்பொழுது இருப்பதைப் போல இருந்ததில்லை. 
                                                         
அப்பொழுது அண்டவெளி எங்கும் ஒரே இருள்.  ஒரே அமைதி . 

ஆதியில் அணுவுக்கு அணுவாய் இருக்கும் பரமாணுக்களான
எலக்ட்ரான் , புரோட்டான், நீயூட்ரான்   போன்றவைகள்
அண்டவெளியில் செயலற்ற நிலையில் இருந்தன. 
அப்பொழுது அண்டவெளி முழுவதும் ஊடுருவி இருந்த மகாசக்தியானது 
( conversation of  energy ) தான்  இயக்கும் சக்தியாக மாறி  ( potential force ) 
அண்டவெளி முழுதும் பரவியிருந்த பரமாணுக்களை  இயங்கும் சக்தியாக
  ( kinetic force ) மாற்றி செயல்பட வைத்தது.
எப்படி காந்தமானது இரும்பு துகள்கள் பக்கம் வரும்பொழுது அவைகள் சலனமுற்று நகரத் தொடங்குவது போல.
            அதனால் பரமாணுக்கள் அசைந்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்து
ஒரு அணு (atom ) என்பது உருவாயிற்று. இப்படி பலவிதங்களில்
பலவிதமான அணுக்கள் அண்டவெளியில்  உண்டாகி அசைந்து
நகரத் தொடங்கின.  பலகோடி அணுக்கள் ஒன்று சேர்ந்து கண்ணுக்குப் புலப்படாத தூசிகளாகவும், துகள்களாகவும்  அண்டவெளியில் உண்டாயிற்று.

                                     இப்படி உண்டான அணுக்கள் தன்னைத் தானே
சுற்றிக் கொண்டிருக்கும் பிற பொருட்களை தன்பால் ஈர்க்கும்
சக்தியினைக் கொண்டதாகவும் இருந்தன.

இந்த அண்டத் துகள்கள்  தன் ஈர்ப்பு சக்தியால் பல ஒன்றாகி மிகப் பிரம்மாண்டமான உருவம் கொள்ள ஆரம்பித்தது.
இப்படி கோடானு கோடி பொருட்கள் அண்டவெளியில் உருவானது . அவைகளில் மிகப் பெரிய பிரம்மாண்டமான இரண்டு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று அண்டவெளியில் மோது வெடித்துச் சிதறியது.
அந்த வினாடியில் அண்டவெளியில் மிகவும் சக்தி வாய்ந்த வெப்பம்  ( Heat ) கொண்ட ஒளியும்  ( light )மற்றும் பேராற்றல் கொண்ட ஒலியும் (sound )உண்டாயிற்று. 
இந்த நிகழ்வினை  மகா வெடிப்பு  ( Big bang theory )என்று விஞ்ஞானம் கூறியது.
                   இப்படி வெடித்து சிதறிய பாகங்கள், மையப் பகுதியில் இருந்த பிரகாசமான ஒளியினைச் சுற்றி வர ஆரம்பித்தன. 
இந்த பிரகாசமான ஒளியினையும், அதீதமான வெப்பத்தையும் கொண்ட மையப் பகுதி சூரியன் என்றாயிற்று.  இந்த சூரியன் என்பது வாயுக்களால் ஆன ஒரு  நட்சத்திரமாகும்.
                                          சூரியன் மிகவும் பிரம்மாண்டமான உருவம் கொண்டது. அதாவது  பூமியைப் போல 10 லட்சம் பூமிகளை இந்த சூரியனில் பொருத்தலாம். 

சூரியன் அதன் மைய அச்சில் சுழல்கிறது.
ஒரு சூரிய சுழற்சி முடிவடைய 22 ஆண்டுகளாகும். பூமியின் புவி ஈர்ப்பு சக்தியினை விட சூரியனின் ஈர்ப்பு சக்தி 28 மடங்கு அதிகமாகும்.
அதனால் மற்ற கோள்கள் தன்னை விட்டு விலகிப் போகாமல் வைத்துக் கொண்டது.

Thursday, November 10, 2011

உடலே மருந்து - போகரின் பொன்னூசி வைத்திய முறை




உணவே மருந்து’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘மருந்தே உணவு’ என்ற இன்றைய நிலையையும் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். இங்கே நாம் பேசப் போவது ‘உடலே மருந்து’ என்பதை!

‘‘உடல் எங்கேயாவது மருந்தாக செயல்படுமா? அதை என்ன கரைத்தா குடிக்க முடியும்?’’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உடம்பைக் கரைத்துக் குடிக்க முடியாதுதான். நம்மால் மட்டுமல்ல… எந்த நோயாலும் நம் உடலையும் கரைத்துக் குடித்துவிட முடியாது. அந்த நோயை ஓட ஓட விரட்டியடிக்கும் சக்தி நம் உடலுக்குள்ளேயே மறைந்திருக்கிறது. ஆஞ்சநேயர் போல தன் பலத்தை தானே அறியாமல் சோர்ந்திருக்கும் நம் உடலுக்கு அதன் பலத்தை நினைவுபடுத்த வேண்டியதுதான் நம் வேலை. மற்றவற்றை இயற்கையே பார்த்துக் கொள்ளும். இந்த புதுமை சிகிச்சைக்கு டாக்டரும் தேவையில்லை; மணிக்கணக்கில் காத்திருக்கவும் தேவையில்லை; பணமும் செலவழிக்கத் தேவையில்லை! உங்களுக்கு நீங்களே டாக்டர்…

அந்தக் காலத்தில் இன்றிருப்பது போல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் ஏது… மெடிக்கல் இன்ஷூரன்ஸ் ஏது? தலைவலி, காய்ச்சல் என்றால், இஞ்சியையும் சுக்கையும் தட்டி வெந்நீரில் போட்டுக் குடித்து நிவாரணம் கண்டவர்கள் நம் முன்னோர். இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் என ஒன்றையும் விடவில்லை அவர்கள். தான் படைத்த எல்லாப் பொருளிலும் ஏதோவொரு மருந்தை மனிதனுக்காக வைத்திருந்தது இயற்கை. அந்த மருந்துகளுக்கெல்லாம் மாமருந்தை மனிதனின் உடலுக்குள் வைத்திருந்தது. அதைத்தான் இந்தத் தொடரில் நாம் தரிசிக்கப் போகிறோம்.

சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப் பாருங்கள். அவர் அப்படி இயங்குவது நல்ல ஆரோக்கியத்தையே காட்டுகிறது. அந்த ஆரோக்கியம் உடலினுடையதா; அல்லது அதன் ஒரு பகுதியான மூளையினுடையதா? பிரித்தறியக் கஷ்டமாக இருக்கிறதா? உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மூளை மந்தமாக இருக்காது. மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தால் உடலின் பொலிவு மற்றும் இயக்கத்திலிருந்தே அதைக் கண்டு கொள்ளலாம். இந்தத் தொடர்பில்தான் அடங்கியிருக்கிறது உடல் மருந்தாவதன் ரகசியம்.

தொடர்பு என வருகிறபோது இருதரப்பை இணைக்கிற ஒரு கருவி அங்கு முக்கியமாகிறது. நம்புங்கள்…
 நமது மூளையும் உடலின் மற்ற பாகங்களும் தோலின் வெளிப்பகுதிகளில் கண்ணுக்குப் புலப்படாத
 வகையில் விரவியிருக்கும் சிறுசிறு புள்ளிகள் மூலம்தான் பரஸ்பரம் உறவைக் கொண்டுள்ளன.
 ‘அக்கு புள்ளிகள்’ என அழைக்கப்படுகின்றன அந்தப் புள்ளிகள். ‘எண்சாண் உடம்புக்கு தோல்
அரண்’ என்றால் அந்த பார்டரில் நின்றபடி உடம்பைக் காக்கும் சிப்பாய்கள் இந்தப் புள்ளிகள்.
 உள்ளங்கை, பாதம், காது மடல்களில் அதிகமாகவும், மற்ற பகுதிகளில் பரவலாகவும்
 காணப்படுகிற இந்த அக்கு புள்ளிகள் நம் உடலில் சுமார் 900க்கு மேல் உள்ளன. ‘இந்தப்
புள்ளிகளால் எந்த நோயையும் விரட்டலாம்’ என்பது நிரூபிக்கப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது.

‘அக்கு’ என்ற வார்த்தையைக் கேட்டாலே, ‘ஊசியை வச்சுக் குத்துவாங்களே… அந்தச் சீன வைத்தியமா’
என்கிறார்கள் இங்கு. அக்கு புள்ளிகளை மெல்லிய ஊசிகளால் தூண்டி நோய்களுக்குத் தீர்வு காண்பது ‘
அக்குபஞ்சர்’; ஊசிகளுக்குப் பதில் விரல்களைப் பயன்படுத்துவது ‘அக்குபிரஷர்’. இதெல்லாமே
சீனாவின் கண்டுபிடிப்பு என்றே நம்மவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை
 இங்கேயிருந்து – குறிப்பாக தமிழ் மண்ணிலிருந்துதான் – அங்கே போயிருக்கிறது. ‘ஏழாம் அறிவு’
படம் நினைவுக்கு வருகிறதா?

தமிழ் மரபின் 18 சித்தர்களில் போகர் பிரபலமானவர். முருகனுக்கு ஆலயம் எழுப்ப நினைத்த அவர்,
 உயர்ந்த ரக சீனக் களிமண்ணுக்காக அங்கு சென்றிருக்கிறார். அந்தச் சமயம் அங்கு இனம் தெரியாத
 நோயால் பாதிக்கப்பட்டு மக்கள் இறந்திருக்கிறார்கள். தனக்குத் தெரிந்த பொன்னூசி வைத்திய
முறையில் அவர்களில் சிலரைக் குணப்படுத்தியிருக்கிறார் அவர். இந்த சிகிச்சையில் கிடைத்த
அற்புத நிவாரணம், சீனர்களை அதிசயிக்க வைத்தது. தங்களுக்கும் அதைச் சொல்லித் தரக்
கேட்டிருக்கிறார்கள். போகரும் சொல்லித் தந்தார். அதைத் தொடர்ந்து பயன்படுத்தி, உலக
அரங்கில் அதைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள்.

இன்றைய நிலவரப்படி சீன மக்களில் 70 சதவீதம் பேர் எந்த நோய்க்கும் அக்கு சிகிச்சையே
எடுக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் உலகின் பல நாடுகளில்
இன்று இந்த சிகிச்சை பலருக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது

Wednesday, October 5, 2011

நம் வீட்டின் வரலாறு.இன்னுமொரு பகுதி உங்களுக்காக..

 பெரும் மழையின் காரணமாக உண்டான தண்ணீரானது பூமியில் மறைந்திருந்த மண்ணின் சத்தை, (தாது உப்புகள் போன்றவைகள்) கரைத்து நீர்ம நிலையில் , தாவர இனங்கள் உண்டாவதற்கு ஏற்ற தயார் நிலையில் பூமியினை வைத்திருந்தது.
சூரிய ஒளியும், வெப்பமும் பூமியின் மீது பட்டவுடன் மண்ணில் நீர்ம நிலையில் கரைந்திருந்த மண்ணின் சத்தில் இருந்து ஒரே இடத்தில நிலைத்து நின்று வளரக் கூடிய புல், பூண்டுகள்,  காளான்கள் போன்றவைகளும் , நீர்ம நிலையில் பாஷம்  போன்ற எளிய வகை தாவர முதல் நிலை உயிரினங்களும் உண்டாயிற்று.
இவைகளே பிற்காலத்தில் ஏக இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் இரண்டாம் நிலை உயிரினங்கள் பூமியில் தோன்றி வளர்ச்சி அடைவதற்கு முதல்படியாக அமைந்தது எனலாம். இப்படி நீரில் பாஷம்  போன்ற எளிய வகை தாவர இனத்தில் இருந்து நிலத்தில் மிகப் பெரிய அடர்ந்த காடுகள் வரை பல லட்சம் ஆண்டுகளில் உண்டாயின.
இப்படி நீரிலும், நிலத்திலும் முதன் முதலில் தோன்றிய மிகவும் எளிமையான தாவற இனனங்கள் சில காலம் வரையில் பூமியில் இருந்து கிடைத்த மண்ணின் சத்தாலும், சூரிய சக்தியாலும் மற்றும் அக்காலத்தில் காற்றில் அதிகமாக நிறைந்திருந்த கரியமில வாயுவையும் எடுத்துக் கொண்டும் வளர்ந்தன.
பிறகு இந்த தாவரங்கள்  அழிந்து , மக்கி  மண்ணில் மறைந்தன . இப்படி மக்கி மறைந்த தாவரங்கள் மறுபடியும் பூமியில் தாவர இனங்கள் தோன்ற காரணமான மண்ணின் சத்தாக மாறின.  இப்படியே சுழற்சி முறையில் தாவர இனங்கள் பூமியிலும், நீரிலும் , தோன்றி வளர்ந்து மறைந்து எப்போதும் பூமியின் உயிர் சத்தானது மாறாமல் அப்படியே வைத்துக் கொண்டது.
முதலில் விதைகள் என்பது இல்லாமல் முளைத்த மிக சிறிய தாவர இனங்கள் பிறகு செடி, கொடிகளாகவும், மரங்களாகவும் வளர்ச்சி அடைந்தது. பூத்து , காய்த்து, கனிந்து , அதில் இருந்து விதிகள் என்பது உண்டாகி, அவைகள் மறுபடியும் நீரிலும், நிலத்திலும் பல கோடி தாவர இனங்கள் உண்டாக காரணமாக இருந்தன.  இயற்கையும் தாவர இனங்கள் பூமியில் எங்கும் பரவி வளர்ச்சி அடைவதற்கு வேண்டிய சூழ்நிலையினை உருவாக்கி கொடுத்தது.
இந்த கால கட்டத்தில் பூமியில் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு  வேண்டிய பிராண வாயு உண்டாகி இருக்கவில்லை. அப்போது  அதிக அளவு கரியமில வாயுதான்  காற்று மண்டலத்தில் இருந்தது.  அதனால் தாவர இனங்கள்  பகலில்  கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு  பிராண வாயுவை வெளியிட்டன. இரவில்  பிராண வாயுவை எடுத்துக் கொண்டு  கரியமில வாயுவை வெளியிட்டன.  இந்த சுழற்சி முறையில் இயற்கையானது பிற்காலத்தில் உண்டாகப் போகும் உயிரினங்களுக்கு தேவையான பிராண வாயுவை சரியான விகித சாரத்தில் வைத்துக் கொண்டது.
இந்தவிதமான பூமியானது சுமார் 40 ,000 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது . என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முதலில் இந்த உலகமானது சலனமற்று அமைதியாக இருந்தது. இறைவன் சங்கல்பம் கொண்டவுடன் இந்த அணுக்களானது சலனம் அடைந்து உலகம் ஏற்படுவதற்கான மாற்றங்கள் அடையத் தொடங்கின. இந்த உலகம் தோன்றியபோது எழுந்த  ஒலியே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓங்காரம் என்ற "ஓம்" ஒலியாகும்.
பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று இந்த உலகம் முழுமை அடைவதற்கு  பல காரணங்களை அறிவியல் நமக்கு சொன்னாலும் அந்த காரணங்களின் ஒழுக்க கோட்பாட்டிற்கு ஆதாரமாய் நின்று  அவற்றை இயக்குபவனாய் இருப்பவரே
அந்த பரம்பொருளான இறைவன் ஆவான் .
பிரபஞ்சத்தின் தோற்றமும் ஒடுக்கமும்  இறைவனின் சங்கல்பம் ஆகும்



Saturday, October 1, 2011

நாம் வாழும் வீடு பற்றி ..

நம்முடைய சூரியக் குடும்பத்தில் ஒன்பது கோள்கள் உண்டாகின . 
மகா வெடிப்பின் போது சிதறிய மிகச் சிறிய பொருட்கள் எல்லாம் 
விண் கற்களாக மாறி அண்டவெளியில் சுற்றி வர ஆரம்பித்தன. 
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் புதன், வெள்ளி என்ற இரண்டு கோள்களும், பூமிக்கு வெளிப் புறத்தில்செவ்வாய்,வியாழன், சனி, யுரேனஸ் , நெப்டியூன் , ப்ளூட்டோ என்ற கோள்களும் உண்டாயின. 
  வெள்ளியும், யுரேனசும், தவிர மற்ற கோள்கள் எல்லாம் இடமிருந்து வலமாகநீள்வட்டப் பாதையில் தன்னைதானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவர ஆரம்பித்தன. 
சனி, சனி, யுரேனஸ் , நெப்டியூன் ,ஆகிய கோள்கள் வெறும் வாயுக்களால் ஆனவைகள் ஆகும். புதனும், வெள்ளியும் சூரியனுக்கு வெகு அருகில் உள்ளதால் அவை கொந்தளிப்பான கோள்கள் ஆகும். 
                        வியாழனின் மையப் பகுதி மட்டும் சிறிது கெட்டியானது .ஒவ்வொரு கோளுக்கும் என்று ஒரு காந்த மண்டலம் உள்ளது. இந்த காந்த மண்டலத்துடன் மின்சார மண்டலமும் உள்ளது. 
இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு செயல்களை இந்த மின்காந்த சக்தியால் தான்  நடத்தப்படுகின்றன . ஈதர் (Ether ) என்ற அண்டவெளி எங்கும் வியாபித்துள்ள பொருளின் அடித்தளத்தில் இருந்து தான் அதனை ஆற்றல்களும் செயல்படுகின்றன. 
               பூமி உண்டான பொழுதே சந்திரனும், பூமியிலிருந்து 3 .84 லட்சம் கி.மீ தூரத்தில் உண்டாயிற்று. அது தனிக் கோளாக உருவாக முடியாத நிலையில் அதன் நிறைக்கும், பரிமாணத்திற்கும் ஏற்ப பூமியினைச் சுற்றி வரும் உபகிரகமாக  சந்திரன் உருவாயிற்று . இது தன் அச்சில் தன்னைத்தானே , அதே சமயம் பூமியின் சுற்றுப் பாதையில் , பூமியுடன் சேர்ந்து அதே வேகத்தில் பயணம் செய்கிறது. 
பூமியின் துணைக்கோளான சந்திரன் சூரிய ஒளியினை பூமிக்கு பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி போன்றது தான்.  பூமியானது தான் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. 
பூமியின் சுழற்சி (speed ) வேகத்தின் காரணமாக பூமியனாது சுருங்கி அதன்மேல் பாகம் சிறிது கடின தன்மையினை அடைய துவங்கியது .   அதனால் பூமியானது கமலா ஆரஞ்சுப் பழத்தைப் போல மேலும் கீழும் சிறிது தட்டையான  உருண்டை வடிவம் அடைய ஆரம்பித்தது. இப்படி அமைந்த பூமியின் மேல்பகுதி ( North Pole ) என்றும் கீழ் பகுதி  தென்பகுதி ( South Pole ) என்றும் உண்டாயிற்று. இப்படி இரண்டு துருவங்கள் உண்டானதால்  பூமியானது ஒரு காந்த மண்டலம் என்று ஆகியது.
அப்போது பூமியின் மீது இருந்த அதீதமான வெப்பத்தின் காரணமாக பூமியில் இருந்த வாயு அணுக்கள் எல்லாம் ஆவி ரூபமாக மேலே சென்றது.  பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்ட சுழற்சியின் வேகம் (Speed ) காரணமாக பூமியினைச் சுற்றி அடர்த்தியாக இருந்த கரியமில வாயும் ( carbon dioxid ) மற்றும் அண்டவெளியில் இருந்த மற்ற பல வாயுக்களும் சேர்ந்து  காற்று மண்டலம் என்பது பூமிக்கு மேல் 10 கி . மீ  உயரம் வரை உண்டாயிற்று. பூமி சுழல்வதால் ,(Earth Gravity ) காற்று மண்டலமானது பூமியினை விட்டு விலகிப் போகாமல் பூமியைச் சுற்றி படர்ந்தன.