மரங்கள் மேல்
பாசம்
என் குரு ரமணருக்கு சமர்ப்பிக்கின்றேன்! "அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கருளிய பத்ம பாதங்களுக்கு இச் சிறியவளின் இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்" "முக்திக்கு எளியது அருணாச்சலம்; சாதனத்தில் சிறந்தது ஆத்மா விசாரம்; உபதேசத்தில் வலியது மோனம்; குருவில் சிறந்தவர் என் இதய ரமணன் " Sri Ramanarpanam Astu!
Wednesday, February 29, 2012
வாரியாரின் சொற்பொழிவில் இருந்து...மான் போல மானம் வேண்டும்!
உத்தரபிரதேசத்தில் கயா என்ற
÷க்ஷத்திரம் இருக்கிறது. இங்கே தர்ப்பணம் செய்வதற்காக செல்பவர்கள், தங்களுக்கு
விருப்பமான ஏதாவது ஒன்றை விட்டு வருவது வழக்கம்.
ஒரு தம்பதியர் அந்த ஊருக்குப் போனார்கள். தர்ப்பணம் செய்யும் போது, பண்டா (குருக்கள்) அவர்களிடம், ""நீங்க எதை விடப்போறீங்க?'' என்று கேட்டார்.
கணவனுக்கு எதையும் விட மனமில்லை, யோசித்துக் கொண்டே இருந்தார்.
""கத்தரிக்காயை விடறீங்களா?''
""எனக்கு அது ரொம்ப பிடிக்குமே,''.
""கேரட்டு...''
""அது கண்ணுக்கு நல்லதாச்சே! வைட்டமின் "ஏ' இருக்கு''.
""சரி...போகட்டும், தக்காளியை விட்டுடுங்க. அதை அதிகமா சாப்பிட்டா கால் உளைச்சல் வரும்னு சொல்றாங்க,''.
""அது விலை குறைவாச்சே,''.
""அப்ப...உருளைக்கிழங்கு,''.
""பூரி மசால்னா எனக்கு உயிரு. உருளைக்கிழங்கு இல்லாம எப்படி மசால் செய்யுறது,''.
பண்டாவுக்கு சலிப்பு வந்துவிட்டது. ""சரி...நீங்களே ஒண்ணைச் சொல்லுங்க,''.
கணவன் ரொம்ப யோசித்தார்.
""ஐயா! காசு பணம் செலவழிக்காம, உடம்பைக் கெடுத்துக்காம ஒண்ணே ஒண்ணை விடுதேன்!''
""என்ன அது..'' பண்டா அவசரப்பட்டார்.
""மானம்,''.
பண்டா தலையில் அடித்துக் கொண்டே, ""அம்மா! நீங்க எதை உடுறீங்க!'' என மனைவியிடம் கேட்டார்.
""குருக்களே! இந்த புருஷனை விட்டுடுறேன்,''.
""ஏம்மா!''
மானத்தை விட்ட புருஷனோட எப்படி வாழுறது!''
திருவள்ளுவர் சொன்னார்.
""மான் கூட மயிர் நீக்கினால் உயிர் வாழ்வதில்லை,'' என்று.
அப்படியானால் மனிதன் எப்படி இருக்க வேண்டும்?

Tuesday, February 28, 2012
பகவத் கீதை சித்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்தின் குறியீடு..
பகவத் கீதை என்றாலே என் நினைவுக்கு வரும் சித்திரம் ஸ்ரீ
கிருஷ்ணர் தேரை செலுத்த, அதில் அர்ஜுனன் பின்னிருந்த படி பயணிக்கும் இந்த சித்திரம்
தான்.இந்தச் சித்திரம் மிகுந்த உட்பொருள் உடையது.
இந்த சித்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் நம்மில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்தின் குறியீடு.
முதலில் எவை எவற்றை குறிக்கின்றன என்பதை பார்ப்போம்.
போர்- வாழ்க்கை.
போர்க்களம்- இந்த பூவுலகம்.
தேர்- நம் உடலை குறிக்கிறது.
ஆர்ஜுனர்- ஜீவாத்மாவை, தனி ப்ரஞ்யை, குறிக்கிறார்.
குதிரைகள்- மனதை குறிக்கின்றன.
ஸ்ரீ கிருஷ்ணர் கையின் கடிவாளம் விதியை குறிக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணர் கையின் சாட்டை- நம் அறிவை புத்திசாலித்தனத்தை குறிக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணர்- பரமாத்மா, மனசாட்சி, உள்ளுணர்வு -இவற்றை குறிக்கிறார்.
தேர்க்கொடியிலிருக்கும் ஆஞ்சநேயர்- நல்லொழுக்கத்தை குறிக்கிறார்.
நாம் வாழும் இந்த பூமி போர்க்களம். நம் வாழ்க்கை போர்.
எதிர் அணியில் அணிவகுத்து நிறபவர்கள் நாம் செய்த தீவினைகள். அவை எப்போதும் நமக்கு ஒரு பிரச்சனை மாற்றி ஒரு பிரச்சனையாக கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. பாண்டவர் படை நாம் செய்த புண்ணியங்கள். அவை நமக்கு சாதகமாக நம்மை காப்பாற்ற முயற்சிக்கின்றன. நாம் செய்த தீ வினைகள் கொடுக்கும் தொல்லைகளை சமாளிக்க நாம் செய்த புண்ணியங்கள் உதவுகின்றன.
குதிரைகள் இழுத்துச் செல்லும் திசையில் எப்படி தேர் செல்கிறதோ அப்படி நம் உடலும் மனம் இழுத்துச் செல்லும் திசையில் தான் செல்கிறது. உ-ம்: மனம் சாப்பிட வேண்டும் என்றால், உணவு கிடைக்கும் இடத்தை நோக்கி நகர்கிறோம். அதனால் தேர் நம் உடலை குறிக்கிறது.
அர்ஜுனர் தான் ஜீவாத்மா. தனி ப்ரஞ்யை. அர்ஜுனர் தேரில் நிற்பதை போன்று ஜீவாத்மா நம் உடலில் உரைகிறது. அர்ஜுனரின் வேலை அம்புகள் எய்வது மட்டும் தான். அதே போல நமது வேலையும் நம் கடமையை செய்வது மட்டும் தான்.
மனம் குதிரை போன்றது. அது ஒரே சமயத்தில் நான்கு விஷயங்களை சிந்திக்கக்கூடியது. ஒரே சமயத்தில் நான்கு விஷயத்தை சிந்திக்கக் கூடியதாக இருந்தாலும், ஒரு முகப்பட்டு செயல்பட வேண்டும். மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும் குதிரையை அடக்குவது போன்றது தான். மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் குதிரை முரண்டு பிடிக்கும். மெல்ல மெல்ல தட்டி கொடுத்து வழிக்கு கொண்டு வர வேண்டும். எப்பொழுது உணவிட வேண்டுமோ அப்பொழுது உணவளித்து. எப்பொழுது நீர் கொடுக்க வேண்டுமோ அப்போது நீர் கொடுத்து, அதை உற்சாகப் படுத்த வேண்டும். மனமும் அப்படித் தான். ஓரேயடியாக அடக்கி வைத்தால் மன அழுத்தம், சோர்வு இவை ஏற்படும். அதனால் அதன் ஆசைகளையும் அவ்வப்போது நிறைவேற்றி அதை உற்சாகப்படுத்த வேண்டும். அப்போது அது கிருஷ்ணர் ஓட்டிச்செல்லும் இந்த குதிரை போல ஆரோக்கியமானதாக இருக்கும்.
கடிவாளம் தான் விதி. மனம் விதியின் பிடியில் இருக்கிறது. விதி எந்த திசையில் திரும்புகிறதோ மனமும் அந்த திசையில் தான் பயணிக்கும்.
கடிவாளத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணர் கடவுள். விதியை கடவுள் இயக்குகிறார். இங்கே இது ஒரு விதிவிலக்கு. கடவுள் நம் விதியை இயக்க வேண்டும் என்றால் நாம் இறைவனிடம் சரணடைந்து இருக்க வேண்டும்.
கிருஷ்ணர் கையின் சாட்டை நம் புத்தி. புத்தி மனசாட்சியின் பிடியில் இருக்கிறது. புத்தி மனசாட்சியின் பிடியில் இருந்தால் மனம் சரியான திசையில் செல்லும் போது அதை வேகப்படுத்தும். தவறான திசையில் செல்லும்போது இயங்காமல் இருந்து, வேகத்தை குறைத்து விடும்.
கிருஷ்ணர் மனசாட்சி, ஆழ்மனம், பேருணர்வு, பரமாத்மா... இவர் உருவம் எடுத்து வந்தால் ஆயிரம் நாமங்கள். உருவமின்றி நமக்குள் இருந்தால் அதற்கும் எத்தனை நாமங்கள். இந்த மனசாட்சியானது இந்த வாழ்க்கையால் பாதிக்கப்படுவது இல்லை. இது ஜீவாத்மாவிற்கு துணையாக இந்த வாழ்க்கையில் பங்கெடுக்கிறது.
ஆஞ்சநேயர்- இவர்கள் கொடியில் ஆஞ்சநேயர் இருக்கிறார். ஆஞ்சநேயர் நல்லொழுக்கத்தை குறிக்கிறார். நல்லொழுக்கம் நம்மிடம் இருக்கும் வரை தீய சக்திகளால் நமக்கு எந்த பாதிப்பும் வராது.

Saturday, February 25, 2012
ஓரறிவு உயிராக இருந்தாலும் மரத்திற்கு உயிர் உண்டு
ஓரறிவு உயிராக
இருந்தாலும் மரத்திற்கு உயிர் உண்டு.
.அவற்றுக்கு அன்போடு தண்ணீர் ஊற்றுவது நம் கடமை. காட்டில்
உள்ள மரங்களை வெட்டி வீட்டிற்குத் தேவையான ஜன்னல்,கதவு எல்லாம் செய்து கொள்வது
தவிர்க்க முடியாதது. ஆனால், அனுமதியின்றி இங்கு மரங்களை வெட்டினால், சிறைதண்டனை
தரப்படுகிறது. அங்கோ நரகமே கிடைக்கும் என்கிறது விஷ்ணு புராணம். இவர்கள்
"அசிபத்ரவனம்' என்ற காட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். அங்கு மரங்கள் மிக அடர்ந்து
நெருக்கமாக இருக்கும். இலைகள் கத்திபோல கூர்மையாக இருக்கும். தேவையில்லாமல் மரத்தை
வெட்டிய பாவத்திற்காக யமபடர்கள் வெட்டியவர்களை அந்தக்காட்டிற்குள் விரட்டிவிடுவர்.
கத்திமாதிரியான இலைகள் உடம்பைக் குத்திக் கிழிக்கும். தேவையின்றி மரம் வெட்டும்
நபர்கள் இதை மனதில் கொள்ளட்டும்
சபரி அன்னை
எத்தனை நாட்கள்
எத்தனை நாட்கள்
சபரிமூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்...
ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ராம அவதாரம்.
அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?
ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார்.
சபரி என்ற வேடகுலப் பெண்; வேட்டையாடிப் புலால் உண்ணும் தன் இனத்தவரை வெறுத்து மாதங்க வனம் எனும் வனத்தில் துறவியாக வாழ்க்கை நடத்தினாள். இவ்வனத்தில் ஆச்சிரமம் அமைத்து தன் சிஷ்யர்களுடன் தவம் இயற்றிய மாதங்க முனிவருக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து அருந் தொன்றாற்றினாள்.
மாதங்க முனிவர் தனது இறுதிகாலத்தில் சபரியை நோக்கி “சபரி நீ இப்பிறப்பில்’ வேடுவக் குலப்பெண்ணாய் பிறந்தாய் எனினும் பல நற்கருமங்களை புரிந்தாய். ஸ்ரீ இராமர் இந்த ஆச்சிரமத்திற்கு வருவார். அவர் உனக்கு அருள்புரிவார். நீ நற்கதி பெறுவாய்” என்று கூறினார்.
முனிவர் கூறியபடியே சீதாபிராட்டியைத் தேடிவந்த இராம, இலக்குமணர்கள் சபரி மலைக்கு வந்தனர். சபரிமலை காட்டில் கிடைத்த கிழங்கு, கனி வகைகளில் முதலில் சுவைத்துப் பார்த்து, அவற்றில் இனியவைகளை மட்டுமே தெரிந்து இராம, இலக்குமணரிடம் சமர்ப்பித்து சபரி வணங்கினாள். இராமபிரானின் பரிபூரண அருள் சபரிக்குக் கிடைத்தது.
பம்பாநதி தீரத்தில் வாழ்ந்த சபரியைப் பற்றி பின்வரும் தகவலும் வழக்கிலுள்ளது. ஒருமுறை சில முனிவர்கள் சபரியை தம் காலால் உதைத்ததால் பம்பாநதி முழுவதும் பருக உதவாதவாறு கெட்டது. இராமபிரானை தரிசித்து அவர் பாதம் வணங்கி நின்ற சபரியை நோக்கி இராமபிரான் “அம்மா அடியேன் உனக்கு என்ன வரம் அளிக்க வேண்டும்? என்று கேட்க, அதற்கு சபரி, தேவரீர் பம்பாநதி முழுவதும் பருக உதவாது அசுத்தமடைந்துள்ளது. அதனை மீண்டும் தூய்மைப்படுத்தி நன்னீராக மாற்றி அருள வேண்டும் என்றாள்”
இராமபிரான் தாயே, இதற்கு ஏன் நான் வரம் கொடுக்க வேண்டும்? உன் பாத தூளியே பம்பையை தூய்மையாக்கி விடாதா? பம்பையில் அது தூய்மையாகிவிட வேண்டும் என்று பிரார்த்தித்தபடியே நீராடி வரும்படி திருவாய்மலர்ந்தருளினார். கருணைக்கடல் இராமபிரானின் எண்ணப்படி சபரியும் நீராட பம்மைநதியும் சகல தோஷகங்களும் நீங்கி தூய்மையடைந்தது. பம்பையில் நீராடி பக்தர்கள் தூய்மையடைகின்றனர். அன்னை சபரி அன்பின் வடிவம். அவள் இருந்தும் நடந்தும், உலாவிய பகுதி அழகிய சபரிமலையின் சிகரம். எழில் மிகு அந்த கொடுமுடியிலேதான் தருமசாஸ்தா ஐயப்பனாக வீற்றிருந்து அருள்புரிகின்றார். இதயத்தை பரம்பொருளில் ஏற்றி இராமபிரானை துதித்த வண்ணமே யோக சமாதியில் மூழ்கி சபரி வீடு பேறு பெற்றார்.
உனக்காய் இங்கே தவம்
கிடந்தேன்
என் எலும்பும்
தோளும் உடலும் தேய
என் உயிரை மட்டும்
வைத்திருந்தேன்
நீ வருகின்ற வழியை
பார்த்து பார்த்து
என் நீள விழியும்
பூத்ததய்யா
எங்கே ராமன்? என
கேட்டு கேட்டு
என் இதயம் தினமும்
துடித்ததய்யா
உணவும் மறந்தேன்
நீரும் மறந்தேன்
பஞ்சனை தூக்கம் நான்
துறந்தேன்
நீ வருவாய் என்ற
ஆசையில் மட்டும்
இதுவரை நானும்
பிழைத்திருந்தேன்
உனக்காய் நானும்
கனிகள் சேர்க்க
வனத்துள் கொஞ்சம்
திரிந்திடுவேன்
அந்த நேரத்தில் நீ
வந்திருப்பாய் என
மீண்டும் இருப்பிடம்
திரும்பிடுவேன்
தினமும் இப்படி
ஏமாந்தும் கூட
உன் மேல் பாசம்
மட்டும் வளர்ந்ததய்யா
என் வளர்பிறை பாசம்
முழு மதியாகி
உன் முகத்தில் இன்று
ஒளிருதய்யா
கண்டேன் கண்டேன் உன்
திருமுகம் கண்டேன்
என் ஆயுளின் பயனை
நான் அடைந்தேன்
ஆனந்தப் பெருநிலை
திளைக்க திளைக்க
என் ஆன்மாவும்
உச்சிக்கு ஏறுதய்யா
இனிக்கும் கனிகளை
கொடுக்கும் எண்ணத்தில்
உன் விருந்தை
எச்சில் செய்திட்டேன்
மறு வார்த்தையின்றி
நீ உண்டு முடித்ததில்
இது வரை அது பற்றி
மறந்திட்டேன்
இதுவரை காத்த
ஆச்சாரம் அனைத்தும்
பாசமிகுதியால்
அழித்திட்டேன்
விருந்து முடிந்த
நிலையில் இப்போது
செய்வதறியாது
விழித்திட்டேன்
என் தவிப்பை
பார்த்து ராமா நீயும்
குழந்தை போல
சிரிக்கின்றாய்
ஆச்சாரத்தில் நான்
கொண்ட பிடிப்பை
அழகாய் நீயும்
கரைக்கின்றாய்
அன்பே ராமா உனை
கண்டது போதும்
என் உள்ளம்
நிறைகுடம் ஆனதய்யா
மனித பிறவியின்
உச்சத்தை தொட்டேன்
இனி மனித பிறவி
போதுமய்யா
உன் பேரை நானும்
ஜபித்துக் கொண்டே
அக்கினி ஜ்வாலையில்
இறங்கிடுவேன்
ஆத்ம ஸ்வரூபனை கண்ட
மகிழ்ச்சியில்
ஆத்ம ஸ்வரூபம்
பெற்றிடுவேன்
ராம ராம ராம ராம ராம
ராம ராம்
ராம ராம ராம ராம ராம
ராம ராம்
ராம ராம ராம ராம ராம
ராம ராம்
ராம ராம ராம ராம ராம
ராம ராம்
சபரிமூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்...
ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ராம அவதாரம்.
அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?
ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார்.
சபரி என்ற வேடகுலப் பெண்; வேட்டையாடிப் புலால் உண்ணும் தன் இனத்தவரை வெறுத்து மாதங்க வனம் எனும் வனத்தில் துறவியாக வாழ்க்கை நடத்தினாள். இவ்வனத்தில் ஆச்சிரமம் அமைத்து தன் சிஷ்யர்களுடன் தவம் இயற்றிய மாதங்க முனிவருக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து அருந் தொன்றாற்றினாள்.
மாதங்க முனிவர் தனது இறுதிகாலத்தில் சபரியை நோக்கி “சபரி நீ இப்பிறப்பில்’ வேடுவக் குலப்பெண்ணாய் பிறந்தாய் எனினும் பல நற்கருமங்களை புரிந்தாய். ஸ்ரீ இராமர் இந்த ஆச்சிரமத்திற்கு வருவார். அவர் உனக்கு அருள்புரிவார். நீ நற்கதி பெறுவாய்” என்று கூறினார்.
முனிவர் கூறியபடியே சீதாபிராட்டியைத் தேடிவந்த இராம, இலக்குமணர்கள் சபரி மலைக்கு வந்தனர். சபரிமலை காட்டில் கிடைத்த கிழங்கு, கனி வகைகளில் முதலில் சுவைத்துப் பார்த்து, அவற்றில் இனியவைகளை மட்டுமே தெரிந்து இராம, இலக்குமணரிடம் சமர்ப்பித்து சபரி வணங்கினாள். இராமபிரானின் பரிபூரண அருள் சபரிக்குக் கிடைத்தது.
பம்பாநதி தீரத்தில் வாழ்ந்த சபரியைப் பற்றி பின்வரும் தகவலும் வழக்கிலுள்ளது. ஒருமுறை சில முனிவர்கள் சபரியை தம் காலால் உதைத்ததால் பம்பாநதி முழுவதும் பருக உதவாதவாறு கெட்டது. இராமபிரானை தரிசித்து அவர் பாதம் வணங்கி நின்ற சபரியை நோக்கி இராமபிரான் “அம்மா அடியேன் உனக்கு என்ன வரம் அளிக்க வேண்டும்? என்று கேட்க, அதற்கு சபரி, தேவரீர் பம்பாநதி முழுவதும் பருக உதவாது அசுத்தமடைந்துள்ளது. அதனை மீண்டும் தூய்மைப்படுத்தி நன்னீராக மாற்றி அருள வேண்டும் என்றாள்”
இராமபிரான் தாயே, இதற்கு ஏன் நான் வரம் கொடுக்க வேண்டும்? உன் பாத தூளியே பம்பையை தூய்மையாக்கி விடாதா? பம்பையில் அது தூய்மையாகிவிட வேண்டும் என்று பிரார்த்தித்தபடியே நீராடி வரும்படி திருவாய்மலர்ந்தருளினார். கருணைக்கடல் இராமபிரானின் எண்ணப்படி சபரியும் நீராட பம்மைநதியும் சகல தோஷகங்களும் நீங்கி தூய்மையடைந்தது. பம்பையில் நீராடி பக்தர்கள் தூய்மையடைகின்றனர். அன்னை சபரி அன்பின் வடிவம். அவள் இருந்தும் நடந்தும், உலாவிய பகுதி அழகிய சபரிமலையின் சிகரம். எழில் மிகு அந்த கொடுமுடியிலேதான் தருமசாஸ்தா ஐயப்பனாக வீற்றிருந்து அருள்புரிகின்றார். இதயத்தை பரம்பொருளில் ஏற்றி இராமபிரானை துதித்த வண்ணமே யோக சமாதியில் மூழ்கி சபரி வீடு பேறு பெற்றார்.
Friday, February 24, 2012
ராகவேந்திர சுவாமிகள்
எவ்வளவு கஷ்டமான
சூழலிலும், ராகவேந்திரரை வழிபாடு
ராகவேந்திர சுவாமிகள் தன்
குடும்பம் மற்றும் சீடர்களின் குடும்பங்களுடன் தல யாத்திரை செய்து கொண்டிருந்தார்.
ஒரு சீடரின் மனைவி நிறைமாத கர்ப்பவதியாக இருந்தாள்.செல்லும் வழியில் அவளுக்கு பிரசவ
வலி ஏற்பட்டது. தாகம் வாட்டியது. அவர்கள் சென்று கொண்டிருந்த இடமோ பாலைவனப்பகுதி.
தண்ணீர் இல்லை. சுடுமணலில் படுத்து அவளால் எப்படி பிரசவிக்க முடியும்!ராகவேந்திரர்
தன் தண்டத்தால் ஒரு வட்டமிட்டார். மூலராமரை வணங்கி சில மந்திரங்களைச் சொன்னார்.
என்ன ஆச்சரியம்! தண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. அதை அந்தப் பெண்ணும் உடன்
வந்தவர்களும் குடித்து தாகம் தணித்தனர். தண்ணீர் பெருகியதால், அந்த இடத்தில் கிடந்த
மண்ணும் குளிர்ந்தது. ராகவேந்திரர் தன் கஷாயத்தை (ஆடை) கூடாரம் போல் கட்டி நிழலை
ஏற்படுத்தினார். உடன் வந்த பெண்கள் பிரசவம் பார்க்க குழந்தை பிறந்தது. எவ்வளவு
கஷ்டமான சூழலிலும், ராகவேந்திரரை வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு நிவாரணம்
கிடைக்கும்.
Friday, February 17, 2012
காஞ்சி முனிவர்
காஞ்சிப்பெரியவர் ""மாதா, பிதா,
குரு, தெய்வம்'' என்னும் வேதவாக்கியத்தை பக்தர்களுக்கு அடிக்கடி உபதேசிப்பார்.
பிறருக்கு உபதேசம் செய்வதோடு தானும் வாழ்வில் கடைபிடித்து நடப்பதே நல்ல குருநாதரின்
அடையாளம்.
தன் வாழ்க்கையின் கடைசிநாளில் இதைக் கடைபிடித்து நமக்கு வழிகாட்டியிருக்கிறார்.
1994 ஜனவரி 8ல், அவர் ஸித்தியடைந்தார். அதற்கு முந்தியநாள் இவரது தாயாருடைய ஊரான ஈச்சங்குடியில் வைப்பதற்காக பெற்றோரின் புகைப்படங்கள் பெரிதாக்கப்பட்டு தயாராக இருந்தன. ஸித்தியடைவதற்கு முன் அவரது மரக்குவளையைச் சுத்தம் செய்வதற்காகச் சென்ற சீடரிடம், "நீ கலவை சென்றிருக்கிறாயா? அங்கே தான் என் குரு, பரமகுரு ஆகியோரின் பிருந்தாவனம் இருக்கிறது'' என்று சொல்லி அவர்களை நினைவு கூர்ந்தார். பின் அவரிடம் ஈச்சங்குடிக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த பெற்றோரின் புகைப்படங்களை எடுத்துவரச் சொல்லிப் பார்த்தார். சிறிதுநேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
மாதா,பிதா, குரு, தெய்வம் என்னும் உபதேசத்தை பின்பற்றி வாழ்ந்த பெரியவரின் பிருந்தாவனத்தை பிர்லா குடும்பத்தினர் கலையழகு மண்டபமாக அமைத்தனர். அதில் நித்ய வாசம் செய்யும் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பூஜையறையில் பெரியவரின் பிருந்தாவனப்படத்தை வைத்து பூஜித்தால் அவரது பூரண அருள் பெறலாம்.

பொய் சொல்ல வேண்டாம்
கிருஷ்ணர் துர்வாச
முனிவரிடம் வந்து, பாண்டவர்களை அவருடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்
கொண்டார். அதற்கு சம்மதித்த முனிவர், "அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் எனக்கு
ஆட்சேபனை இல்லை. ஆனால், யாராவது வந்து கேட்டால் என்னால் பொய் சொல்ல முடியாது."
என்றார்.
"நீங்கள் பொய் சொல்ல வேண்டாம். ஆனால் யாராவது வந்து கேட்டால், சற்று உரத்த குரலில், கோபம் தெரியும்படி பதில் சொல்லுங்கள். போதும்" என்று கிருஷ்ணர் கேட்டுக் கொண்டார்.
துரியோதனனின் ஆட்கள் பாண்டவர்களைத் தேடி வருவதை அறிந்த துர்வாசர், பாண்டவர்களை ஒரு பெரிய பள்ளத்தில் இறங்கியிருக்கச் சொல்லி அந்தப் பள்ளத்தின் மேல் ஒரு மரப்பலகையைப் போட்டு அமர்ந்து கொண்டார்.
அவர் எதிர்பார்த்ததைப் போலவே பாண்டவர்களைத் தேடி வந்தவர்கள் துர்வாசரிடம் விபரம் கேட்டார்கள்.
துர்வாசரும் கிருஷ்ணரின் யோசனைப்படி சற்றே உரத்த குரலில், "பாண்டவர்களா? இங்கே இருக்கிறார்கள்!" என்று தான் அமர்ந்திருந்த இடத்திற்குக் கீழே கையைக் காட்டினார்.
அதைக் கேட்டவர்கள் பயந்து போனார்கள்.
முனிவர் ஏதோ கோபமாக இருக்கிறார். இல்லாவிட்டால் எதற்காகக் கோபமாகவும், ஏதோ நம்மைக் கேலி செய்வது போலவும் கீழேக் கையைக் காட்ட வேண்டும்? என்று எண்ணியபடி அவரைத் தொந்தரவு செய்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

Saturday, February 11, 2012
பாகவதத்தில் அஜாமிளன்
ஒழுக்கமில்லாதவன்
கூட கடைசி நேரத்தில் பகவந்நாமத்தைச் சொல்லி நற்கதி அடைந்து விட்டான் .
பாகவதத்தில் அஜாமிளன் என்பவனின் கதை வருகிறது.
"ஜாமி' என்றால் "ஒழுக்கமான பெண்'. "அஜாமி' என்றால் ஒழுக்கமற்றவள். ஒழுக்கமற்ற
பெண்களை விரும்பியதால் இவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது. 88வயது வரை பெண்பித்தனாக
வாழ்ந்த அஜாமிளனுக்கு அந்திமகாலம் நெருங்கியது. இவனுடைய பத்து பிள்ளைகளில் கடைசிப்
பிள்ளை நாராயணன். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மகனை "நாராயணா' என்று
கூப்பிட்டபோது உயிர் நீங்கியது. பெரியாழ்வார் பாடியது போல, "நாராணன் அன்னை
நரகம்புகாள்' என்பது அஜாமிளன் வாழ்வில் உண்மையானது. விஷ்ணுதூதர்கள் வந்து அஜாமிளனை
வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒழுக்கமில்லாதவன் கூட கடைசி நேரத்தில்
பகவந்நாமத்தைச் சொல்லி நற்கதி அடைந்து விட்டான். எனவே, ஒழுக்கத்துடனும்,
பக்தியுடனும் நாராயணன் பெயரைச் சொன்னால் அவனது அருள் நிச்சயம். அதற்காக அஜாமிளன்
போல கடைசி நேரத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். நாக்கு உள்ளே
இழுத்துவிட்டால் எதுவும் பேசமுடியாமல் போய்விடும்.இன்றே சொல்லுங்க! இப்போதே
சொல்லுங்க! நற்கதிக்கு பாதை ஏற்படுத்துங்க!
Wednesday, February 8, 2012
கலிகாலத்தில் கீதோபதேசத்தின் மதிப்பு என்ன?
பாரத யுத்த்ததிற்குக்
காரணமாக நிகழ்ந்த விஷயங்கள் இன்றும் நம்மிடையே தோன்றுகின்றன. எத்தனை அனாசாரங்கள்,
எவ்வளவு கொலை கொள்ளைகள், எப்பேர்ப்பட்ட துராசாரங்கள்? அந்தக் காலத்தில் நடந்த எல்லா
விதமான் துர் நடவடிக்கைகளும் இப்பொழுதும் நடைபெறுகின்றன. குடும்ப சச்சரவு,
ராஜ்யத்தில் கலகம், சமூஹத்தில் அனாசாரம், நீதியின்மை, பலாத்காரம், உயிர்ப் பொருள்
சேதங்கள் என்னென்ன? எல்லோரும் தங்கள் சுகத்தை நாடியே வாழ்கிறோம். மற்றவருக்கு
இழைக்கப்படும் தீங்கைப் புறக்கணிக்கிறோம். இதைவிட துஷ்கர்மாக்கள் வேறு என்ன
வேண்டும்? அதர்மம் தலைவிரித்தாடுகிறது.. இந்த சமயத்தில் இந்த கீதோபதேசம் மிக ஆதரவாக
அமைந்துள்ளது. இதில் சொன்ன ஒவ்வொரு நீதியும் இந்தக் கலியுகத்திலும் கடைபிடிக்கக்
கூடியதாக உள்ளது. இந்தக் காலத்திற்கும் அவை மிகப் பொருத்தமாகத் திகழ்கின்றன.
அர்ஜுனனை வியாஜமாக வைத்து நமக்கு இந்தக் காலத்தில் நடக்க வேண்டிய தரும
வ்ருத்திகளைப் பறைசாற்றுகின்றன. ஆகையால் தான் கீதாஸாரம் எல்லாக் காலத்திலும் எல்லா
இடத்திலும் எல்லோராலும் எப்பொழுதும் பின்பற்றக் கூடிய, பின்பற்ற வேண்டிய ஒரு பெரும்
உபதேசமாகக் கருதப்படுகிறது. விவேகத்தால் காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸ்ர்யாதி
துஷ்ட குணங்களை வென்று, மனதை ஓர் நிலையில் வைத்து, தருமம், ப்ரேமை, கருணை, ஸமபாவம்,
பரோபகாரம், வைராக்யம், த்ருட நிச்சயம் என்ற நல்வழியில் வாழ்ந்து, அஹம் என்ற பாவத்தை
விட்டு, பகவானிடம் பூரண சரணாகதி அடைந்து, பக்தியெனும் ஓடத்தில் ஞானமெனும்
துழவுகோலின் உதவியால், ஸம்ஸாரம் எனும் மஹா சமுத்திரத்தைக் கடந்து ப்ரம்ம நிலையை
அடைய உதவி புரியும் மஹா காவியம் இந்த பகவத்கீதை.
Monday, February 6, 2012
கீதோபதேசம்:
பாண்டவர்களின் மூன்றாமவனான அர்ஜுனன் மிகப் பெரிய வில்லாளி. அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்தார் ஸ்ரீ கிருஷ்ண பகவான். யுத்த களத்தின் மத்தியில் அர்ஜுனன் எதிரியின் ஸேனையைப் பார்த்து அதில் தன்னுடைய சுற்றத்தார்கள் இருப்பதையும் யுத்தத்தில் எல்லோரும் மரணமடையத் தான் காரணமாகப் போவதையும் சுட்டிக்காட்டி, தன்னால் இந்த பாபத்தை செய்ய முடியாது. அப்படி எல்லோரையும் வதைத்துக் கிட்டும் இராஜ்யம் தமக்கு வேண்டாம் எனப் புலம்பினான். அப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனின் விஷாதத்தைக் கண்டு அவன் அஞ்ஞானத்தைப் போக்க அவனுக்கு போர்க் களத்திலேயே, இரண்டு ஸேனைகளுக்கு மத்தியில் தந்த வாழ்வின் இரகசியம், வாழ்க்கை என்பது என்ன, அதில் மனிதனின் தருமம் என்ன, நம் ஜன்ம இரகசியம் என்ன, வாழ்க்கை எப்படி தருமப் பிரகாரம் வாழ வேண்டும், மனிதனின் கடமை என்ன முதலிய கருத்துக்களை எடுத்துரைத்து அர்ஜுனனுக்கு திவ்ய திருஷ்டியைத் தந்து தன் விஸ்வரூப தரிசனத்தைக் காண்பித்து, வாழ்க்கையின் தத்துவத்தை விளக்க, அர்ஜுனன் மாயை நீங்கிப் போர்க்களத்தில் யுத்தம் செய்து பாண்டவர்கள் விஜயிக்குமாறு செய்தான். அந்த உபதேசம்தான் இங்கு கீதோபதேசமாகத் தரப்பட்டுள்ளது. இது, அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல், நம் எல்லோருக்கும், கால, தேச, சமய, ஜாதி, மத வித்தியாசம் இல்லாமல் வாழ்க்கை எப்படி தருமத்துடன் வாழ வேண்டும் என்ற தத்துவம், ஸனாதன தருமத்தின் ஸாரம், வேத வேதாந்தக் கருத்துகளடங்கிய உபதேசமாகக் கருத வேண்டும். இதை ஐந்தாவது வேதமாகப் பெரியோர்கள் கருதுகிறார்கள். அத்துணைத் தத்துவங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. இது மஹரிஷி வேதவியாஸரால் இயற்றப்பட்டு மஹாபாரத கிரந்தத்தின் மத்தியில் தரப்பட்டுள்ள ஒரு மஹா காவ்யம். இதைப் படித்து இதன்படி வாழ்ந்தால் நமக்கு முக்தி நிச்சயம்.
Sunday, February 5, 2012
பாரத யுத்தத்தின் கதைச்சுருக்கம்:
கலிகாலத்தில்
கீதோபதேசத்தின் மதிப்பு என்ன?
ஹஸ்தினாபுரத்தில்
விசித்திரவீரியன் என்ற மஹாராஜாவிற்கும் அம்பிகா என்ற அவர் மனைவிக்கும் பிறந்தவர்
த்ருதராஷ்டடிரன். த்ருதராஷ்டிரருக்கும் அவர் மனைவி காந்தாரிக்கும் பிறந்த 100
புத்திரர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப் பெற்றார்காள். அதே விசித்திரவீரிய
மஹாராஜாவிற்கும் அம்பாலிகா என்ற இன்னொரு மனைவிக்கும் பிறந்தவர் பாண்டு.
பாண்டுவுக்கும் அவர் மனைவி குந்தீ தேவிக்கும் பிறந்த 5 பிள்ளைகள் பாண்டவர்கள் என
அழைக்கப் பெறறார்கள். த்ருதராஷ்டிரர் மூத்தவரானாலும் பிறாவிக் குருடனானதால்
அவருக்கு பதில் பாண்டு அரசரானார், பாண்டுவின் மூத்த மகன் தருமபுத்திரன்
யுவராஜாவானார். இதனால் த்ருதராஷ்டிரனின் மூத்த மகன் துர்யோதனன் பாண்டவர்கள் மேல்
பொறாமை கொண்டு அவர்களுக்குப் பல இன்னல்களை விளைவித்தான். இடையில் பாண்டு இறந்து
தருமபுத்திரர் பால்ய பருவத்திலிருந்ததால் ராஜ்யப் பொறுப்பை ஏற்ற த்ருதராஷ்டிரன்
தருமபுத்திரர் இந்த்ரப்ரஸ்தம் எனும் ராஜ்யத்தை ஆளுமாறும் துரியோதனன் ஹஸ்தினாபுரத்தை
ஆளுமாறும் அமைத்தார். ஒரு சமயம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே.
சூதாட்டப் போட்டி நடைபெற்றது. அதில் துர்யோதனன், தன் மாமா சகுனியின் சொற்படிக்கு
சூதாட்டத்தில் சூழ்ச்சியால் தருமபுத்திரரைத் தோற்கடித்து அவர்பால் உள்ள
ராஜ்யத்தையும், சதுரங்கப் படைகளையும், எல்லா சொத்துக்களையும், தம்பிகளாகிய பீமன்,
அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்பவர்களையும், தன்னையும் இழக்கச் செய்தார். கடைசியில்
தருமபுத்திரர் தங்களது மனைவி பாஞ்சாலியைப் பணயமாக வைத்து அதிலும் தோற்கடிக்கப்
பெற்றார். பாஞ்சாலியை ராஜ சபைக்கு தலைமுடியைப் பிடித்து இழுத்துவந்து
மானபங்கப்படுத்த முயற்சித்தார்கள் கௌரவார்கள். அப்போது பஞ்சாலி ஸ்ரீ கிருஷ்ண பகவானை
வேண்டி சரணாகதி அடைந்தபோது, ஸ்ரீ கிருஷ்ணன் வஸ்திரத்தைக் கொடுத்து பாஞ்சாலியின்
மானத்தைக் காப்பாற்றினார். பிறகு தங்களது ராஜ்யங்கள் கௌரவர்களிடம் சிக்கியதால்
ராஜ்யமில்லமால் பாண்டவர்கள் மீண்டும் ஆடிய சூதாட்ட நியதிப்படி 12 வருடம் வனவாசமும்
1 வருடம் அஞ்ஞாத வாசமும் செய்தார்கள். ஆனால் அந்த 13 வருடங்களில் அவார்களை வாழ
விடாமல் கௌரவர்கள் இடையூறுகள் பல செய்தார்கள். ஆனாலும் பாண்டவர்கள் நியதிப்படி 13
வருடங்களை முடித்து வந்து ராஜ்யத்தைத் திரும்பக் கேட்டபொழுது தர மறுத்து
விட்டார்கள் கௌரவர்கள். முடிவில், பாண்டவர்களின் மித்திரராகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான்,
கௌரவர்களிடம் பாண்டாவர்களுக்காகத் தூது சென்று பாண்டவர்களுக்கு ஒரு ராஜ்யமோ, ஒரு
தேசமோ, ஐந்து கிராமமோ தருமாறு வேண்டினார். பயனில்லை. துர்புத்தி படைத்த துர்யோதனன்,
மாமா சகுனியின் போதனையால் ஒரு ஊசி குத்துவதற்குக் கூட இடம் தர மறுத்துவிட்டார்.
இதனால் சினமூண்டு பாண்டவர்கள் போருக்கு வந்தார்கள். அந்தப் போர் 18 நாட்கள்
நீடித்தது.
Saturday, February 4, 2012
தற்பெருமை மட்டும் கூடவே கூடாது...
மனிதனுக்குள், நல்லதும்
கெட்டதுமாக ஆயிரம் வகையான குணங்கள் புதைந்து கிடக்கும். ஆனால், தற்பெருமை மட்டும்
கூடவே கூடாது. ஏன்?
வியாசரின் மகன் சுகபிரம்மர். "சுகம்' என்றால் "கிளி'. ஆம்..சுகபிரம்மர் கிளிமுகம் கொண்டவர். பிறந்தவுடனேயே இவருக்கு ஞானம் வந்து விட்டது. எள் முனையளவு கூட களங்கம் இல்லாத மனதுடையவராக இருந்தார்.
ஒருநாள் வியாசர், ""சுகபிரம்மா இங்கே வா,'' என்றார்.
""வருகிறேன்,'' என்று சுகபிரம்மர் மட்டுமல்ல, அங்கே நின்ற மரம், மட்டை, செடி, கொடி எல்லாம் "வருகிறேன்,'' என்றன. சுகபிரம்மருக்கு பெருமை தாங்கவில்லை.
"நான் வருகிறேன்' என்றேன். ஆனால், ஊரிலு<ள்ள மரம் மட்டைக்குள் கூட நான் இருக்கிறேன். நான் எவ்ளோ பெரிய ஆள்,'' என்று நினைத்தாரோ இல்லையோ ஞானம் போய்விட்டது.
""சுகா! தற்பெருமையால் ஞானம் இழந்தாய். நீ ஜனகரைப் பார்த்து உபதேசம் பெற்று வா,'' என்றார்.
சுகர் மிதிலாபுரிக்கு சென்றார். ராஜாங்கத்தில் இருந்தும், குடும்ப வாழ்வில் பட்டும் படாமல் இருந்த ஜனகரைச் சந்திப்பதற்காக வாயில் காப்பவனிடம் அனுமதி கேட்டார்.
""சுவாமி! இங்கேயே நில்லுங்கள்! நான் போய் அரசரிடம் அனுமதி பெற்று வருகிறேன். மன்னர் நீங்கள் யார் எனக் கேட்பார். என்ன சொல்ல வேண்டும்?'' என்றான்.
""சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருப்பதாகச் சொல்,'' என்றார்.
காவலன் உள்ளே ஓடினான்.
""மன்னா! சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் தங்களைக் காண வந்துள்ளார்கள். அனுப்பட்டுமா?'' என்றான்.
""அவர் நாலைந்து பேருடன் வந்துள்ளார். அவர்களை வெளியே விட்டுவிட்டு தனியே வரச்சொல்,'' என்றார்.
காவலனுக்கு புரியவில்லை.
""அவர் ஒருவர் தானே வந்துள்ளார். மன்னர் இப்படி சொல்கிறாரே!'' இருந்தாலும் எதிர்க்கேள்வி கேட்க முடியுமா? அவன் தலையைப் பிய்த்துக்கொண்டு, ""சுகர் அவர்களே! தாங்கள் அழைத்து வந்துள்ள நாலைந்து பேரை விட்டுவிட்டு மன்னர் தங்களை உள்ளே வரச்சொன்னார்,'' என்றான்.
""சரி...சுகப்பிரம்மம் வந்திருக்கிறது என்று சொல்,'' என்றார்.
காவலனும் மன்னனிடம் அவ்வாறே சொல்ல, ""இன்னும் ஒரே ஒரு ஆள் இருக்கிறார். அவரை விட்டுவிட்டு வரச்சொல்,'' என்றார் ஜனகர்.
அவனுக்கு இன்னும் குழப்பம்.
""சுவாமி! தங்களுடன் இருக்கும் ஒருவரை விட்டு வரச்சொல்கிறார்,''.
""சரியப்பா! சுகபிரம்மன் வந்திருக்கிறான் என்று சொல்,'' என்றதும், அவனும் அங்கு போய் சொல்ல, ""அவரை உள்ளே வரச்சொல்,'' என்றார் ஜனகர்.
ஜனகர் அவரிடம் பேசவில்லை. மொட்டையடித்த ஒருவரை அழைத்து வரச்சொன்னார். அவனை அமரவைத்து தலையில் ஒரு தட்டை வைத்தார். தட்டில் எண்ணெ#யை ஊற்றினார்.
""டேய்! உடனே புறப்பட்டு ரதவீதிகளைச் சுற்றி விட்டு மீண்டும் இங்கே வா. தட்டு கீழே விழக் கூடாது. தட்டில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தக்கூடாது. விழுந்தால், உனக்கு தலையிருக்காது,'' என்று எச்சரித்தார்.அவன் பயத்துடன் கிளம்பினான். செல்லும் வழியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கச்சேரி எல்லாம் நடந்தது. அவன் எதன் மீதும் கவனம் செலுத்தவில்லை. ஒட்டுமொத்த கருத்தும் தட்டின் மேலேயே இருந்தது. அது கீழே விழாமல் பவ்யமாக நடந்து மன்னர் முன்னால் வந்து நின்றான்.
""ஓடிப்போ,'' என்றார் ஜனகர். அவன் தலை தப்பித்த மகிழ்ச்சியில் பறந்தான். ஜனகர் அப்போதும் சுகரிடம் பேசவில்லை.
ஆனால், ஒன்றைப் புரிந்து கொண்டார்.
"ஒருவனுக்கு உயிர் போய்விடும் என்ற நிலையில், சுற்றுப்புறத்தில் என்ன நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் கருத்தை தட்டின் மீது செலுத்தினான். அதுபோல, நாமும் மனதை அடக்கி, கடவுளின் மீது மட்டும் கருத்தைச் செலுத்தினால் அகங்காரம் தானே அடங்கும். மீண்டும் ஞானம் பிறக்கும்' என்ற உபதேசத்தைப் பெற்றவராக அங்கிருந்து கிளம்பினார்.

Subscribe to:
Posts (Atom)